29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
shoulder 15
ஆரோக்கியம் குறிப்புகள்

உயரமான பெண்கள் தவிர்க்கும் ரொமான்ஸ் விஷயங்கள்! தெரிஞ்சிக்கங்க…

உயரமாக இருப்பதை மிகவும் பெருமிதமாக நினைப்பார்கள். காரணம் குட்டையாக இருந்தால் அனைவரும் கேலி, கிண்டல் செய்வார்கள். சாதாரண மக்கள் மட்டுமல்ல, பிரபலமாகவே இருந்தாலும் கூட சூர்யா முதல் அமீர் கான் வரை அவர்களது திறமையை காணாமல், உயரத்தை வைத்து கேலி செய்த சம்பவங்கள் பலவன இருக்கின்றன.

ஆனால், உண்மையில் உயரமாக இருப்பது வரம் எல்லாம் இல்லை. இருப்பதிலேயே கொடுமை உயரமாக இருப்பது தான். உயரமாக இருப்பவர்களால் பல வெளியிடங்களில் பொது போக்குவரத்து வாகனங்களில் பயணிக்க இயலாது கால்கள் முன் இருக்கையுடன் முட்டும்.

அதிலும், முக்கியமாக பெண்கள் உயரமாக இருந்தால் பொதுவாழ்க்கை மட்டுமின்றி ரொமான்ஸ் வாழ்க்கையிலும் நிறைய பிரச்சனைகள் உண்டாகும். வரன் கிடைப்பதே கடினம். அப்படியும் கிடைத்துவிட்டால் சில ரொமான்ஸ் விஷயங்கள் அவர்களுக்கு வெறும் கனவாக மாறிவிடுகிறது.

அப்படியாக உயரமான பெண்கள் பொது வாழ்க்கை மற்றும் ரொமான்ஸ் வாழ்வில் தங்கள் உயரத்தால் தவிர்க்கும் விஷயங்கள் குறித்து தான இந்த தொகுப்பில் காணவிருக்கிறோம்…

தோள்மீது…

பெரும்பாலும் லவ்வாலஜியில் இருக்கும் பெண்களுக்கு தங்கள் காதலன், துணையின் தோள்களில் சாய்ந்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கும். இது உயரமான பெண்களுக்கு கிடைப்பது மிகவும் கடினம். அப்படியே கிடைக்க வேண்டும் என்றால், காதலன், நான்காவது படியிலும், இவர்கள் மூன்றாவது படியிலும் தான் அமர வேண்டும்.

தூக்கிக் கொஞ்சுதல்…

காதலில் மற்றுமொரு ரொமான்ஸ் சீன் இருக்கிறது. இதை நாம் பல படத்தில் நாயகன், நாயகி ஸ்லோ-மோஷனில் செய்வதை அதிகம் கண்டிருப்போம். அதாவது, ஒருசில அடி தூரத்தில் இருந்து ஓடி வந்து தூக்கி, கட்டியணைத்து கொஞ்சுவது. இது ரியல் லைப்பில் குறைந்தபட்சம் கல்யாண போட்டோ-ஷூட்டிலாவது எடுத்து வைத்துக் கொள்வார்கள். இந்த ரொமான்ஸ் சீனும் உயரமான பெண்களுக்கு கஷ்டமாகிவிடுகிறது.

லிப்லாக்!

சரி, தோள்மீது சாய்ந்துக் கொள்வது, கட்டியணைத்துக் கொள்வதை கூட ஒருவகையில் ஒதுக்கிவிடலாம்… நீண்ட நாள் கழித்து பார்க்கும் போதோ, சண்டையிட்ட பிறகு இணையும் போது, ஒரு இடைவேளை கழிந்து ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்ளும் போதோ… பரிமாறிக் கொள்ளும் லிப்லாக்கும் கூட நின்றுக் கொண்டே என்றால் கொஞ்சம் சிரமம் தான்.

ரொமான்ஸ்!

பெண்கள் சில ரொமான்ஸ் தருணங்களில் தங்கள் துணையின் சட்டை அணிந்துக் கொள்வார்கள். ஆனால், இவர்களுக்கு அந்த சட்டை ஒன்று ஓவர் ரொமான்ஸ் ஆகிவிடும். அல்லது அசௌகரியமாக மாறிவிடும்.

சட்டை!

எந்த பிராண்டாக இருந்தாலும் சரி இவர்களுக்கு மட்டும் முழுக்கை சட்டை முழுதாக இருக்காது. பாதியில் தொங்கிக் கொண்டிருப்பது போல, மணிக்கட்டுக்கு அரை அடி மேலேயே முழுக்கை சட்டை முடிவடைந்துவிடும். இது உயரமாக இருக்கும் பெண்களின் நீண்டகால வருத்தமாம்.

விளையாட்டு!

உயரமாக இருந்தாலே போதும், உடனே நீ கூடைப்பந்தாட்டத்தில் கவனம் செலுத்தலாமே, விளையாடுவதும் எளிதாக இருக்கும், நீ அதில் சாதிக்க நிறைய வாய்ப்புகள் உண்டு என்று ஸ்போர்ட்ஸ் மாஸ்டர் மட்டும் கூறினால் பரவாயில்லை. பெற்றோர், நண்பர்கள், உறவினர்கள் என அனைவரும் இதையே கூறுவார்கள்.

ஹீல்ஸ்!

பெண்களுக்கு ஹீல்ஸ் என்றால் மிகவும் பிடிட்டதது. ஆரோக்கியத்திற்கு கேடு என்று வானுயரம் போஸ்டர் அடித்து ஓட்டினாலும், ஸ்டைல், ஃபேஷன் என்று விரும்பும் பெண்களின் தேர்வுகளில் நிச்சயம் ஹீல்ஸ் இருக்கும். ஆனால், உயரமான பெண்களால் ஹீல்ஸ் அணிய இயலாது. காரணம், அவர்கள் ஹீல்ஸ் அணிந்தால் ஜைஜாண்டிக் சைஸ் ஆகிவிடுவார்கள்.

ஷாப்பிங்!

ஆன்லைன் ஷாப்பிங் என்பது கிட்டத்தட்ட பெண்களுக்காக கண்டறியப்பட்ட வரப்பிரசாதம் என்றே கூறலாம். என்னதாம் ஆண், பெண் இருவரும் அதில் ஷாப்பிங் செய்தாலும். ஆன்லைனில் அதிகம் ஷாப்பிங் செய்வது பெண்கள் தான். ஆனால், உயரமான பெண்களால் அதுவும் முடியாது. அவர்கள் படத்தை பார்த்து ஒன்று ஆர்டர் செய்தால், அது அவர்களுக்கு செட்டாகாத ஒன்றாக வந்து சேரும்.

குட்டை ஆடை!

சரி, நீளமான ஆடைகள் உடுத்தினால் தான் செட் ஆகாது என்று, குட்டை ஆடைகள் உடுத்தலாம் என்று இவர்கள் தேர்வு செய்தால். அது இதை விட தர்மசங்கடமான சூழலை உண்டாக்கும். நீளமான உடை முழுதாக பத்தாது என்றால், குட்டை ஆடைகள் சுத்தமாகவே பத்தாது. இழுத்துப் பிடித்துக் கொண்டே நடக்க வேண்டிய சூழல் ஏற்படும். உட்கார்வதில் இருந்து, எங்கேனும் நால்வர் மத்தியில் போன் கீழே விழுந்துவிட்டால் கூட குனிய வேண்டும் என்றால்… அய்யயோ.. அச்ச்சோ…. தான்!

முடியாது!

விழாக்கள், கொண்டாட்டத்தின் போது மகிழ்ச்சியான தருணமாக இருந்தாலும் சரி, கால் வலிக்கிறது என்று காரணம் கொண்டிருந்தாலும் சரி, அப்பா, அம்மா, சகோதர உறவுகள், தோழிகள் மடியில் கொஞ்ச நேரம் ரிலாக்ஸ் பண்ணக் கூட இவர்களால் உட்கார முடியாது. பார்க்க கொஞ்சம் விசித்திரமான தோற்றமாக இருக்கும்.

இருக்கை!

மடியில் தான் இவர்களால் உட்கார முடியாது என்றில்லை, கார் சீட், அரசு பேருந்து சீர், விமான இருக்கை என இவர்களால் எங்குமே சௌகரியமாக உட்கார முடியாது. இதெல்லாம் பரவாயில்லை. ஸ்லீப்பர் கோச் புக் செய்துக் கொள்ளலாம் என்றாலும், கால் முழுவதுமாக நீட்டிப் படுக்க முடியாது, கீழே கால் முட்டும்.

பாத் டப்!

ஸ்லீப்பர் கோச்சில் மட்டுமல்ல, சில நேரங்களில் இவர்கள் விருப்பப்பட்டு குளியல் தொட்டியில் கூட சௌகரியமாக குளிக்க முடியாது. இங்கும் கால் முட்டும். இவர்கள் நீர் நிறைந்த இடத்தில் குளிக்க வேண்டும் என்றால், தீம் பார்க், நீச்சல் குளம், போன்ற இடங்களுக்கு தான் செல்ல வேண்டும்.

கதவுகள்!

தீம் பார்க், நீச்சல் குளங்களுக்கு செல்லும் போது குளித்து, உடை மாற்றுவதற்கு என்று ஒரு இடம் இருக்கும். அங்கேயும் இவர்களுக்கு இடைஞ்சல்கள் காத்திருக்கும். ஏனென்றால், அந்த இடங்களில் கதவு முழுதாக இருக்காது. மேலும், கீழும், இடைவெளி இருக்கும். ஒருவேளை யாராவது மயக்கம் அடைந்துவிட்டால், விபரீதம் ஏதாவது நேர்ந்துவிட்டால், அவர்களை வெளி கூட்டி வர இந்த வசதி செய்யப்பட்டுள்ளது என்றாலும், இவர்களுக்கு இதுவும் ஒரு இடைஞ்சல் தான். கதவுக்கு மேல் இவர்கள் தலை எட்டிப்பார்க்கும் படி இருக்கும்.

ஹோட்டல்!

வீட்டில் இருக்கும் போதே சில விஷயங்கள் இவர்களுக்கு தனியாக தயார் செய்ய வேண்டும். குறிப்பாக கட்டில். உயரமாக இருந்தால் கட்டில் நீளம் பத்தாது. இதை நாம் வெளியூர் செல்லும் போது தாங்கும் ஹோட்டல்களிலும் எதிர்பார்க்க முடியாது. உயரமாக இருப்பவர்கள் கால் நீட்டி படுத்தால், கட்டிலுக்கு கீழே கால் தொங்கிக் கொண்டிருக்கும்.

செல்ஃபீ!

மிரர் செல்ஃபீக்கள் மற்றும் பெண்கள் பிரிக்க முடியாத ஜோடி. கழிவறை சென்றால் அனைவரும் கடன்கழித்து விட்டு திரும்புவார்கள். ஆனால், பெண்கள் அங்கே தான் தங்களுக்கான செல்ஃபீ-ஷூட் முடித்து திரும்புவார்கள். அப்படியான மிரர் செல்ஃபிக்களும் சில சமயம் உயரமான பெண்களின் கால்களை வாரிவிடும்.

பெரும்பாலான செல்ஃபீக்களில் இவர்கள் முகமே தெரியாது. அப்படியே தெரிய வேண்டும் என்றால் கொஞ்சம் குனிய வேண்டும். அப்படி குனிந்து எடுத்தால், அவர்கள் அழகான தோற்றம் முழுவதுமாக மிரர் செல்ஃபீயில் தெரியாது.

Related posts

ரமழான் நோன்பும் உடல் ஆரோக்கியமும் : முக்கிய குறிப்புகளுடன்,,,!

nathan

இந்த 6 ராசிக்காரர்களுக்கு மற்றவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதை பார்த்தால் வயிறு எறியுமாம்…

nathan

நுரையீரல் புற்றுநோயின் தாக்கத்தில் இருந்து நம்மைப் பாதுகாக்கும் உணவுகள்!

nathan

நடிகை மஹிமா நம்பியார் தன் டயட் கான்சியஸ்!

nathan

இதோ உங்களுக்காக டிப்ஸ்.! இளம் பெண்கள் கவனத்திற்கு,. இரவில் உறங்கும் போது இதை மறவாதீர்…

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…ஐயோ குழந்தை அழுதே! என்ன செய்யலாம்?

nathan

தெரிஞ்சிக்கங்க… உடலில் நீர்ச்சத்து குறைந்தால்…?

nathan

நீரழிவின் எதிரி செர்ரி

nathan

நமது உடலில் அதிகமாக பாக்டீரியாக்கள் சேரும் உடல் பாகங்கள் இவை தான்!!!

nathan