30.6 C
Chennai
Saturday, May 18, 2024
ht835
ஆரோக்கியம் குறிப்புகள்

சோற்றுக்கற்றாழை சாறு பருகுவதால் ஏற்படும் நன்மைகள் -தெரிஞ்சிக்கங்க…

சோற்றுக்கற்றாழையை சருமம் மற்றும் தலையில் தேய்ப்பதன் மூலம் ஏற்படும் நன்மைகளைப்பற்றி தெரிந்திருக்கலாம். சோற்றுக்கற்றாழை சாறு பருகுவதால் ஏற்படும் நன்மைகள் தெரியுமா?.

சோற்றுக்கற்றாழை சாறை பருகுவதால் நம் உடலுக்கு பல்வேறு நன்மைகள் ஏற்படுகின்றன. இதற்குக் காரணம், அதிலிருக்கும் வைட்டமின், மினரல் மற்றும் அமினோ அமிலங்கள் தான். இனி கற்றாழைச் சாறின் நன்மைகளைப் பற்றி பார்ப்போம். தினமும் சோற்றுக் கற்றாழை சாறு குடிப்பதால், நம் உணவினை ஜீரணிக்கும் அமைப்பு சுத்தம் செய்யப்படுகிறது.

இதனால் அஜீரணக் கோளாறுகள் ஏற்படுவதில்லை. மேலும், குடலையும் சுத்தம் செய்து மலச்சிக்கலையும் தடுக்கிறது. வயிற்றுப்போக்கு காலங்களில் அதனை குறைக்கவும் உதவுகிறது. உடலுக்குத் தேவையான சக்தியை தருவதிலும், உடல் எடையை ஒழுங்குபடுத்துவதிலும் இதன் பங்கு அதிகம். தினமும் இச்சாறை குடிப்பதால், உடலை நல்ல நிலையில் வைத்திருக்க முடியும். அதேபோல், உடல் சக்தியை அதிகரிக்கவும் முடியும்.

நாம் மேற்கொள்ளும் முறையற்ற உணவுப் பழக்கத்தால், நம் உடலில் பல பிரச்சனைகள் உருவாகின்றன. இதனால் உடலில் நச்சுப் பொருட்கள் உருவாகும் நிலை உள்ளது. இதனை நீக்கவும் இச்சாறு உதவுகிறது.மூட்டுகளை வலுப்படுத்துகிறது. இதனால் மூட்டு தசைகளில் ஏற்படும் வலி, கட்டி, வீக்கம், சுளுக்கு போன்றவற்றையும் இந்த சோற்றுக்கற்றாழையால் கட்டுப்படுத்தப்படுகிறது.

Related posts

உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் நமது தினசரி செயல்பாடுகள்!!!

nathan

தினமும் காலையில இத குடிங்க… நீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா?

nathan

பெண்களை மிரட்டும் மார்பகப் புற்றுநோய்

nathan

இந்த மாதிரி இருக்குறவங்கள கல்யாணம் பண்ணிக்கிட்டா…

nathan

கொழுப்பை குறைக்கும் உணவுகள்

nathan

ஆண்மை குறைபாட்டினை நீக்கும் பூசணி!…

nathan

அதிக பேராசைக் கொண்ட ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா?தெரிஞ்சிக்கங்க…

nathan

காயமடைந்த நாய்க்கான சில எளிய கால்நடை பராமரிப்பு டிப்ஸ்…

nathan

முடி 5 மடங்கு வேகமாக வளரனுமா? அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan