34.1 C
Chennai
Sunday, May 18, 2025
22 61f2799
ஆரோக்கிய உணவு

இந்த பழத்தை தினமும் 2 சாப்பிட்டு பாருங்க..அப்படி என்ன ஸ்பெஷல்?

தினமும் பழங்கள் சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்று மருத்துவர்கள் கூறுவதுண்டு. பழங்களில் பல மருத்துவ குணங்கள் அடங்கி உள்ளது.

அந்த வகையில் சப்போட்டாவில் பல நோய்களை எதிர்க்கும் சக்தி கொண்டுள்ளது. இந்த பழத்தை பலரும் விரும்பி சாப்பிடுவார்கள். தினமும் 2 சப்போட்டா சாப்பிட்டு வருவதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம் வாங்க..

கூர்மையான கண் பார்வைக்கு சப்போட்டாவை தொடர்ந்து சாப்பிட்டு வருவதன் மூலம் வயது முதிர்ந்த காலத்திலும் நல்ல கண் பார்வையை பெறலாம். இதிலுள்ள வைட்டமின் ஏ சத்தானது நம் கண்களை ஆரோக்கியமாக வைப்பதோடு கண்பார்வையை குறையாமல் பார்த்துக் கொள்கிறது.

பித்தத்தால் ஏற்படும் தலைச்சுற்றல், மயக்கம் ஆகியவற்றிற்கு சப்போட்டா பழம் நல்ல பலன் கொடுக்கும். அதன் பிறகு சுக்கு, சித்தரத்தை, கருப்பட்டி ஆகியவற்றை சேர்த்து பொடி செய்து அதை தண்ணீருடன் சேர்த்து நன்கு காய்ச்சி குடித்து வந்தால் காய்ச்சல் பறந்துவிடும்.
உடல் உஷ்ணம், சீதபேதி ஆகிய பிரச்சனைகளுக்கு சப்போட்டா பழத்தின் சாறுடன் சேர்த்து தேயிலை சாற்றை கலந்து தொடர்ந்து மூன்று நாட்கள் குடித்து வந்தால் இந்த பிரச்சனைகளுக்கு ஒரு நல்ல தீர்வு கிடைக்கும்.

சப்போட்டா பழத்தில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் தோலின் சுருக்கங்கள் ஏற்படாமல் தடுக்கிறது. சப்போட்டாவை தொடர்ந்து சாப்பிட்டு வருவதன் மூலம் நாம் நீண்ட நாட்களுக்கு இளமையான தோற்றத்தை பெறலாம்.

Related posts

சூப்பர் சத்து… சிறுதானியப் பால்!

nathan

உடல் பருமனா? உங்களுக்கான டயட்

nathan

எந்த நோய்க்கு எந்த பழம் மிகவும் நல்லது? இதை படிங்க…

nathan

காலையில் ஒரு துண்டு இஞ்சி உண்ணுவதால் ஏற்படும் நன்மைகள்

nathan

சைவ உணவில் உடல் எடையை குறைக்க வேண்டுமா?…இந்த 7 நாள் உணவு அட்டவணையை பின்பற்றவும்…

nathan

குளிர்காலத்தில் சூடாக இருக்க உதவும் உணவுகள்!

nathan

நீரிழிவு நோயின் எதிரி

nathan

இரத்த குழாய்களை சுத்தம் செய்து இதயத்தை ஆரோக்கியமாக வைக்க உதவும் 2 பொருட்கள்

nathan

தெரிஞ்சிக்கங்க…உடலில் உள்ள கொழுப்பை கரைக்கும் கறிவேப்பிலை சாதம்

nathan