25.9 C
Chennai
Sunday, Feb 23, 2025
dd8
ஆரோக்கிய உணவு

உடலில் சதை போட்டு எடையை விரைவாக அதிகரிக்க…. அற்புதமான எளிய தீர்வு

உடல் பருமனாக இருப்பவர்கள் எப்படி உடல் எடையை குறைத்து ஒல்லியாக மாற மெனக்கெடுவார்கள். அதே போல போல மிகவும் ஒல்லியாக இருப்பவர்கள் உடலில் சதை போட மாட்டேங்குதே, குண்டாக என்ன வழி என தேடுவார்கள். விரைவில் உடல் எடையை கூட்ட சில எளிமையான வழிகள் உள்ளன.

வேர்க்கடலை

உடல் எடையைக் கூட்டுவதிலும், அழகான சதைப்பிடிப்பான உடலை வளர்க்கவும் மிக முக்கியமான உணவு வேர்க்கடலை ஆகும். நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் இந்த வேர்க்கடலையை உண்ண வேண்டும்.

பால்

இதுக் கொழுப்புச் சத்து அதிகம் மிகுந்த உணவு என்பதால் இதனை எடுத்துக் கொள்ளலாம். காலை மற்றும் இரவு கட்டாயம் ஒரு டம்ளர் பால் குடிக்க வேண்டும். குறிப்பாக சுடவைத்த பாலில் சர்க்கரை மட்டுமே சேர்க்க வேண்டும். திருமணத்திற்கு தயாராகும் பெண்கள் பாலை அதிகம் பருகுவதன் மூலம் நல்ல புஷ்டியான உடலமைப்பைப் பெருவதுடன், உடலில் பொலிவும் ஏற்படும்.

தயிர்

வாரத்தில் ஏழு நாட்களில் குறைந்தது 4 நாட்களாவது மதிய உணவில் தயிர் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். இதன்மூலம் உடல் எடை விரைவாக அதிகரிக்கும்.

வாழைப்பழம்

இது அதிகக் கலோரிகள் கொண்ட ஓர் உணவாகும். வாழைப்பழத்தை அடிக்கடி சாப்பிட்டால் உடல் எடை அதிகரிப்பதை உணரலாம்.

உளுந்து

என்ன தான் இட்லி, தோசை என அதிகம் உணவில் சேர்த்துக் கொண்டாலும், உளுந்தை ஊறவைத்து பச்சையாக சாப்பிடும் பொழுது நேரடியாக நமது உடலுக்கு சத்துக்கள் சென்றடைவதனால், உடல் எடை விரைவாக அதிகரிக்கும்.

Related posts

தெரிஞ்சிக்கங்க…தயிரை உணவில் சேர்த்து கொள்வதன் மூலம் கிடைக்கும் நன்மைகள்!!!

nathan

ப்ளம்ஸ் பழத்தை தங்கள் டயட்டில் நிச்சயம் சேர்த்துக் கொள்ளலாம்..tips .. tips..

nathan

உடல் எடையை குறைக்க உதவும் கினுவா வெஜிடபிள் சாலட்! இதை முயன்று பாருங்கள்

nathan

தெரிஞ்சிக்கங்க…பசியின்மையை போக்கும் சிறந்த உணவுகள்

nathan

காபி ஆரோக்கியமானதா?

nathan

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பாகற்காய்

nathan

கொழுப்பை கரைக்கும் வாழை தண்டு தயிர் பச்சடி

nathan

ஆரோக்கியம் காக்கும் ஆவாரம்பூ கஷாயத்தின் மருத்துவ பயன்கள்…!!தெரிந்துகொள்வோமா?

nathan

சூப்பர் டிப்ஸ் அதிக பயன்களை கொண்ட திப்பிலி எதற்கு பயன்படுகிறது தெரியுமா….?

nathan