ஆரோக்கிய உணவு

முட்டை டயட் பத்தி கேள்விப்பட்டிருக்கீங்களா?நீங்களும் முயற்சி செய்யுங்கள்

டயட் என்றாலே நமக்குள் நிறைய கட்டுப்பாடுகளை வைத்துக் கொள்வோம். காய்கறிகள், பழங்கள் மற்றும் ஜூஸ் என்று நிறைய டயட் முறைகளை கேள்விப்பட்டு இருக்கிறோம். ஆனால் முட்டை டயட்டை கேள்விப் பட்டிருக்கிறீர்களா.

ஆமாங்க இது ஒரு கலோரிகள் குறைந்த புரோட்டீன் நிறைந்த டயட் முறையாகும். இதனால் உங்கள் தசைகளுக்கு போதுமான புரோட்டீன் கிடைப்பதோடு உங்கள் உடல் எடையையும் குறைக்க இயலும்.

எடைகுறைப்பு டயட்

நீங்கள் வெயிட்டை குறைப்பதற்காக டயட்டை ஃபாலோ செய்யும் போது கண்டிப்பாக நொறுக்கு தீனிகள், ஃபாஸ்ட் புட், எண்ணெய் உணவுகள் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். அப்பொழுது தான் உங்கள் எடையை எளிதாக குறைக்க இயலும்.

புரோட்டீன் டயட்

பல்வேறு காரணங்களுக்காக டயட்டை கடைபிடிப்போம். ஆனால் எடையைக் குறைப்பதற்காக மேற்கொள்ளும் டயட்டில் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். குறிப்பாக, புரோட்டீன் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்த உணவை அதிகமாக எடுத்துக் கொள்வது நல்லது.

காய்கறிகள், பழங்கள்

திராட்சை, பிரக்கோலி, அஸ்பாரகஸ், காளான், கீரைகள், சுரைக்காய் மற்றும் பழங்கள் உங்கள் மூன்று வேளை உணவிலும் கட்டாயம் இடம் பெறுமாறு பார்த்துக் கொள்ளுங்கள். அப்படி சரிவிகித உணவை உங்கள் டயட்டில் எடுத்துக்கொண்டால் மட்டுமே நீங்கள் நினைத்தபடி, எந்தவித பக்க விளைவுகளும் இல்லாமல் உடல் எடையைக் குறைக்க முடியும்.

முட்டை டயட்

முட்டை டயட் என்றால் மிகக் கடினமாக இருக்குமோ என்று நீங்கள் பயந்துவிட வேண்டாம். தினமும் முட்டையுடன் கொஞ்சம் புரோட்டீன் அடங்கிய மற்ற உணவுகளையும் எடுத்துக் கொள்ளலாம். அதாவது ஏதாவது ஒரு வேளை சிக்கன் அல்லது மீன் கூட சேர்த்துக் கொள்ளலாம்.

முட்டை டயட்டில் பல வகைகள் உண்டு. அவற்றில் பெரிய வேறுபாடுகள் ஏதும் கிடையாது. சின்ன சின்ன மாற்றங்கள் தான் இருக்கும்.

டயட் 1
டயட் 1
முட்டை டயட் மற்றும் புரோட்டீன் உணவுகள்

காலை உணவு : 2 அவித்த முட்டை மற்றும் 1 திராட்சை பழங்கள் அல்லது 2 ஆம்லெட் உடன் கீரை மற்றும் காளான்கள்.

மதிய உணவு : 1/2 வறுத்த சிக்கன் நெஞ்சுப் பகுதி மற்றும் பிரக்கோலி

இரவு உணவு : 1 மீன் துண்டு மற்றும் பச்சை காய்கறிகள் கொண்ட சாலட்

டயட் 2 :
டயட் 2 :
முட்டை டயட் மற்றும் 1/2 திராட்சை பழங்கள்

காலை உணவு :2 அவித்த முட்டை, 1/2 திராட்சை பழங்கள்

மதிய உணவு :1/2 வறுத்த சிக்கன் நெஞ்சுப் பகுதி, பிரக்கோலி மற்றும் 1/2 திராட்சை பழங்கள்

