32.2 C
Chennai
Monday, May 20, 2024
f2608dda d539 47a2 856f 2a5b8674f4b1 S secvpf
ஆரோக்கியம் குறிப்புகள்

ஹை-ஹீல்ஸ் ஆபத்து

பெண்களுக்கு அழகான தோற்றத்தை தரக்கூடிய பொருட்களில் ஒன்று ஹை-ஹீல்ஸ். ஆனாலும் 50 சதவீத ஹை-ஹீல்ஸ் பெண்களுக்கு பாதவலி, சுளுக்கு, மன இறுக்கம் போன்றவற்றை ஏற்படுத்துவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நீண்ட காலத்துக்கு ஹை-ஹீல்ஸ் அணிவதால் சுளுக்கு, கால் ஆணிகள், கொப்புளங்கள் தவிர குதிகாலின் பின்பகுதி பெரிதாகி துருத்திக்கொண்டு சிவப்பாகவோ அல்லது வீங்கியோ இருக்கலாம்.

எலும்புகளில் கால்சியம் அளவு குறைந்து, விரிசல்கள், முறிவுகள் ஏற்படலாம். நரம்புகளை கிள்ளும் உணர்வால் அதிகபட்சவலி ஏற்படலாம். காலை உயர்த்திய நிலையிலேயே வைத்திருப்பது, குறுகிய கால்தசைநார் வலியை உருவாக்கலாம். இதனால் தட்டையான காலணிகளை அணிய முடியாமல் போகலாம். முதுகெலும்பு நகர்வு, அதன் மீது அதிகபட்ச அழுத்தம் அல்லது மூட்டிணைப்பு இடம் நகர்வு போன்ற உடல் தோற்ற பிரச்சினைகளுக்கு ஹை-ஹீல்ஸ் காரணமாக அமைகிறது.

தொடர்ந்து ஹை-ஹீல்ஸ் அணிவதால் பல்வேறு பிரச்சினைகளும் ஏற்படுகின்றன. ஹை-ஹீல்சுக்குள் காலைத்திணிப்பதால் ஒரே நாளில் பாதம் சுமார் 455 கிலோ சக்தியை உள்வாங்குகிறது. பாதத்தில் இருந்து அதிகப்படி ரத்தம் வெளியேறி வீக்கம் உருவாகிறது. இந்த வீக்கத்தை குறைக்க ஒரு நிமிடத்துக்கு ஒருமுறை குளிர்ந்த நீரையும், சுடு தண்ணீரையும் மாற்றி, மாற்றி ஊற்றவும். கடைசியாக குளிர்ந்த நீர் ஊற்றி காயவைக்கவும். சில பயிற்சிகளையும் செய்தால் கால்வலியில் இருந்து மீளலாம்.

காலில் வலி, வீக்கம் அதிகமானால் காலணிகளை கழற்றிவிட்டு அமருங்கள். சிறிய பந்தின் மீது காலை வைத்து உருட்ட வேண்டும். அடுத்த காலுக்கு மாற்றி அதையே செய்யவும். கோலிக் குண்டுகளை தரையில் சிதறச்செய்து கால்விரல்களால் ஒவ்வொன்றாக பற்றி எடுக்கவும். கால்விரல்களை கீழ்நோக்கி நீட்டவும். பின்னர் மேல்நோக்கி வளையுங்கள். இதை தலா 6 முறை செய்தால் நல்லது. அதே போல் ஹை-ஹீல்ஸ் அணிந்து வாகனம் ஓட்டக்கூடாது. முழுக்கட்டுப்பாடு கிடைக்காது.

காலணியின் பின்புறமும் சேதம் அடையும். கூடியவரை ஹீஸ்ஸ் உபயோகிக்காமல் இருப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது. மீறி உபயோகிக்க வேண்டும் என்றால் மேற்சொன்ன பயிற்சியை தவறாது செய்து வந்தால் பாதிப்பில் இருந்து ஓரளவு பாதங்களை பாதுகாத்துக்கொள்ளலாம்.

f2608dda d539 47a2 856f 2a5b8674f4b1 S secvpf

Related posts

இந்த 6 ராசிக்காரங்கள கல்யாணம் பண்றவங்க வாழ்க்கை சூப்பரா இருக்குமாம்… தெரிந்துகொள்வோமா?

nathan

வெந்நீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

nathan

இந்த 5 ராசிக்காரங்களுக்கு வாழ்க்கையில எல்லாமே போட்டிதானாம்…

nathan

பெண்களின் மார்பளவில் தங்களை அறியாமல் செய்யும் சிறுசிறு தவறுகள் கூட, சில தீய தாக்கங்கள் உண்டாக காரணிய…

nathan

பெண்கள் சரியான பிரா அணியாததால் ஏற்படும் பிரச்சனைகள்

nathan

காலில் தங்க கொலுசு போடக்கூடாது – பெண்களே தெரிஞ்சிக்கங்க…

nathan

தெரிஞ்சிக்கங்க… மிகவும் ஆரோக்கியமற்ற சில காலை உணவுகள்!!!

nathan

6 மாதக் குழந்தைக்குத் தாய்ப்பாலுடன் வேறு என்ன நிரப்பு உணவுகள் கொடுக்கலாம்?

nathan

பாகற்காய் விதையில் உள்ள அற்புத பலன்கள்.!உங்களுக்கு தெரியுமா..

nathan