24.4 C
Chennai
Thursday, Jan 29, 2026
mushroom poriyal
சமையல் குறிப்புகள்

சுவையான காளான் பொரியல்

பலருக்கு காளான் மிகவும் விருப்பமான உணவுப் பொருளாக இருக்கும். அத்தகைய காளானை எந்த மாதிரி சமைத்து சாப்பிட்டாலும் அதன் சுவை அருமையாக இருக்கும். அதிலும் காளானை பொரியல் செய்து சாப்பிட்டால், இன்னும் சூப்பராக இருக்கும்.

இங்கு காளானை எப்படி பொரியல் செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து அதன்படி செய்து சுவைத்து மகிழுங்கள்.

Mushroom Poriyal
தேவையான பொருட்கள்:

காளான் – 1 பாக்கெட்
சின்ன வெங்காயம் – 5
தக்காளி – 1
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
உப்பு – தேவையான அளவு

தாளிப்பதற்கு…

கடுகு – 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன்
சீரகம் – 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

முதலில் காளானை நறுக்கி, சுடுநீரில் போட்டு ஒருமுறை அலசிக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளிக்க வேண்டும்.

பின்பு அதில் வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்கி, பின் தக்காளி சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

பிறகு அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு வதக்கி, காளான் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி, மசாலா அனைத்தும் காளானுடன் ஒன்று சேர வாணலியை மூடி, வேக வைத்து இறக்கினால், காளான் பொரியல் ரெடி!!!

Related posts

சுவையான வெந்தயக்கீரை இஞ்சி ரொட்டி

nathan

paneer recipe – பன்னீர் கிரேவி

nathan

ஆஹா பிரமாதம்! செட்டிநாடு கத்திரிக்காய் சாப்ஸ்

nathan

சுவையான வெஜிடேபிள் அவல் உப்புமா

nathan

அரைக்கீரை கடைசல்

nathan

சுவையான பட்டர் குல்ச்சா

nathan

பன்னீர் 65

nathan

சுவையான ஆப்பம்… இப்படி அரிசி அரைச்சு சுடுங்க!

nathan

தினமும் 2 கப் பால் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

nathan