26.1 C
Chennai
Thursday, Nov 14, 2024
menfacepack
ஆரோக்கியம் குறிப்புகள்

ஆண்களே தெரிஞ்சிக்கங்க… முகத்தில் உள்ள கருமையைப் போக்கும் சில எளிய இயற்கை வழிகள்!

பெண்களைப் போலவே ஆண்களும் தங்கள் சருமத்தின் மீது அதிக அக்கறைக் கொண்டுள்ளனர். பெண்கள் மட்டும் பருக்கள், கருவளையங்கள், சரும சுருக்கங்கள், வெயிலால் சருமம் கருமையாவது போன்ற பிரச்சனைகளை சந்திப்பதில்லை, ஆண்களும் தான். ஆனால் ஆண்களுக்கு போதுமான நேரம் கிடைக்காததால் அல்லது சோம்பேறித்தனத்தால், அவர்களால் தங்கள் சருமத்திற்கு போதுமான பராமரிப்பைக் கொடுக்க முடிவதில்லை.

Home Remedies For Men To Remove Sun Tan In Tamil
சில ஆண்கள் தங்கள் சருமத்திற்கு அழகு நிலையங்களுக்குச் சென்று தங்கள் சருமத்திற்கு பராமரிப்புக்களைக் கொடுப்பார்கள். ஆனால் அழகு நிலையங்களுக்கு சென்று தான் ஆண்கள் தங்கள் சருமத்தில் உள்ள கருமையைப் போக்க முடியும் என்பதில்லை.

பெண்களைப் போலவே ஆண்களும் வீட்டில் உள்ள சில பொருட்களைக் கொண்டு சருமத்திற்கு பராமரிப்பு கொடுத்து வந்தால், சருமத்தில் உள்ள கருமையை எளிதில் போக்கலாம். அதுவும் கோடை வெயிலால் கருமையான சருமத்தை போக்க குளிர்காலம் சிறந்த பருவம் என்பதால், இக்காலத்தில் தவறாமல் சருமத்திற்கு பராமரிப்புக்களைக் கொடுத்து வந்தால், எளிதில் சருமத்தை வெள்ளையாக்கலாம்.

தேன் மற்றும் எலுமிச்சை மாஸ்க்

சரும கருமையைப் போக்குவதில் எலுமிச்சை மிகச்சிறந்த பொருள். ஏனெனில் இதில் ப்ளீச்சிங் பண்புகள் இயற்கையாகவே உள்ளது. அதற்கு ஒரு டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றில் ஒரு டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 30 நிமிடம் கழித்து, குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.

கடலை மாவு மற்றும் மஞ்சள் மாஸ்க்

கடலை மாவு மற்றும் மஞ்சள் ஆகிய இரண்டுமே சருமத்தின் நிறத்தை அதிகரிக்கும் சிறப்பான பொருட்கள். ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் கடலை மாவு மற்றும் 1/2 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து, பால் அல்லது தயிர் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் அல்லது கருமையான பகுதியில் தடவி நன்கு காய்ந்த பின் வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும்.

தயிர் மற்றும் தக்காளி மாஸ்க்

தக்காளியில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் சரும நிறத்தை அதிகரிக்க உதவும். தயிரில் உள்ள லாக்டிக் அமிலம், சருமத்தை மென்மையாக்கும். ஆகவே இந்த இரண்டு பொருட்களைக் கொண்டு சருமத்திற்கு மாஸ்க் போட்டால் ஒரு நல்ல பலன் கிடைக்கும். அதற்கு ஒரு பௌலில் நற்பதமான தக்காளி சாறு மற்றும் 2 டேபிள் ஸ்பூன் தயிர் சேர்த்து கலந்து, கருமையாக இருக்கும் முகம், கை, கால் பகுதியில் தடவி 20 நிமடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காயில் உள்ள குளிர்ச்சி பண்புகள் சருமத்தின் கருமையை நீக்க உதவும். அதற்கு வெள்ளரிக்காயை அரைத்து சாறு எடுத்து, அதை ஒரு பஞ்சுருண்டையில் நனைத்து, சருமத்தில் தடவி நன்கு காய்ந்ததும், முகத்தைக் கழுவ வேண்டும். வேண்டுமானால், வெள்ளரிக்காய் சாறுடன் சிறிது எலுமிச்சை சாற்றினையும் சேர்த்து கலந்து கொள்ளலாம்.

