ஆரோக்கிய உணவு

சூப்பரான கம்பு புட்டு

நவதானியங்களில் ஒன்று தான் கம்பு. பலருக்கு கம்பு கொண்டு கஞ்சி தான் செய்யத் தெரியும். ஆனால் கம்பு கொண்டு அட்டகாசமான சுவையில் புட்டு செய்யலாம் என்பது தெரியுமா? ஆம், கம்பு புட்டு செய்வது மிகவும் ஈஸி மட்டுமின்றி, குழந்தைகள் முதல் பெரியவர் வரை விரும்பி சாப்பிடும் வண்ணம் இருக்கும்.

இங்கு அந்த கம்பு புட்டு எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து பாருங்கள்.

Kambu Puttu Recipe
தேவையான பொருட்கள்:

கம்பு – 1/4 கப்
சர்க்கரை – 1/2 டம்ளர்
தேங்காய் – 1/2 மூடி (துருவியது)
ஏலக்காய் – 4
உப்பு – சிறிது
நெய் – 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

முதலில் கம்பை மிக்ஸியில் போட்டு ஒருமுறை அடித்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் அதனை ஒருமுறை புடைத்து பின், அதனை ஒரு வாணலியில் போட்டு, அடுப்பில் வைத்து, நல்ல மணம் வரும் வரை வறுக்க வேண்டும்.

பின்பு அதனை மிக்ஸியில் போட்டு மாவு போல் அரைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு சிறிது நீரில் உப்பை போட்டு கரைத்து, கம்பு மாவில் தெளித்து பிசைய வேண்டும். அதிலும் கொழுக்கட்டை போன்று பிடித்தால் நிற்கும் அளவு தண்ணீர் தெளித்து பிசைய வேண்டும்.

பின் அதனை இட்லி பாத்திரத்தில் போட்டு, வேக வைத்து இறக்கி, சூடாக இருக்கும் போதே துருவிய தேங்காய், சர்க்கரை, நெய், ஏலக்காய் பொடி ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து பரிமாறினால், கம்பு புட்டு ரெடி!!!

Related posts

உடலில் உள்ள கொழுப்பை கரைக்கும் முட்டைகோஸ் சூப்

nathan

ஆரோக்கியத்தை பேண உருளைக்கிழங்கு!

nathan

வல்லாரையில் உள்ள நன்மைகள் என்னவென்று தெரியுமா?

nathan

சத்து மாவு கஞ்சி

nathan

ஆண்களே தெரிஞ்சிக்கங்க…ஆண்கள் மாம்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!

nathan

உங்களுக்கு தெரியுமா வல்லாரையின் விவரமான மருத்துவப் பயன்கள்

nathan

வெள்ளை அரிசி, கைக்குத்தல் அரிசி, பாஸ்மதி அரிசி – மூன்றில் எது நல்லது??

nathan

சுவையான மணத்தக்காளி வத்தல் குழம்பு

nathan

எச்சரிக்கை தேங்காய் எண்ணெய் விஷத்தை விட மோசமானது! ஆராய்ச்சியாளர்கள் கூறும் தகவல்கள்!

nathan