36.3 C
Chennai
Friday, Aug 28, 2026
ஆரோக்கிய உணவு

கனவாய் மீன் வறுவல் செய்ய..!

தேவையான பொருட்கள்:

கனவாய் மீன் – கால் கிலோ
மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன்
இஞ்சி-பூண்டு விழுது – 2 டீஸ்பூன்
பொட்டுக்கடலை மாவு – 2 கைப்பிடி அளவு
கறிவேப்பிலை – ஒரு கொத்து
சின்னவெங்காயம் – 2 கைப்பிடி அளவு
பச்சை மிளகாய் – 6
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
எலுமிச்சைப்பழம் – 1
மிளகுத்தூள்- 2 டீஸ்பூன்
செய்முறை:

மீனை சுத்தம் செய்து, வட்டமாக நறுக்கிக்கொள்ளவும். இதில் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், இஞ்சி-பூண்டு விழுது, உப்பு, எலுமிச்சைச்சாறு சேர்த்துக் கலந்து 5 நிமிடம் ஊற வைத்துக்கொள்ளவும். இதை பொட்டுக்கடலை மாவில் புரட்டி எடுத்து, தவாவில் சிறிது எண்ணெய் விட்டு 2 நிமிடம் இருபுறமும் வேக விட்டு எடுக்கவும். 2 நிமிடத்துக்கு மேல் வேகவைத்தால், ரப்பர் போலாகிவிடும்.

வாணலியில் எண்ணெய் விட்டு சூடாக்கி கறிவேப்பிலை, சின்னவெங்காயம், பச்சை மிளகாய் போட்டு தாளிக்கவும். இதில் மீன் சேர்த்து லேசாக வதக்கிவிட்டு, சிறிது உப்பு, எலுமிச்சைச்சாறு பிழிந்து அடுப்பை அணைக்கவும். பரிமாறும் முன்பு மிளகுத்தூள் தூவி பரிமாறவும்.

Related posts

மூளைக்கு சுறுசுறுப்பு தரும்!

nathan

இது, எத்தனையோ நோய்களைத் தடுக்கும் ஆற்றல்கொண்டது…

sangika

இந்த ஒரு பழம் சாப்பிடுங்க தைராய்டு உங்களுக்கு வராது தெரிந்து கொள்ளுங்கள்..!சூப்பர் டிப்ஸ்

nathan

உங்களுக்கு தெரியுமா மருத்துவ குணங்கள் அதிகம் நிறைந்த வெந்தயக் கீரை…!!

nathan

இரும்புச்சத்து நிறைந்த வெஜிடபிள் ஃப்ரூட் சாலட்

nathan

சமைக்கும் போது உப்பை கையில் எடுத்து போட்டால் பணம் கொட்டுமாம்!

nathan

தெரிந்துகொள்வோமா? எடையை குறைக்க உதவும் ஓட்ஸ் ரெசிபி !

nathan

இதோ எளிய நிவாரணம்! ரத்ததில் கலக்கும் சர்க்கரை நோயை கட்டுக்குள் கொண்டு வர..

nathan

ஆப்பிள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

nathan