36.3 C
Chennai
Friday, Aug 28, 2026
ஆரோக்கியம் குறிப்புகள்

ஒரு நாளைக்கு ஒரு டீஸ்பூன் எடுத்து வந்தால், இது உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்களை மூன்று மடங்கு வேகமாக குறையும்….

சீரகம் எகிப்துக்கு சொந்தமானது. ஆனால் ஆயிரம் ஆண்டுகளாக மத்திய கிழக்கு, இந்தியா, சீனா மற்றும் மத்திய தரை நாடுகளில் பயிரிடப்பட்டுள்ளது. நமது வரலாற்றில், சீரகம் உணவு மற்றும் மருத்துவங்களில் முக்கிய பங்கை வகித்து வருகிறது. புதிய ஆய்வு ஒன்றில், சீரகம் உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்புக்களைக் கரைக்க உதவுவதாக தெரிய வந்துள்ளது. அதிலும் ஒரு நாளைக்கு ஒரு டீஸ்பூன் எடுத்து வந்தால், இது உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்களை மூன்று மடங்கு வேகமாக குறைக்க உதவும்.

ஈரான் ஆய்வு ஈரானின் ஷாஹித் சதோகி மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் உள்ள ஆராய்ச்சியாளர்கள், தோராயமாக 88 எடை கொண்ட அல்லது உடல் பருமனான பெண்களை 2 குழுக்களாக பிரித்தனர். 3 மாதங்களாக இந்த 2 குழுக்களுக்கும் ஊட்டச்சத்து ஆலோசனைகள் தரப்பட்டது மற்றும் அவர்கள் தினமும் 500-க்கும் குறைவாக கலோரிகளை எடுத்து வந்தனர்.

சீரகம் உட்கொண்ட குழுவினர் ஒரு குழுவினர் தினமும் 3 கிராம் அளவில், அதாவது 1 டீஸ்பூனுக்கும் குறைவான அளவில் சீரகப் பொடியை, 5 அவுன்ஸ் தயிருடன் சேர்த்து சாப்பிட்டு வந்தனர். 3 மாதத்திற்கு பின், இரண்டு குழுக்களில் உள்ளோரின் எடையைப் பார்க்கும் போது, அதில் சீரகத்தை அன்றாடம் எடுத்த குழுவினர், சீரகம் உட்கொள்ளாத குழுவினரை விட 3 பவுண்ட் அதிகமாக எடையைக் குறைத்திருப்பது தெரிய வந்தது. ஆகவே நீங்கள் உங்கள் உடல் எடையைக் குறைக்க நினைத்தால், அன்றாடம் சீரகத்தை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இப்போது சீரகத்தினால் கிடைக்கும் இதர ஆரோக்கிய நன்மைகள் குறித்துக் காண்போம்.

செரிமானத்திற்கு உதவும்
சீரகம் செரிமானத்திற்கு நல்லது மற்றும் செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வளிக்கக்கூடியது. நல்ல நறுமணத்தைக் கொண்ட சீரகம், நமது வாயில் உள்ள எச்சில் சுரப்பியை சிறப்பாக செயல்படச் செய்து, செரிமானத்திற்கு உதவியாக இருக்கும். அடுத்ததாக, சீரகத்தில் உள்ள தைமோல், சுரப்பிகளைத் தூண்டிவிட்டு, அமிலங்கள், பித்த நீர், நொதிகள் போன்ற செரிமானத்திற்கு தேவையானவற்றை உற்பத்தி செய்யச் செய்து, உணவுகளை முற்றிலும் செரிக்கச் செய்கிறது. மேலும் சீரகம் வாய்வுத் தொல்லையில் இருந்து விடுவிக்கும். இல் உள்ள மக்னீசியம் மற்றும் சோடியம், செரிமான மண்டலத்தின் செயல்பாட்டை ஊக்குவிக்கும். வயிற்று வலி இருக்கும் போது சுடுநீரில் சீரகத்தைப் போட்டு குடித்தால், வயிற்று வலியில் இருந்து விடுபடலாம்.

சர்க்கரை நோயைத் தடுக்கும்
மசாலாப் பொருட்களுள் ஒன்றான சீரகம், சர்க்கரை நோயைத் தடுக்கும் சக்தி வாய்ந்த பண்புகளைக் கொண்டுள்ளதாகவும், இதனால் ஹைப்போ கிளைசீமியா வருவதற்கான அபாயம் குறைவாக இருப்பதாகவும் சில ஆய்வுகள் கூறுகின்றன. எனவே ஒருவர் சீரகத்தை அன்றாடம் உணவில் சேர்த்து வந்தால், சர்க்கரை நோயைத் தடுக்கலாம்.

மன அழுத்தம் மற்றும் பதற்றத்தில் இருந்து விடுவிக்கும்
சீரகத்தில் உள்ள குறிப்பிட்ட சில பண்புகள், தூக்கமின்மையை உண்டாக்கும் மன அழுத்தம் மற்றும் பதற்றத்தில் இருந்து நிவாரணம் அளிக்க உதவும். எனவே உங்களுக்கு இரவு நேரத்தில் மன கஷ்டத்தினால் சரியான தூக்கம் வராமல் இருந்தால், சீரகத்தை அன்றாட உணவில் சேர்த்து வாருங்கள்.

 

 

Related posts

முகம் வீக்கமாக இருப்பது என்ன வியாதி?

nathan

தெரிந்துகொள்வோமா? பெண்களின் வயதும்.. குழந்தை பாக்கியமும்…

nathan

கரப்பான் பூச்சியை விரட்டியடிக்க இதை முயன்று பாருங்கள்!

nathan

ஒவ்வொரு தாயும் தன் மகனுக்கு 18 வயது ஆவதற்கு முன்பு சொல்லிக் கொடுக்க வேண்டிய விஷயங்கள்!

nathan

உங்களுக்குதான் இந்த விஷயம்! ஒவ்வொரு பெற்றோர்களும் கண்டிப்பாக தெரிந்து வைத்திருக்க வேண்டிய விஷயங்கள்!

nathan

கிளைக்கோலிக் ஆசிட் கிரீம் பயன்பாடுகள் (Glycolic Acid Cream Uses in Tamil)

nathan

இதப்படிங்க பாஸ்!!! கொக்-கோகோலா உங்க தாகத்த மட்டும் தான் அடக்குதுன்னு நினைக்கிறீங்களா??

nathan

பூண்டை பச்சையாக உண்பதால் கிடைக்கும் நன்மைகள்

nathan

குழந்தையின்மை பிரச்சனை இருக்கும் பெண்களுக்கு இயற்கை வைத்திய டிப்ஸ்!!

nathan