27.3 C
Chennai
Thursday, Aug 14, 2025
22 6298afa685414
ஆரோக்கிய உணவு

சுவையான மாசிக் கருவாடு சம்பல்!

சுத்தம் செய்யப்பட்ட சூறை மீனை உப்பு நீரில் வேகவைத்து மண்ணில் புதைத்து வைத்து செய்யப்படுவது.

இதை இலங்கை மக்களின் தேசிய உணவு என்று சொல்லலாம். இதில் சம்பல் செய்து சாப்பிட்டால் இன்னும் சுவையான இருக்கும்.

அந்தவகையில் இலங்கையர்கள் விரும்பி சுவைத்து சாப்பிடக்கூடிய மாசிக்கருவாடு சம்பல் எப்படி எளிய முறையில் செய்யலாம் என்பதை இங்கே பார்ப்போம்.

தேவையான பொருட்கள்
மாசித்தூள் – 3 டேபிள் ஸ்பூன்
மிளகாய் வற்றல் – 4 அல்லது 5
பெரிய வெங்காயம் – 2
தேங்காய் – 1 துண்டு (அல்லது) தேங்காய்த் துருவல் 1 கப்
உப்பு – தேவையான அளவு
கடுகு – 1/2 டீஸ்பூன்
உளுந்து – 1/2 டீஸ்பூன்
கருவேப்பிலை – 1 இணுக்கு

செய்முறை
மாசித் தூளுடன், மிளகாய் வற்றல் மற்றும் தேவையான உப்புக் கலந்து, மிக்ஸியில் கொரகொரப்பாகப் பொடி செய்து கொள்ளவும். மாசிக் கருவாட்டில் ஏற்கனவே உப்பு இருக்கும் என்பதால் சிறிதளவு உப்பு சேர்த்தால் போதும்.

அரைத்த பொடியுடன், தேங்காய் சேர்த்து சில வினாடிகள் அரைத்துவிட்டு, அத்துடன் நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். கொரகொரப்பாக அரைத்தால் போதும்.

சிறிதுகூடத் தண்ணீர் சேர்க்கக்கூடாது. வெங்காயம் சேர்த்து அரைத்தபின் துவையல் பதத்தில் இருக்கும்.

வாணலியில் எண்ணெய் விட்டு, அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்துத் தாளிக்கவும்.

கடுகு வெடித்த பின், அதில் அரைத்து வைத்த மாசிக்கலவையைச் சேர்க்கவும்.

மிதமான தீயில் வைத்து, துவையல் பதத்தில் இருக்கும் மாசிக் கலவை உதிரியாக ஆகும் வரை பொரிக்கவும்.

மிகவும் சுவையான இந்த மாசி சம்பல், ரசம் சாதத்துடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

Related posts

மறந்துபோன மகத்தான மருத்துவ உணவுகள்!

nathan

கவுனி அரிசி உருண்டை

nathan

சுவையான முட்டை பிரட் மசாலா

nathan

அருமையான முட்டை வறுவல்

nathan

அறிந்து கொள்ள..உடலில் ரத்தம் அதிகரிக்க கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள்..!

nathan

உலர் பழங்கள் ஆபத்தை ஏற்படுத்துமா?தெரிஞ்சிக்கங்க…

nathan

வீட்டிலேயே சுவையான அரிசி அப்பளம் செய்யலாம்?

nathan

பருவ பெண்கள் அழகுடன் ஜொலிக்க என்னென்ன சாப்பிடலாம்?

nathan

புற்று நோயை தடுக்கும் இந்த அற்புத தேநீரை வீட்டில் எப்படி தயாரிக்கலாம் என உங்களுக்கு தெரியுமா?

nathan