இரவு உணவு :1 துண்டு மீன் மற்றும் 1/2 திராட்சை பழங்கள்

டயட் :3
டயட் :3
வெறும் முட்டை மற்றும் தண்ணீர்

கடைசி டயட் முறையில் தினமும் மூன்று வேளைகளிலும் அவித்த முட்டை மற்றும் தண்ணீர் மட்டுமே சாப்பிட வேண்டும். 14 நாட்களுக்கு இந்த டயட்டை பின்பற்ற வேண்டும். ஆனால் இது கடினமான டயட் முறை என்பதால் இதை யாருக்கும் பரிந்துரைப்பதில்லை. ஏனெனில் இதனால் ஊட்டச்சத்து பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது.

பக்க விளைவுகள்

முட்டை டயட் முறையில் நமது உடலுக்கு போதுமான ஆற்றல் கிடைக்காது. கார்போஹைட்ரேட் குறைவாக இருப்பதால் சோர்ந்து காணப்படுவோம். இதனால் உடற்பயிற்சி செய்ய சிரமம் ஏற்படும். தீடீரென்று புரோட்டீன் அதிகமாகவும் கார்போஹைட்ரேட் குறைவாகவும் உள்ள உணவு முறையால் நமது சீரண மண்டலம் சீரணிக்க கஷ்டப்படும். வாந்தி, மலச்சிக்கல், வாய்வு, மூச்சு விட சிரமம் போன்றவற்றை சந்திக்க நேரிடலாம்.

இதயக்கோளாறுகள்

முட்டையில் அதிகமாக 186 கிராம் கொலஸ்ட்ரால் அதாவது ஒரு நாளைய அளவில் 63% உள்ளது. இதனால் இதயத்திற்கு பாதிப்பு இல்லை என்று ஆராய்ச்சிகள் சொன்னாலும் சேச்சுரேட் டிரான்ஸ் கொழுப்புகள் அடங்கியுள்ளன.

2015 ல் நடத்தப்பட்ட ஆராய்ச்சி படி ஒரு ஆண் ஒரு வாரத்திற்கு 6 முட்டைகள் வரை சாப்பிட்டால் இதயம் செயலிழக்க வாய்ப்புள்ளது என்கின்றனர். மேலும் இரத்தம் தடைபட்டு பக்க வாதம் ஏற்படவும் வாய்ப்புள்ளது. எனவே ஒரு வாரத்திற்கு 6 முட்டைகளுக்கு குறைவாக சாப்பிடும் போது இந்த பிரச்சினைகள் ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்குமே வர வாய்ப்பில்லை என்று ஆராய்ச்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.

நார்ச்சத்து குறைவு

மேலும் முட்டையில் நார்ச்சத்து குறைவாக இருப்பதால் சரி பங்கு மற்ற உணவுகளையும் சேர்த்து எடுத்துக் கொள்ள வேண்டும். அப்பொழுது தான் மலச்சிக்கல், குடல் புழுக்கள், பாக்டீரியா போன்றவை ஏற்படாது.

நிறைய பேர் இந்த டயட்டை பாலோ செய்ய முடியாமல் பழைய நிலைக்கு திரும்பி விடுகின்றனர்.

Related posts

அஜீரணத்தை போக்கும் கருஞ்சீரகம் சாதம்

nathan

இடுப்பு எலும்பு வலுப்பெற உளுந்துக் களி

nathan

கிராமத்து நெத்திலி கருவாட்டு குழம்பு

nathan

வெற்றிலை உடலுக்கு ஆரோக்கிய நன்மைகள்

nathan

சூப்பர் டிப்ஸ்.. பார்லி தண்ணீர் குடியுங்கள்!

nathan

தெரிஞ்சிக்கங்க…நவதானியங்களும்.. அதில் உள்ள சிறப்புகளும்..

nathan

சுவையான குடைமிளகாய் மசாலா

nathan

சூப்பர் டிப்ஸ்! உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த அன்றாட உணவில் கொத்தமல்லி….!

nathan

வியாதிகளுக்கு நல்ல மருந்தாக விளங்குகிறது அருகம்புல்

nathan