இலங்கையில் அரிசி மாவு, தேங்காய் சேர்த்து செய்யும் ரொட்டி மிகவும் சுவையானது.
இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
அரிசி மாவு – 1 கப்
தேங்காய் துருவல் – 1 கப்
உப்பு – 1/2 ஸ்பூன்
எண்ணெய் – 5 ஸ்பூன்
தண்ணீர் – 1 கப்
செய்முறை
ஒரு பாத்திரத்தில் அரிசி மாவுடன் உப்பு, தண்ணீர், தேங்காய் துருவல் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் கெட்டியாக பிசைந்து வைக்கவும்.
பிசைந்த மாவை சிறிய வட்டங்களாக தட்டி கொள்ளவும்.
தோசை கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும் தட்டி வைத்துள்ள ரொட்டியை போட்டு சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றவும்.
ஒரு பக்கம் வெந்ததும் திருப்பி போட்டு இருபுறமும் சுட்டு எடுக்கவும்.
இது தான் இலங்கை அரிசி ரொட்டியின் சுவையின் ரகசியம். 5 நிமிடத்தில் சுட்டு எடுக்கலாம்.