ஆரோக்கியம் குறிப்புகள்

9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் அதிர்ஷ்டத்தைப் பெற எளிய வழி இதோ

எண் 9, 18, 27 இதில் ஏதேனும் ஒரு தேதியில் பிறந்தவர்கள் செவ்வாய் பகவானின் ஆசியால் எப்படிப்பட்ட பலன்களைப் பெறுவார்கள். உடல் எண் எப்படி அமைந்தால் கூடுதல் பலனைப் பெற்றிட முடியும். 9ல் பிறந்தவர்களின் எதிர்காலம் சிறப்பாக அமைய என்ன செய்ய வேண்டும் என்பதை எண் கணித ஜோதிட நிபுணர் ஆர்.பால்ராஜ் அவர்கள் இந்த பதிவில் விரிவாக விளக்கம் அளித்துள்ளார்.

-9-
எண் 9 இன் சிறப்புக்களை இந்த அத்தியாயத்தில் காண்போம். எண் 9 செவ்வாயின் ஆதிக்கத்திற்கு உட்பட்டது. செவ்வாய் என்பது நமது பூமிக்கு அடுத்தபடியாக வானவெளியில் இடம் பெற்றுள்ள கிரகமாதலால் இந்த கிரகத்தின் தாக்கம் பூமியில் வாழும் எல்லா உயிரினங்களின் மீதும் ஏற்படுகின்றது.

ஒரு மனிதனுக்கு உயிர், உடல், புத்தி, எண்ணங்கள் (சிந்தனைகள்), வார்த்தைகள், செயல்கள் என்கின்ற விய பரிணாம வளர்ச்சி வயதுக்கு தக்கபடி ஏற்படுகின்றது. உயிர் சூரியனென்றும்; உடல், புத்தி, மனது என்பவை சந்திரனாகவும்; வார்த்தைகளும், செயல்களும் செவ்வாய் என்றும் ஜோதிட நூல்கள் கூறுகின்றன. நல்ல பேச்சும், நல்ல செயல்களும் நிறைந்த மனிதனுக்கு ஜாதகத்தில் செவ்வாய் பலமாக இருப்பார். மேலும் தைரியத்திற்கும் செவ்வாய் காரகனாக உள்ளார்.

உங்கள் அதிர்ஷ்ட எண் எளிதாக கண்டுபிடிப்பது எப்படி தெரியுமா? – எண் கணித பாடம் 9

 

9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் -பேச்சாற்றல் மிக்கவர்களாகவும், செயல் வீரர்களாகவும், தைரியசாலிகளாகவும் இருப்பார்கள் என்பதை திட்டவட்டமாகக்கூறலாம். எந்த எண்ணில் பிறந்தவராக இருந்தாலும் அவர்களுக்கு 9ம் எண்ணில் பிறந்தார் நண்பராக அமைந்தால் இவரின் துணை கொண்டு எல்லா வகையிலும் பெற்றி அடைத்திடலாம் என்பது உண்மை.

[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

9 ஆம் தேதியில் பிறந்தார்களுக்கு உயிர் எண் எதுவாக இருந்தாலும் கவலையில்லை. ஏனென்றால் தனித்து நின்று சாதிக்கின்ற எண் 9 ஆகும். பெயர் எண் மட்டும் 5,4,7 என்று அமையாமல் இருந்தால் வெற்றிகளை அடையலாம்.

9 ஆம் தேதியில் பிறந்தவர்களுக்கு உயிர் எண் தரும் பலன்
9-

9 ஆம் தேதியில் பிறந்தவர்கள் உயிர் எண் 1 ஆக அமைந்தால் ஆன்மிகத்தில் நாட்டம் உள்ளவர்களாக இருப்பார்கள், ரசாயனம் பௌதிகம் போன்ற துறைகளில் சாதிப்பார்கள்.

