31.7 C
Chennai
Thursday, May 23, 2024
22 61ed489
ஆரோக்கிய உணவு

தெரிஞ்சிக்கங்க…சூடான தண்ணீரில் உப்பு கலந்து குளிப்பதால் இத்தனை நன்மைகளா?

பொதுவாக நாம் உப்பை சமையலில் சேர்த்து கொள்வது வழக்கம். ஆனால் நாம் குளிக்கும் தண்ணீரில் உப்பைக் கலந்து குளிப்பதால் நமது உடலுக்கு ஏற்படும் நன்மைகள் ஏராளம். பொதுவாக கடல் உப்பு என்பது சமையலுக்கு ஏற்ப தயாரிக்கப்படுவதால் இதில் தாதுக்கள் மிக குறைவு. ஆனால் நாம் குளிப்பதற்கு என்றே தனி உப்பு உள்ளது.

அதனை நாம் பயன்படுத்தி வந்தால் பல ஆரோக்கிய நன்மைகளை பெறலாம். உப்பை தண்ணீரில் கலந்து குளிப்பதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் குறித்து தெளிவாக பார்க்கலாம்..

 

குளிக்கும் தண்ணீரில் நீங்கள் உப்பை நான்கு முதல் பத்து கப் வரை சேர்க்கலாம். சாதாரண நீர்த்தொட்டியில் கால் கப் கடல் உப்பு சேர்க்கலாம். குறைந்தது இந்த உப்பு 20 நிமிடங்கள் தண்ணீரில் ஊற வேண்டும்.

நீங்கள் குளிக்கும் இந்த தண்ணீரானது உங்கள் உடலின் வெப்பநிலையிலிருந்து இரண்டு டிகிரி அதிகமான வெப்பநிலையில் இருக்க வேண்டும். இப்படி நீங்கள் குளித்து வந்தால் ஆரோக்கியமான சருமத்தைப் பெறலாம்.

அதோடு தசைகள் இலகுவாகி உடலுக்கு நல்ல ஆரோக்கியம் கிடைக்கும். மேலும் உடல் வலி, தசை வலி இருந்தாலும் சரியாகும். உடல் அசதி போன்றவை இருக்கும் நேரத்தில் இந்த கடல் உப்பு குளியல் நல்ல பலனை தரும்.
சருமத்தில் அரிப்பு, எரிச்சல் போன்ற ஏதாவது பிரச்னை வந்தால் தவிர்த்து விடுங்கள். அதேபோல் உடலில் காயம், சிரங்கு, பரு , தேமல் போன்ற சரும பாதிப்புகள் இருந்தால் தவிர்க்க வேண்டும். மேலும் இந்த குளியலை நீங்கள் செய்யும் முன் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.

Related posts

இந்த பழத்தை இவர்கள் மட்டும் சாப்பிட கூடாதாம்!

nathan

இதயத்தை பலப்படுத்தும் சுக்கான் கீரை

nathan

நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த முந்திரிபழம்

nathan

சைவம் – அசைவம் எது உடலுக்கு நல்லது?

nathan

தெரிஞ்சிக்கங்க…எதற்காக நண்டு சாப்பிட வேண்டும்?

nathan

இளநீர் குடிப்பதனால் உண்டாகும் நன்மைகள்!

nathan

உணவைக் குறைத்து உடலை அழகாக்க..

nathan

மாதவிடாய் காலத்தில் நீங்க இதை கண்டிப்பா சாப்பிடவே கூடாது!

nathan

உங்களுக்கு தெரியுமா ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் பீன்ஸ் கட்டுப்படுத்துகின்றது ..!

nathan