31.7 C
Chennai
Friday, Aug 28, 2026
ஆரோக்கியம் குறிப்புகள்

மரணம் ஏற்படப் போகிறது என காகம் உணர்த்தும் அறிகுறிகள்!

பறவைகளில் சனி பகவானின் வாகனம் காகம். இந்த காகம் பொதுவாக காணப்படும் பறவைகளில் ஒன்றாகும். இந்தியாவில், அனைத்து உயிரினங்களும் முக்கியமானதாகக் கருதப்படுகின்றன. தாவரங்கள், விலங்குகள் மற்றும் பறவைகள் குறிப்பாக முக்கியத்துவம் வாய்ந்தவை.

 

அதில் காகங்கள் எமனின் தூதர்களாகக் கருதப்படுகின்றன. என்ன நடக்கப் போகிறது என்பதை காகங்களுக்கு முன்கூட்டியே தெரியும் என்றும் கூறப்படுகிறது. அதனால்தான் காகத்தின் அறிகுறிகளை நீங்கள் புறக்கணிக்கக்கூடாது. காகங்களுடன் தொடர்புடைய நல்ல மற்றும் கெட்ட சகுனங்களைப் பார்ப்போம்.

சகுனம் #1
சகுன சாஸ்திரத்தின் படி, ஒரு காகம் உங்கள் வீட்டின் பால்கனியில் அமர்ந்து கரைத்தால், உங்கள் வீட்டிற்கு விருந்தினர்கள் வரவிருக்கிறார்கள் என்று அர்த்தம். இது அனைவருமே அறிந்த காகம் தொடர்பான தகவல்களில் ஒன்றாகும்.

 

சகுனம் #2

சகுன சாஸ்திரத்தின் படி, ஒரு காகம் மதிய வேளையில் வடக்கு திசையை நோக்கி கரைத்தால், அது நல்லது என்று கருதப்படுகிறது. அதேப்போல் காகம் கிழக்கு திசையை நோக்கி சப்தத்தை எழுப்பினால், அதுவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது.

இந்த 5 ராசிக்காரங்களுக்கு இந்த ஆண்டின் வரவிருக்கும் மாதங்களில் பண மழை எக்கச்சக்கமாக பொழியுமாம்! இந்த 5 ராசிக்காரங்களுக்கு இந்த ஆண்டின் வரவிருக்கும் மாதங்களில் பண மழை எக்கச்சக்கமாக பொழியுமாம்!

சகுனம் #3

நீங்கள் எங்கேனும் வெளியே சுற்றுலா அல்லது பயணம் செய்ய தயாராகி கிளம்பும் போது, திடீரென்று உங்கள் வீட்டு ஜன்னல் அல்லது பால்கனியில் காகம் வந்து கரைத்தால், நீங்கள் மேற்கொள்ளும் பயணம் நன்றாக அமையும் என்று அர்த்தம்.

சிம்ம ராசியில் சுக்கிரன் அஸ்தமனமாவதால் அடுத்த 3 மாதம் இந்த 8 ராசிக்காரர்களின் வாழ்க்கை பிரகாசமா இருக்கும்..சிம்ம ராசியில் சுக்கிரன் அஸ்தமனமாவதால் அடுத்த 3 மாதம் இந்த 8 ராசிக்காரர்களின் வாழ்க்கை பிரகாசமா இருக்கும்..

சகுனம் #4

உங்கள் வீட்டு பால்கனியில் காக்கைகள் கூட்டமாக இருந்து கரைத்தால், அது நல்ல அறிகுறி அல்ல. இது உங்களுக்கு ஏதோ அசம்பாவிதம் நடக்கப் போகிறது என்பதை உணர்த்துகிறது. குறிப்பாக இது உங்கள் குடும்பம் சிக்கலில் சிக்கலாம் அல்லது நீங்கள் ஏதோ நோய்வாய்ப்படலாம் என்று அர்த்தம்.

சகுனம் #5

காகம் உங்கள் வீட்டின் தெற்கு திசையில் அமர்ந்து சத்தம் எழுப்பினால், அது கெட்ட சகுனமாக கருதப்படுகிறது. அதுவும் இது உங்கள் முன்னோர்கள் உங்களால் மகிழ்ச்சியடையவில்லை என்றும், உங்களுக்கு பித்ரு தோஷம் இருக்க வாய்ப்புள்ளது என்றும் அர்த்தம்.

சகுனம் #6

சகுன சாஸ்திரத்தின் படி, காகம் தண்ணீர் குடிப்பதை பார்ப்பது நல்லது. முக்கியமாக இந்நிகழ்வை கண்டால், பணம் கையில் வந்து சேரும். அதுவும் ஒருவர் முக்கியமான வேலைக்கு வெளியே செல்லும் போது காகம் தண்ணீர் குடிப்பதைக் கண்டால், அந்த வேலையில் நிச்சம் வெற்றி கிடைக்குமாம்.

சகுனம் #7

காகம் ஒரு ரொட்டித் துண்டை தூக்கிக் கொண்டு செல்வதை ஒருவர் கண்டால், அது நல்ல சகுனம். அதுவும் இந்நிகழ்வை காண்பவரின் பெரிய ஆசைகள் நிறைவேறும் என்பதற்கான அறிகுறி தான் இது.

சகுனம் #8

சகுன சாஸ்திரத்தின் படி, காகமானது ஒருவரின் வாகனம், காலணி அல்லது உடலை தனது சிறகு கொண்டு உரசி சென்றால், மரணம் ஏற்பட வாய்ப்புள்ளது என்று அர்த்தம்.

Related posts

தலைக்கு போடும் ஹேர் டை உடலுக்கு ஏற்படுத்தும் பாதிப்புகள்

nathan

பெண்கள் பால் குடித்துக் கொண்டே தாய்ப்பால் கொடுத்தால் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்குமா?தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

உங்களுக்கு தெரியுமா இரத்த அழுத்தத்தை குறைக்கும் கொத்தமல்லி பொடி

nathan

உங்களுக்கு தெரியுமா பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் குடித்தால் இந்த பிரச்சனைகள் வரும்…

nathan

அடிக்கடி நுரையீரலில் பாதிப்பு ஏற்பட்டுக்கொண்டிருந்தால் நுரையீரல் புற்றுநோய் உருவாகவும் வாய்ப்புண்டு. நுரையீரல் பாதுகாப்பிற்கு நாம் செய்ய வேண்டியவை.!

nathan

குழந்தைகள் சிறுவயது முதலே உயரமாக வளர இந்த உணவுகளை கொடுத்தால் போதுமாம் ?

nathan

கோடை காலத்தில் யார் எவ்வளவு தண்ணீர் குடிக்கலாம்?

nathan

இந்த டூத் பேஸ்ட் ஈறு நோய்கள் மற்றும் பற்களில் உள்ள மஞ்சள் கறைகளைப் போக்கும் எனத் தெரியுமா?

nathan

குழந்தை நோய் தொற்றில் இருந்து பாதுக்க

nathan