ஆரோக்கிய உணவு

இரவு தூங்கும் முன் 5 உலர் திராட்சை சாப்பிடுங்க! சூப்பர் டிப்ஸ்

பிரியாணி, பாயசம் ,ஸ்வீட்கள் உள்ளிட்ட பல உணவுகளில் உலர் திராட்சையை அழகிற்காகவும், சுவைக்காகவும் நாம் பயன்படுத்துவதுண்டு. ஆனால் நம்மில் பலரும் இந்த உலர்ந்த திராட்சையின் மருத்துவ குணங்களை பற்றி அறிந்திருக்க மாட்டோம்.

இதில் எக்கச்சக்க நன்மைகள் அடங்கியுள்ளது. அதிலும் உலர் திராட்சையை அசிடிட்டி பிரச்சனை உள்ளவர்கள் அல்லது தூக்கமின்மை பிரச்சனையைக் கொண்டவர்கள் சாப்பிடுவது நல்லது.

மேலும்  படுக்கைக்கு முன் உலர் திராட்சையை சாப்பிடுவது நல்லது. இது இன்னும் பல நன்மைகளை அள்ளித்தருகின்றது. தற்போது  அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.

 

  •  பலவீனமான கண்களைக் கொண்டவர்கள் உலர் திராட்சையை சாப்பிடுவது மிகவும் நல்லது. அதற்கு இரவில் உலர் திராட்சையை அப்படியே சாப்பிடலாம் அல்லது பாலுடன் சேர்த்து சாப்பிடலாம்.
  •  உலர் திராட்சை இரத்த நாளங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகின்றன. இது தவிர, இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், இரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் உதவுகிறது.
  • உலர் திராட்சை குடல் இயக்கத்தை எளிதாக்க உதவும். இவை குடலியக்கத்திற்கு நன்மை அளிப்பது மட்டுமின்றி, உடலில் மலத்தை அதிகமாக சேர்த்து, உடலில் இருந்து எளிதில் வெளியேற்ற உதவுகிறது.
  •  உலர் திராட்சையை சாப்பிடுவது எலும்புகளுக்கு மிகவும் நல்லது. அதுவும் உலர் திராட்சையை பாலில் போட்டு கொதிக்க வைத்து சாப்பிடுவதன் மூலம், அதில் உள்ள சத்துக்களை உடலால் எளிதில் உறிஞ்சுவதற்கு உதவுகிறது. அதோடு, இது கால்சியம் மற்றும் எலும்புகளின் அடர்த்தியை அதிகரிக்கும் தாதுக்களை ஊக்குவிக்கிறது. இதன் மூலம் எலும்புகளை வலிமையாக்குகிறது.
  • உலர் திராட்சையை இரவு தூங்கும் போது சாப்பிட்டால், அது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் மற்றும் பசியைத் தடுக்கும். இதன் மூலம் தேவையற்ற உணவுகளின் மீதான நாட்டத்தைக் குறைத்து, உடல் எடை அதிகரிப்பதைத் தடுக்கிறது.
  • ஒருவரது நல்ல தூக்கத்திற்கு ஆன்டி-ஆக்சிடன்ட் உணவுகள் மிகவும் அவசியம். ஏனெனில் ஆன்டி-ஆக்சிடன்ட்டுகள் நல்ல தரமான தூக்கத்தில் நேரடி விளைவைக் கொண்டிருப்பதோடு, அதை மேம்படுத்தவும் உதவுகின்றன.
  •   உலர் திராட்சை எடை இழப்பிற்கு பெரிதும் உதவி புரியும். ஏனெனில் இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. அதனால் தான் இதை சிறிதளவு சாப்பிட்டாலே வயிறு நிறைந்த உணர்வு எழுகிறது
  •  உலர் திராட்சை உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது மற்றும் இதய நோய், கீல்வாதம், சர்க்கரை நோய் மற்றும் அல்சைமர் நோய்களுக்கு எதிராக எதிர்த்துப் போராடும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button