உருளைக்கிழங்கு சாறு

உருளைக்கிழங்கிலும் ப்ளீச்சிங் பண்புகள் உள்ளன. ஆகவே பெரும்பாலும் இது கருவளையங்களைப் போக்க பயன்படுத்தப்படுகிறது. இத்தகைய உருளைக்கிழங்கைத் துருவி சாறு எடுத்து, அதை பாதிக்கப்பட்ட கருமையான பகுதிகளில் தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், சருமத்தில் உள்ள கருமை மாயமாய் மறையும்.

ஓட்ஸ் மற்றும் மோர்

ஓட்ஸ் சருமத்தில் உள்ள அழுக்குகளை வெளியேற்றி, சரும நிறத்தை மேம்படுத்திக் காட்டுவதில் சிறந்தது. மோரில் லாக்டிக் அமிலம் உள்ளது. இது சரும நிறத்தை மேம்படுத்தவும், சருமத்தை மென்மையாக்கவும் உதவும். அதற்கு 2 டீஸ்பூன் ஓட்ஸை மோரில் சிறிது நேரம் ஊற வைத்து, பின் அதில் ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, முகம் மற்றும் கை, கால்களில் தடவி 25-30 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

துவரம் பருப்பு, கற்றாழை மற்றும் தக்காளி மாஸ்க்

துவரம் பருப்பு சரும கருமையைப் போக்குவதில் சிறந்த பொருள். தக்காளி சாறு சரும நிறத்தை மேம்படுத்தும் மற்றும் கற்றாழையும் சரும நிறத்தை அதிகரிக்கும். இந்த மூன்றையும் கொண்டு ஃபேஸ் மாஸ்க் போட்டால், சருமம் பிரகாசமாக ஜொலிக்கும். அதற்கு 3 டீஸ்பூன் துவரம் பருப்பை நீரில் சில மணிநேரம் ஊற வைத்து, பின் அதை அரைத்து பேஸ்ட் செய்து, அத்துடன் ஒரு டீஸ்பூன் கற்றாழை ஜெல் மற்றும் 2 டீஸ்பூன் தக்காளி சாறு சேர்த்த கலந்து, கருமையாக உள்ள முகம், கை, கால், கழுத்துப் பகுதியில் தடவி 25-30 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரைப் பயன்படுத்தி மென்மையாக மசாஜ் செய்து கழுவ வேண்டும்.

மேலே கொடுக்கப்பட்டுள்ள ஃபேஸ் மாஸ்க்குகளை சருமத்திற்கு தினமும் போட்டு வந்தால், வெயிலால் கருமையான சருமத்தை விரைவில் வெள்ளையாக்கலாம்.

Related posts

வயிற்றில் உள்ள கெட்ட கொழுப்புக்களைக் கரைக்கணுமா?

nathan

முதலிரவு அன்று ஏன் தம்பதிகளுக்கு பால் கொடுத்து படுக்கையறைக்கு அனுப்புகிறார்கள் தெரியுமா?

nathan

சூப்பர் டிப்ஸ் உடல் எடையை குறைக்கும்., சுரைக்காய் ஜூஸ்..!

nathan

கொரோனா சிகிச்சைக்கா மாத்திரை! வெளிவந்த மகிழ்ச்சியான தகவல்!

nathan

கோடை காலத்தில் ஏற்படும் இருமல் பாதிப்பு -இதோ எளிய நிவாரணம்

nathan

மேகி உண்ணுவது உண்மையிலேயே உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கானதா?

nathan

வாழ்க்கையை புரட்டிப்போட்ட சம்பவம் -70,000 பவுண்டுகள் மதிப்பிலான கிரிப்டோகரன்சியுடன் ஓய்வு பெற திட்டமிட்ட தம்பதி

nathan

பசியால் வரும் உடல்நலக்குறைபாடுகள்

nathan

உங்களுக்கு தெரியுமா நமது ஆரோக்கியம் நம் நாக்கில்… உங்கள் நாக்கு உங்களின் ஆரோக்கியத்தைப் பற்றி சொல்லும்..!!

nathan