23.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
10 foods 15
ஆரோக்கிய உணவு

உணவு வழக்கத்தில் மாற்றங்களை பின்பற்றுவதன் மூலம் உடல் எடையை குறைக்க முடியும்

 

உடலினுள் இருக்கும் ஊட்டச்சத்துக்களின் அளவை குறைக்கவும் செய்கின்றன. உடல் பருமனுக்கும் வழிவகுக்கின்றன. உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் பல்வேறு உடல் நல பிரச்சினைகளுக்கு உடல் பருமன்தான் முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது. உணவு வழக்கத்தில் சில மாற்றங்களை பின்பற்றுவதன் மூலம் உடல் எடையை குறைக்க முடியும். சீரான உடல் எடையை தக்கவைத்துக்கொள்ளவும் முடியும். அதற்கு பழங்கள் கைகொடுக்கும். ஏனெனில் பெரும்பாலான பழங்களில் வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்துகள்தான் மிகுந்திருக்கும். கலோரிகள் குறைவாகவே இருக்கும்.

கலோரிகளை கட்டுப்படுத்தி உடல் எடை குறைப்புக்கு வழிவகை செய்யும் சிறந்த பழங்களின் பட்டியல் இதோ…

1. கிரேப் புரூட்: இது பார்ப்பதற்கு ஆரஞ்சு பழம் போலவே இருக்கும். எடை இழப்புக்கு இந்த பழம் சிறந்த தேர்வாகும். உணவியல் நிபுணர்கள் இதனை ‘சூப்பர் புட்’ என வர்ணிக்கிறார்கள். இது பம்ளிமாஸ், ஆரஞ்சு ஆகிய இரு பழங்களின் கலவையாகும். இந்த இரு பழங்களின் கலப்பினமாக உருவாகி இருக்கும் கிரேப் புருட், வெறும் 40 கலோரிகளை மட்டுமே கொண்டது. தினமும் உட்கொள்ள வேண்டிய வைட்டமின் சி தேவையில், 65 சதவீதத்தை கிரேப் புரூட் வழங்குகிறது. இந்த பழத்தில் கிளைசெமிக் அமிலம் குறைவாகவே உள்ளது. இது ரத்த ஓட்டத்தில் கலக்கும் விதமான தரமான இயற்கை சர்க்கரையை வழங்கக் கூடியது. உடலுக்கு தேவையான ஆற்றலையும் கொடுக்கக்கூடியது. கிரேப் புருட்டில் கிளைசெமிக் குறியீட்டு அளவு குறைவாகவே இருப்பதால் ஆரோக்கியமான உடல் எடையை பராமரிப்பதற்கு உதவும்.

2. ஆப்பிள்: ‘நாள் ஒன்றுக்கு ஒரு ஆப்பிள் உட்கொண்டால் மருத்துவரை தவிர்க்கலாம்’ என்று சொல்வதுண்டு. ஏனெனில் ஆப்பிள் பல்வேறு நோய் அபாயங்களை தடுக்கும் தன்மை கொண்டது. ஆப்பிளில் 110 கலோரிகள் உள்ளன. உடலுக்கு இயற்கையான ஆன்டி ஆக்சிடென்டுகளை வழங்கக்கூடியது. எடை இழப்புக்கு துணை புரியக்கூடியது. ஒரு ஆப்பிள் உட்கொண்டால் ஆரோக்கியமற்ற நொறுக்கு தீனிகளை சாப்பிடும் எண்ணம் 2-3 மணி நேரங்களுக்கு தலைதூக்காது. ஆப்பிளில் இயற்கையான சேர்மங்கள் உள்ளன. அவை உடலில் கொழுப்பின் அளவை குறைக்கின்றன.

3. பேஷன் ப்ரூட்: இது எடை இழப்புக்கு உதவுவதோடு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் திறனும் கொண்டது. இதில் வைட்டமின் சி, ஏ, இரும்பு மற்றும் பொட்டாசியம் போன்றவை நிரம்பியுள்ளன. 100 கலோரிகளே கொண்டது. செரிமான அமைப்புக்கும் நன்மை பயக்கும். ரத்த ஓட்டம் சீராக நடைபெறுவதற்கும் துணைபுரியும். ரத்த அழுத்த அபாயத்தையும் குறைக்கும். அதிக எடை கொண்ட ஆண்கள் இந்த பழத்தை கண்டிப்பாக சாப்பிடுவதற்கு முயற்சிக்க வேண்டும்.

