31.1 C
Chennai
Friday, Aug 28, 2026
சைவம்

வெங்காய தாள் கூட்டு

தேவையான பொருட்கள்

பாசி பருப்பு – 1/2 கப்

வெங்காய தாள் – 1 கட்டு . சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும் .

வெங்காயம் – 1/2 மீடியம் சைஸ். பொடியாக அரிந்தது .

தக்காளி – 1/2 மீடியம் சைஸ் . பொடியாக நறுக்கி கொள்ளவும் .

மிளகாய் தூள் – 1 ஸ்பூன் . (இது கலந்து அரைத்த தூள் .உங்க காரதிற்க்கேற்ப சேர்த்து கொள்ளவும் )

சோம்பு /பெருஞ்சீரக தூள் – 1/2 ஸ்பூன்

எண்ணெய் , உப்பு தேவைகேற்ப

மல்லி தழை சிறிதளவு

தாளிக்க :

குழம்பு தாளிக்கும் வடகம் – சிறிதளவு .(இது இல்லை என்றால் கொஞ்சம் கடுகு ,உளுந்து , சீரகம் சேர்த்து தாளித்து கொள்ளவும் )

கறிவேப்பிலை – 1 ஆர்க்
செய்முறை :

பாசி பருப்பை ஒரு பாத்திரத்தில் ஒரு கிளாஸ் தண்ணீர் விட்டு மிதமான தீயில் மூடி வேக வைக்கவும் .

பாசி பருப்பு வெந்ததும் , வெங்காயம் , தக்காளி , வெங்காயத்தாள் , மிளகாய் தூள் , உப்பு , சோம்பு தூள் அனைத்தும் போட்டு மூடி வேக வைக்கவும் .

அனைத்தும் வெந்து குழைந்து வரும் பொழுது வேறொரு பாத்திரத்தில் சிறிது எண்ணெய் விட்டு குழம்பு தாளிக்கும் வடகம் போட்டு பொரிந்ததும் , கறிவேப்பிலை சேர்த்து தாளித்து

வெந்த கூட்டில் சேர்க்கவும் ..ஒரு கொதி வந்ததும் மல்லி தழை சேர்த்து அடுப்பை நிறுத்தி வடவும் .

வெங்காய தாள் கூட்டு தயார் .இது சாதத்துடன் , சப்பாத்தியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்

Related posts

பன்னீர் ராஜ்மா மசாலா

nathan

பக்கோடா குழம்பு

nathan

புளியோதரை

nathan

பெங்காலி ஸ்டைல் காலிஃப்ளவர் குழம்பு

nathan

பூண்டு – மிளகுக் குழம்பு

nathan

ஹோட்டல் ஸ்டைல் வெஜ் குருமா

nathan

மீல்மேக்கர் சோயா குழம்பு

nathan

ஆந்திரா ஸ்டைல் கீரை மசியல்

nathan

சூப்பரான சைடிஷ் பெப்பர் உருளைக்கிழங்கு ரோஸ்ட்

nathan