ஆரோக்கியம் குறிப்புகள்

ஜலதோஷம், சளி, காய்ச்சல் என பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பிரச்னைகளிலிருந்து நம்மைக் காத்துக்கொள்ள

பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பிரச்னைகளிலிருந்து நம்மைக் காத்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும் என்று சித்த மருத்துவர் விக்ரம்குமாரிடம் கேட்டோம். அவர் சில எளிய வழிமுறைகளைச் சொன்னார்.

பருவநிலை

“பருவமழை தப்பிப் பெய்வதால் கடந்த சில ஆண்டுகளாகவே நோய்கள் அதிகமாகப் பாதிக்கின்றன. மேலும், போதுமான அளவு நோய் எதிர்ப்பு சக்தி இல்லாததால் இதுபோன்ற சூழல்களில் நோய்கள் எளிதில் தாக்குகின்றன. குறிப்பாக, குழந்தைகள் மற்றும் முதியோரை தொற்றுநோய்கள் பாதிக்க வாய்ப்பு உள்ளதால் அவர்கள் விழிப்பாக இருக்க வேண்டும்.
hfgjg
காய்ச்சல் போன்ற பாதிப்புகள் வராமலிருக்க மூன்று நாள்கள் காலை, மாலை 30 மி.லி அளவு நிலவேம்புக் குடிநீர் அருந்தலாம். இதை வெறும் வயிற்றில் சாப்பிடுவதைவிட ஏதாவது உணவு உண்டபிறகு அருந்துவது நல்லது. ஒருவேளை காய்ச்சல் பாதித்தாலும் நிலவேம்புக் குடிநீர் அருந்துவதைத் தொடரலாம். காய்ச்சல் எந்தவகை என்பதை அறிந்துகொண்டு சிகிச்சையைத் தொடர்வது சிறப்பு.
நிலவேம்புக் குடிநீர்

சளி, ஜலதோஷம் போன்ற பாதிப்புகள் வராமலிருக்க மிளகு ரசம், கொள்ளு ரசம் அருந்தலாம். பாலுடன் மஞ்சள்தூள், மிளகுத்தூள் சேர்த்து அருந்தலாம். ஆடாதொடையில் மணப்பாகு செய்தோ, ஆடாதொடை மூலிகையை நீர் விட்டுக் கொதிக்க வைத்தோ அருந்துவதும் சளித்தொந்தரவுகளில் இருந்து காக்க உதவும். இவை தவிர தூதுவளை சட்னி, துவையல், இஞ்சித் துவையல் சேர்த்துக் கொள்ளலாம்.

இரவு நேரங்களில் தயிர், கீரை மற்றும் குளிர்ச்சியூட்டும் உணவுகளைச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். அதேபோல், உணவுகளைக் குளிர்சாதனப் பெட்டியில் வைத்து எடுத்து சாப்பிடுவதை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. பகல் வேளைகளிலும்கூட கூல்டிரிங்க்ஸ் அருந்தாமலிருப்பது நல்லது.
fjgfhg
ஆடாதொடை

நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தால் நோய்கள் தாக்கும் என்பதால் எந்தவேளை உணவையும் சாப்பிடாமல் தவிர்க்க வேண்டாம். இருமல் வரத்தொடங்கியதுமே சித்த மருந்துக்கடைகளில் கிடைக்கும் தாளிசாதி வடகத்தை வாயில் போட்டுக்கொண்டு தற்காத்துக் கொள்ளலாம். வெற்றிலை, மிளகை வாயில் போட்டு மெல்வதும் நல்லது. கண் கோளாறுகள் வந்தால் நந்தியாவட்டைப் பூக்களைக் கண்களின்மீது வைத்துக் கட்டினால் அதிலிருந்து விடுபடலாம். படிகாரக்கல்லை அதிக அளவு நீரில் கரைத்து கண்களைக் கழுவலாம். கண்ணில் கட்டி வந்தால் சங்கு பற்பம் என்ற சித்த மருந்தை பன்னீரில் குழைத்துப் பூசலாம்; கட்டி சீக்கிரம் கரைந்துவிடும்” என்கிறார் சித்த மருத்துவர் விக்ரம்குமார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button