4. பெர்ரி பழங்கள்: பிளாக் பெர்ரி மற்றும் புளூ பெர்ரி பழங்கள் எடை இழப்புக்கு வித்திடும் சிறந்த பழங்களாக கருதப்படுகின்றன. அரை கப் பெர்ரி பழங்கள் சாப்பிட்டால் 42 கலோரிகளே கிடைக்கும். உடலுக்கு தேவையான வைட்டமின் சி மற்றும் மாங்கனீசு அளவுகளில் 12 சதவீதத்தை வழங்கக்கூடியது.

ஸ்ட்ராபெர்ரி பழத்தில் 50 கலோரிகள் மட்டுமே இருப்பதால், எடை இழப்புக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சீரான செரிமானத்திற்கு தேவையான சுமார் 3 கிராம் நார்ச்சத்தும் இதில் உள்ளது. 250 கிராம் ஸ்ட்ராபெர்ரி சாப்பிட்டால் வைட்டமின் சி மற்றும் மாங்கனீசு தேவையில் 30 சதவீதத்தை பூர்த்தி செய்துவிடும்.

5. கிவி பழம்: கவர்ச்சிகரமாக காட்சியளிக்கும் இந்த பழம் பக்கவிளைவுகள் ஏதுமின்றி எடை இழப்புக்கு வழிவகுக்கும். இதில் வைட்டமின் சி, ஈ, போலேட், நார்ச்சத்து உள்ளிட்ட அத்தியாவசியமான ஊட்டச்சத்துகள் அடர்த்தியாக நிரம்பியுள்ளன. கிவி ரத்த அழுத்த பிரச்சினைக்கும் தீர்வு காணக்கூடியது. இடுப்பை சுற்றியுள்ள கொழுப்பை குறைக்கக்கூடியது. ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்காமல் விரைவாக எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு கிவி பழம் சிறந்த தேர்வாக அமையும்.

6. முலாம்பழம்: இதில் கலோரி மிகவும் குறைவு. முலாம் பழம் வகையை சேர்ந்த தர்பூசணியில் 40 முதல் 60 கலோரிகளே உள்ளன. உணவில் அதிக கலோரிகளை தவிர்க்க விரும்புபவர்களுக்கு இது சிறந்த தேர்வாகவும். கோடை காலத்திற்கு ஏற்ற பழமாகவும் விளங்குகிறது. இதில் அதிக பொட்டாசியம், நார்ச்சத்து மற்றும் ஆன்டிஆக்சிடென்டுகள் உள்ளன. முலாம்பழத்தில் வைட்டமின் சி, பீட்டா கரோட்டின் மற்றும் லைகோபீன் ஆகியவையும் உள்ளன.

Related posts

30 நாட்கள் இஞ்சியை எடுத்துக்கொண்டால் நடக்கும் அற்புதம்-தெரிஞ்சிக்கங்க…

nathan

நீங்கள் காலை உணவு சாப்பிடாதவர்களா அப்படின்னா இதை படிங்க!

nathan

உலர் திராட்சையில் உடலுக்கு வலிமை தரும் சத்துக்கள் நிறைந்துள்ளன.

nathan

நீங்க தேங்காய்ப்பால் பிரியரா? பக்க விளைவுகள் ஏற்படும் தெரியுமா?

nathan

சூப்பர் டிப்ஸ்! எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் மிளகு ரசம்

nathan

சூப்பர் டிப்ஸ்! உடல் சோம்பல், வாய் துர்நாற்றத்தை போக்கும் மருத்துவ குணம் கொண்ட மிளகு

nathan

நீங்களும் முயற்சி செய்யுங்கள் ! உடலில் தேங்கியிருக்கும் கொழுப்புக்களை கரைக்க உதவும் அற்புதமான ஆரோக்கிய பானங்கள்!!!

nathan

கொடுக்காப்புளி யின் மருத்துவ பயன்கள்

nathan

உங்களுக்கு தெரியுமா இந்த உணவுகள் உங்களது பாலுணர்ச்சியை அழிக்கும் ?இதை படிங்க…

nathan