25.9 C
Chennai
Sunday, Feb 23, 2025
21 61bf
ஆரோக்கிய உணவு

தினமும் முளைக்கட்டிய பயிரை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா? தெரிஞ்சிக்கங்க…

உடல் எடை குறைப்பவர்கள், டயட்டில் இருப்பவர்கள் முளைக்கட்டிய பயிரை தினமும் உணவில் சேர்த்து கொள்வார்கள். இதற்கு காரணம் இதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் தான். புரதம், வைட்டமின்கள், தாதுக்கள், ஆன்ட்டி ஆக்சிடென்ட்ஸ் போன்ற பல்வேறு சத்துக்கள் முளைப்பயிரில் நிறைந்துள்ளது.

இதன் மூலம் முழு பலனை பெற இதை சாலட் போன்றவற்றில் சேர்த்து கொண்டு சாப்பிட்டு வருபவர்கள் தான் அதிகம். சரி வாங்க தினமும் முளைக்கட்டிய பயிர்களை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்..

நன்மைகள்:-

இனி முளைப்பயிரை நீங்கள் வீட்டில் செய்து சாப்பிடும் சன்னா மசாலா ரெசிபியுடனும் சேர்த்து கொள்ளலாம். இப்படி செய்து சாப்பிட்டு வந்தால் பருப்பு, முளைப்பயிறு, சீஸ் ஆகியவற்றில் உள்ள புரதச்சத்து கிடைக்கும். இது போன்ற புரதம் நிறைந்த உணவுகளை எடுத்து கொள்வதால் நீண்ட நேரம் பசி தாங்கும்.

 

சாதரணமாக முட்டையை அடித்து ஊற்றி ஆம்லெட்டாக சாப்பிடுவதற்கு பதிலாக, அதில் சிறிது நறுக்கிய காய்கறிகள், முளைப்பயிர், வறுத்து துண்டாக்கிய முந்திரி ஆகியவற்றை கலந்து ஆம்லெட்டாக சாப்பிடலாம். இது போன்று சாப்பிடுவதால் அதிக ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும்.

முளைக்கட்டிய பயிரை புதுவிதமாக செய்து சாப்பிட ஸ்மூத்தி ரெசிபி உங்களுக்கு உதவும். முளைகட்டிய பயிறுடன் ப்ரோக்கோலியும் சேர்த்து ஸ்மூத்தி போன்று செய்து சாப்பிடலாம். இது ஒரு புதுவித ருசியை தரும். மேலும் குழந்தைகளுக்கு இந்த போன்ற ஸ்மூத்தி மிகவும் ஆரோக்கியமானது.

சத்தான உணவுகளில் ஒன்று இட்லி. இதில் முளைப்பயிரை சேர்ப்பதால் அதிக நன்மைகள் உங்களுக்கு கிடைக்கும். முளைப்பயிரை நன்றாக அரைத்து மாவில் சேர்த்து இட்லி செய்து சாப்பிடலாம். மிக குறைந்த கலோரி உள்ள ரெசிபி வகையை இது சேர்ந்தது.

Related posts

அன்னாசி பழத்தில் இவ்வளவு மருத்துவ பயன்கள் இருக்கா?அப்படி என்ன ஸ்பெஷல்?

nathan

ப்ராக்கோலி பொரியல்

nathan

நோயின்றி ஆரோக்கியமாக வாழ வேண்டுமா? சூப்பர் டிப்ஸ்….

nathan

கொத்தமல்லி கெட்டுப்போகாமல் இருக்கணுமா?

nathan

சுவையான இரும்புச்சத்து நிறைந்த ராஜ்மா சுண்டல்

nathan

இரவு நேரங்களில் கட்டாயமாக இந்த உணவை சாப்பிடவே கூடாது! ஆய்வில் தகவல் …

nathan

ஆவாரம் பூ (Aavaram Poo) நன்மைகள் – aavaram poo benefits in tamil

nathan

தினமும் ஹோட்டலில் சாப்பிடாதீங்க – ஆபத்து

nathan

சுவையான பூசணிக்காய் சாம்பார்

nathan