உயிர் எண் – 2 ஆக அமைந்தால் கட்டிடக்கலையில் சிறந்து விளங்குவர். உயிர் எண் 3 ஆக அமைந்தால் கல்வி சம்பந்தப்பட்ட துறைகளிலும், சட்டம், பாதுகாப்பு, போன்ற துறைகளிலும் சாதிக்கலாம்.

உயிர் எண் 4, 7, 8 என்று அமையப் பெற்றவர்கள் காவல் துறை, ராணுவம் போன்ற தேசத்தை காக்கும் பணியில் சிறந்து விளங்கலாம்.

உயிர் எண் 5, 6 என்று அமையப் பெற்றால் . உயர்கல்வி, இலக்கியம், தொழிற்கல்வி, சட்டவியல் பேன்ற துறைகளில் சிறந்து விளங்குவார்கள்.

8, 17, 26 ம் தேதிகளில் பிறந்தவர்கள் சாதிக்க இதோ வழி? – 8 தவிர்க்க வேண்டிய எண்ணா? எண் கணித விளக்கம்

18 மற்றும் 27 ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு மேலே குறிப்பிட்ட படியே உயிர் எண்கள் பலன் கொடுக்கும். எனவே தனிப்பட்ட பலன்களை நிர்ணயம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

9ம் தேதி பிறந்தவர்களில் அதிர்ஷ்டம்
9-

ஜனன கால ஜாதகத்தில் மேலும், விருச்சிகம் ஆகிய ராசிகளை லக்கினமாகவோ, சந்திரன் நிறை ராசியாகவோ அமையப் பெற்றவர்களுக்கு எண் 9 அதிர்ஷ்ட எண்ணாக அமைகிறது. அதேசமயம் லக்கினத்திலிருந்து. செவ்வாய் நல்ல நிலையில் அமர்ந்திருப்பதையும் உறுதி செய்துகொள்ள வேண்டும். ஜாதகத்தில் செவ்வாயானவர் ஆட்சி, உச்சம் மற்றும் நட்பு வீடுகளில் அமர்ந்திருந்தாலும் எண் 9 அதிர்ஷ்ட எண்ணாக அமையும்.

Numerology Number 2: அத்யாயம் 5 – உடல் எண்ணும் உயிர் எண்ணும் 2 ஆக அமைந்தவர்களின் வாழ்க்கை எப்படி இருக்கும்?

பொதுவாக ஜனன கால ஜாதகத்தின் படி ஆதிபத்திய பலமும், ஸ்தான பலமும் பெறுகின்ற கிரகங்களைத் தெரிந்து அதற்கான எண்களை அதிர்ஷ்ட எண்ணாக கணிப்பதும் ஜோதிடத்தில் ஓர் அங்கமாகும்.

அதிர்வு எண்கள் எதற்கு பயன்படும்? என்ற கேள்வி சிலருக்கு எழலாம்.

வேலை, தொழிலில் வெற்றி பெற

பெரிய தொழில் நிறுவனங்களைத் துவக்குபவர்கள் தேதிகளை தேர்வு செய்யவும்; நோமுகத்தேர்வுகளை நடத்துவதற்கும்; முக்கியமான முடிவுகளை வெளியிடவும் தகுந்த எண்களை துணை சொல்வதுண்டு.

வாகனங்களுக்கான அதிர்ஷ்ட எண்களாக பலர் ஜோதிடர்களிடம் கேட்பதுண்டு. சிலர் தங்களுடைய திருமண தேதி அதிர்ஷ்டமான எண்ணில் அமைய வேண்டுமென்று விரும்புவதுண்டு.

 

தானாக அமைந்துவிட்ட தேதியையே அதிர்ஷ்ட தேதியாக மாற்றிக் கொள்ள அந்த தேதிக்குரிய கிரகத்தையும், அந்த கிரகத்திற்குரிய தெய்வத்தையும், தேவதைகளையும் தொழுது நற்பலன்களை அடையலாம்.

samayam

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button