33.7 C
Chennai
Saturday, Oct 5, 2024
ஆரோக்கிய உணவுஆரோக்கியம்

தாய்ப்பால் சுரக்க நூக்கல் சாப்பிடுங்க

பொதுவாக காய்கறி வகைகளில் பல காய்கள் வேக வைக்காமல் எளிமையான வகையில் சாப்பிடக் கூடியவையாக இருக்கும்.
ஆனால் நூக்கல் சற்று கடினமான காயாகும். எனவே இதனை நன்கு வேகவைத்து தான் சாப்பிட வேண்டும்.
இதற்கு நூற்கோல் என மற்றொரு பெயரும் உண்டு. இதில் வைட்டமின்களும், புரத சத்தும் நிறைந்துள்ளது.
இந்த காயை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது, நம் உடல் நலத்திற்கு நன்மை அளிக்கும்.
முற்றிய நூக்கலை வாங்குவதை விட பிஞ்சு நூக்கலை வாங்குவதே சிறந்தது.turnip_002

நூக்கல் காயின் பயன்கள்
குழந்தை பெற்ற பெண்கள் பிஞ்சு நூக்கலை மூன்று நாட்கள் தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் தாய்ப்பால் நன்றாக சுரக்கும்.
இது வயிற்று கோளாறுகளை நீக்கும் தன்மைக் கொண்டது.
ஜீரண சக்தியை அதிகரிக்க உதவும்.
குடல் நாளங்களை உறுதிப்படுத்தும் எலும்புகளை உறுதியாக்கும்.
நூக்கல் காயை அடிக்கடி உணவில் சேர்த்து கொண்டால் நரம்பு தளர்ச்சி ஏற்படாது.
நூக்கல் ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களை பெருக்கும்.

turnip_003நூக்கல் சூப்
முதலில் சீஸை(Cheese) துருவிக் கொள்ளவும்.
வெங்காயத்தாளை நறுக்கிக் கொள்ளவும்.
நூக்கல்லை துருவி வேக வைத்துக் கொள்ள வேண்டும்.
வெண்ணெய்யை உருக்கி வெங்காயத்தாள்களை அதில் போட்டு வதக்கவும்.
பிறகு தண்ணீர் சேர்த்து பத்து நிமிடங்கள் வரை கொதிக்க வைக்கவும்.
இறுதியில் சூடான பால், வேகவைத்த நூக்கல், சீஸ், மிளகுத்தூள் ஆகியவற்றைச் சேர்த்து இரண்டு நிமிடம் வரை கொதிக்க விட்டு இறக்கினால் நூக்கல் சூப் ரெடி
turnip_004பயன்கள்
ரத்தச் சோகையை நீக்கும்.
சர்க்கரை நோயாளிகளுக்கு இது ஒரு சிறந்த மருந்து.

turnip_005நூக்கல் பொரியல்
பருப்புகளை நன்றாகக் கழுவிவிட்டு,ஒரு வாணலியில் போட்டு அது வேகும் அளவை விட சிறிது கூடுதலாக தண்ணீர் விட்டு அடுப்பில் ஏற்றவும்.
சிறிது மஞ்சள்தூள்,பெருங்காயம் சேர்த்து மூடி வேக வைக்கவும்.
வெங்காயம்,பச்சைமிளகாய்,நூக்கல் இவற்றை விருப்பமான வடிவத்தில் நறுக்கி வைக்கவும்.
பருப்பு பாதி வெந்தபிறகு நறுக்கி வைத்துள்ளவற்றை அதனுடன் சேர்த்து, தேவையான உப்பும் சேர்த்து வேக வைக்கவும்.
காய் வெந்துகொண்டிருக்கும்போதே மிளகாய்த்தூளை சேர்த்துக் கிளறி விடவும்.
காய் வெந்து, நீர் வற்றியதும் தேங்காய்ப் பூ, கொத்தமல்லி இலை சேர்த்துக் கிளறிவிட்டு இறக்கவும்.
இப்போது ஒரு தாளிக்கும் கரண்டியில் சிறிது எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் தாளிக்க வேண்டியவற்றைத் தாளித்து கொட்டினால் நூக்கல் பொரியல் தயார்.
பயன்கள்
புற்றுநோயை தடுக்க வல்லது.
உடல் எடையை குறைக்க உதவும்.

Related posts

ஆரஞ்சை விட சிவப்பு மிளகாய் நல்லது? தெரிந்துகொள்வோமா?

nathan

இந்த காய்கறிகளின் தோல்சீவி சமைக்காதீங்க ?ஏன் தெரியுமா?..

nathan

பெண்களுக்கு, குழந்தைகளுக்கு அதீத சத்துக்கள் நிறைந்த உணவு வெல்லமாகும்

nathan

தெரிஞ்சிக்கங்க… இஞ்சியில் நிறைந்துள்ள நன்மைகள்!!!

nathan

தினமும் காலையில் நெய்யை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் அற்புதம் நடக்குமாம்!

nathan

உங்களுக்கு இரத்த அழுத்தம் இருக்கா…? அப்ப இத படியுங்க…

nathan

வெளியிட்ட தகவல்.. !பரவும் கிருமிகளை அழிக்க பயன்படும் செம்பு பாத்திரம்..

nathan

முடி உதிர்வைத் தடுக்கும் 8 உணவுகள்!

nathan

வயிற்றுப் புண்ணுக்கு சிறந்தது தேங்காய் பால்

nathan