ஆரோக்கியம் குறிப்புகள்

குழந்தைகளின் நகம் கடிக்கும் பழக்கத்தை மறக்க செய்வது எப்படி?தெரிஞ்சிக்கங்க…

குழந்தைகளுக்கு இருக்கும் தீய பழக்கங்களில் ஒன்று தான் இந்த நகம் கடிக்கும் பழக்கம். எத்தனை தடவை தான் சொன்னாலும், குழந்தைகள் இந்த நகம் கடிக்கும் பழக்கத்தை விடமாட்டார்கள். நகம் கடிக்கும் பழக்கமானது குழந்தைகளுக்கு பல்வேறு காரணங்களால் வருகிறது. நகம் கடிக்கும் பழக்கம் குழந்தைகளுக்கு ஏன் வருகிறது, அதிலிருந்து அவர்களை மீட்பது எப்படி என்பது பற்றி இந்த பகுதியில் காணலாம்.

நகம் கடிக்கும் பழக்கம் :

நகம் கடிக்கும் பழக்கத்தை மாற்ற நவீன மருத்துவத்தில் கூட தீர்வு இல்லாமல் போய்விட்டது. இந்த நகம் கடிக்கும் பழக்கமானது பல காரணங்களால் குழந்தைக்கு வருகிறது.

காரணங்கள் :

கை சூப்புதல், வெட்கம் கொள்ளும் தன்மை, மன சோர்வு, கவலை, வேலை இல்லாமல் சும்மா இருப்பது, தனிமையில் இருப்பது, வீட்டில் உள்ள நபர்கள் அல்லது பள்ளியில் சக மாணவர்களிடம் இருந்து கற்றுக்கொள்வது, நகத்தை பெற்றோர்கள் குறிப்பிட்ட இடைவெளிகளில் வெட்டிவிடாமல் இருப்பது போன்றவைகளும் குழந்தைகள் நகம் கடிக்கும் பழக்கத்தை கொண்டிருக்க காரணமாக உள்ளது.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

திட்ட வேண்டாம்!

நகம் கடிக்கும் பழக்கம் இருப்பதற்காக உங்களது குழந்தைகளை நீங்கள் திட்டவோ அடிக்கவோ வேண்டாம். அவர்களிடம் அன்பாக, ஏன் இவ்வாறு செய்கிறாய்.. எதனால் இப்படி செய்கிறாய் என்று கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். நீங்கள் மிரட்டுவதால் இது அதிமாக தான் செய்யும்.

தீமைகளை விளக்குங்கள்

நகம் கடிக்கும் பழக்கத்தினால் உண்டாகும் தீமைகளை பற்றி உங்களது குழந்தைகளிடம் விளக்கி கூறுங்கள். சமூகத்தில் உள்ள பிறர் நகம் கடிக்கும் பழக்கம் உள்ளவர்களை எப்படி பார்க்கிறார்கள் என்பது பற்றி கூறுங்கள்.

எதனால் என்பதை கண்காணிக்கவும்!

பள்ளியில் பாடம் கடினமாக இருந்தால் இந்த பழக்கம் உண்டாகும். பிற குழந்தைகளை பார்த்தும் உங்களது குழந்தை இதனை கற்றுக்கொள்ளலாம். பசியாக இருக்கும் போது, தனிமையில் இருக்கும் போதும் கூட இது போன்ற பழக்கங்கள் ஏற்படலாம். இதனை ஆசிரியர் அல்லது குழந்தையின் மீது அக்கறை உள்ள ஏதேனும் ஒரு நபரின் வாயிலாக கண்டறிந்து தீர்வு காணுங்கள்.

பாவைக்காய் ஜீஸ்

பாவைக்காய் ஜீஸ் மற்றும் வேப்ப எண்ணெய் பழங்காலமாக இந்த பழக்கத்திற்காக உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது. குழந்தை தூங்கும் போது கையில் இதில் ஏதாவது ஒன்றை தடவிவிடுங்கள். இவ்வாறு செய்வதால் கசப்பு தன்மை காரணமாக குழந்தை நகத்தை வாயில் வைக்காது. நாளடைவில் இந்த பழக்கமும் மறைந்துவிடும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button