36.3 C
Chennai
Friday, Aug 28, 2026
ஆரோக்கிய உணவு

சுவையான முட்டை பிரட் மசாலா

முட்டை பிரட் மசாலா என்பது அனைத்து வேளைகளிலும் செய்து சாப்பிடக்கூடிய ஒரு அற்புதமான மற்றும் மிகவும் ஈஸியான ரெசிபி. அதிலும் இரவு நேரத்தில் வீட்டிற்கு சென்ற பின், மிகவும் சோர்வுடன் இருந்தால், இந்த முட்டை பிரட் மசாலா செய்தாலே போதும்.

இதனை அப்படியே சாப்பிடலாம். முக்கியமாக குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். சரி, இப்போது அந்த முட்டை பிரட் மசாலாவை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:

பிரட் – 8 துண்டுகள்
முட்டை – 4
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
சிக்கன் மசாலா தூள் – 1/2 டீஸ்பூன்
தக்காளி – 2 (பொடியாக நறுக்கியது)
பெரிய வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கியது)
கடுகு – 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

முதலில் முட்டையை வேக வைத்து, தோலுரித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு தாளித்துக் கொள்ள வேண்டும்.

பின்பு அதில் வெங்காயம், தக்காளி சேர்த்து நன்கு வதக்கி, பின் மஞ்சள் தூள், மிளகாய் தூள், சிக்கன் மசாலா தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.

அதற்குள் மற்றொரு அடுப்பில் தோசைக் கல்லை வைத்து சூடானதும், பிரட் துண்டுகளின் முனைகளில் உள்ள ப்ரௌன் பகுதியை நீக்கிவிட்டு, தோசைக்கல்லில் போட்டு, நெய் ஊற்றி பொன்னிறமாகவும், மொறுமொறுவென்றும் டோஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

பிறகு பச்சை வாசனை போனதும், வாணலியில் ஒவ்வொரு வேக வைத்த முட்டையையும் ஆறு துண்டுகளாக வெட்டிப் போட்டு, முட்டையில் மசாலா சேர மெதுவாக பிரட்டி விட வேண்டும்.

இறுதியில் டோஸ்ட் செய்து வைத்துள்ள பிரட் துண்டுகளையும் சிறு துண்டுகளாக்கி வாணலியில் சேர்த்து ஒரு முறை பிரட்டி இறக்கினால், முட்டை பிரட் மசாலா ரெடி!!!

Related posts

இளமையாக இருக்க 21 உணவு குறிப்புகள்

nathan

சத்து நிறைந்த சிவப்பு அரிசி – கேழ்வரகு இடியாப்பம்

nathan

அளவுக்கு மேல் எடுத்து கொள்ளாதீங்க! உயிருக்கே உலை வைக்கும் பாதாம்..

nathan

உங்கள் தினசரி உணவில் தயிர் சேர்த்துக் கொள்வதால் ஏற்படும் மாற்றங்கள்…

nathan

ஏன் உங்கள் வியர்வை அதிகமாக துர்நாற்றம் வீசுகிறது என்பதற்கான காரணங்கள்!!!

nathan

40 வயதில் இளமை தோற்றத்தை பெறுவது அவ்வளவு சுலபமல்ல!…

sangika

நெல்லிக்காய் கறிவேப்பிலை ஜூஸ் பயன்கள்

nathan

தாய்ப்பால் சுரக்க நூக்கல் சாப்பிடுங்க

nathan

உங்களுக்கு தெரியுமா வெந்தயத்தில் இவ்வளவு நன்மைகள் இருக்கின்றதா?இத படிங்க!

nathan