26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
11 1512967331
ஆரோக்கியம் குறிப்புகள்

பிரசவத்திற்கு பிறகு தளர்வான தொங்கும் சதைகளா?அப்போ இதை செய்யுங்கோ..!!

உங்களுடைய குட்டி குழந்தை பிறந்ததும் உங்களது உடலில் பல்வேறு ஆச்சரியமளிக்கும் மாற்றங்கள் நிகழும். பொதுவாக பெண்களுக்கு வயிற்று பகுதியானது குழந்தை பிறந்ததும் தொங்குவது போன்ற சருமத்துடன் இலகுவாக இருக்கும். இது போன்ற வயிறு நிச்சயமாக பல பெண்களுக்கு குழந்தை பிறந்ததும் நடக்க கூடிய ஒன்று தான்.

இந்த சினிமாக்களில் தான் குழந்தை பிறந்ததும் கூட வயிறு சாதாரணமாக இருக்கும். ஆனால் நிஜத்தில் இந்த வயிற்றை சரி செய்ய நீங்கள் சில காரியங்களை செய்தே ஆகவேண்டும். அதை விட இவ்வாறு இருப்பது ஆரோக்கியமான ஒன்று தான்.

உங்களது சதைபகுதியை இறுக்கமாக்கி, தட்டையான வயிற்றை பெற நீங்கள் ஒரு சில காரியங்களை செய்தாலே போதுமானது. இந்த பகுதியில் தட்டையான வயிற்றை பெற சில குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.

1. தாய்ப்பால் கொடுப்பது

உங்களால் எத்தனை நாட்கள் தாய்ப்பால் கொடுக்க முடியுமோ அத்தனை நீண்ட நாட்களுக்கு தாய்ப்பால் கொடுங்கள். ஆறு மாதம் கொடுத்தாலே போதும் என்று நிறுத்திவிடாதீர்கள். தாய்ப்பால் கொடுக்காத பெண்களை விட தாய்ப்பால் கொடுக்கும் பெண்களின் உடலில் இருந்து அதிக கலோரிகள் குறைக்கப்படுகிறது.

நீங்கள் இன்னும் கொஞ்சம் உடல் எடையை குறைப்பதால் உங்களது சருமம் பழைய நிலைக்கே தனது இறுக்க தன்மையை அடைந்துவிடும். மேலும் சதைப்பகுதிகளும் வலிமை பெறும்.

2. சருமம் சுவாசிக்க வேண்டும்

உங்களது சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீங்கி சருமத்தை சுவாசிக்க வைக்க, நீங்கள் பாடி ஸ்கிரப்பை பயன்படுத்தி உங்களது சருமத்தில் வட்டவடிவத்தில் மசாஜ் செய்யுங்கள். நீங்கள் இதனை விரல்களை கொண்டோ அல்லது பாடி ஸ்கிரப்பர் பயன்படுத்தியோ செய்யலாம். ஆனால் மிக அழுத்தம் கொடுத்து கண்டிப்பாக மசாஜ் செய்ய கூடாது. மென்மையான மசாஜ் தான் செய்ய வேண்டும்.

 

3. பட்டினி வேண்டாம்

உங்களது உடல் எடையை சீக்கிரமாக குறைக்க வேண்டும் என்பதற்காக நீங்கள் கண்டிப்பாக பட்டினி இருக்க கூடாது. இது உங்களது உடல் எடையை நிச்சயமாக மிக மோசமானதாக்கும். எனவே உடல் எடையை குறைப்பதற்காக குறைவாக சாப்பிடும் பழக்கத்தை நீங்கள் கைவிட வேண்டியது அவசியமாகும்.

4. அந்த கால வழக்கம்

அந்தக் காலத்து வழக்கப்படி வயிற்றில் துணியை இறுகக் கட்டுவதைத் தவிர்க்கவும். அதன் விளைவால் முதுகுவலி வரலாம். பிரசவத்துக்குப் பிறகு விரிந்த தசைகளில் எலாஸ்டிக் தன்மை போய் விடும். அதைத் திரும்ப டைட்டாக்க பயிற்சிகளும், கொழுப்பில்லாத உணவுகளுமே உதவும். குழந்தையின் பெயரைச் சொல்லி, காலத்துக்கும் அதிகம் சாப்பிடுவதும், பிரசவமான உடம்பு என மாதக் கணக்கில் ஓய்வெடுப்பதும் தவிர்க்கப்பட வேண்டும்.

5. உடல் வறட்சியடையாமல் இருக்க

உங்களது உடலின் உள்புறம் தண்ணீரின் தேவை அதிகம் உள்ளது. நீங்கள் அடிக்கடி தண்ணீரை அதிகமாக குடிக்க வேண்டும். நாள்முழுவதும் பல முறை தண்ணீர் குடிக்க வேண்டியது மிகவும் முக்கியமான ஒன்றாகும். இதனால் உங்களது சருமத்திற்கு தேவையான ஈரப்பதம் கிடைப்பதோடு, உங்களது சருமம் இறுகிய தன்மை பெறும். இரத்த ஓட்டமும் அதிகரிக்கும். சருமம் பொலிவு பெறும்.

6. புரோட்டின்

புரோட்டின் உணவுகளில் உங்களது சருமம் இறுகுவதற்கு தேவையான கோலஜின் உள்ளது. நீங்கள் விலங்குகளில் இருந்து கிடைக்கும் மீன், முட்டை, சிக்கன் போன்றவற்றையும் சாப்பிடலாம். நீங்கள் சைவமாக இருந்தால், பீன்ஸ், பால், பச்சை நிற இலையுடைய காய்கறிகள் போன்றவற்றை சாப்பிடுவது சருமத்திற்கு நன்மையை அளிக்கும்.

7. மாய்சுரைசர்

உங்களது சருமத்திற்கு ஏதேனும் ஒரு மாய்சுரைசர் க்ரீமை பயன்படுத்துவதால் உங்களது உடலில் உள்ள இரத்த ஓட்டம் அதிகரித்து சருமம் இறுக்கமடைகிறது. மேலும் நீங்கள் மாய்சுரைசர் பயன்படுத்தும் போது அதில் கோலாஜன், விட்டமின் ஏ, சி, இ, கே போன்றவை இருக்குமாறு பார்த்துக் கொள்வது நல்லது. அல்லது நீங்கள் தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் போன்றவற்றை பயன்படுத்தி கூட தீர்வு காணலாம்.

8. உடற்பயிற்சி

நீங்கள் தினசரி உடற்பயிற்சி செய்ய வேண்டியது அவசியமாகும். புஷ் அப் பயிற்சிகள் நடைப்பயிற்சிகள் போன்றவை உங்களது சருமதிற்கு நன்மையை கொடுக்கும். அதற்காக உங்களது உடலை அதிகமாக நீங்கள் வருத்திக் கொள்ள கூடாது. உங்களுக்கு சிசேரியன் முறை பிரசவம் என்றால் உடலை அதிகமாக வருத்திக் கொள்ள கூடாது. எனவே நீங்கள் உடற்பயிற்சிக்கு முன்னர் எந்த மாதிரியான பயிற்சிகளை செய்யலாம் என்பது பற்றி மருத்துவரிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.

9. ஓய்வு அவசியமா?

சுகப்பிரசவமோ, சிசேரியனோ… எதுவானாலும், பிரசவத்துக்குப் பிறகு பெண்களுக்கு 6 வார கால ஓய்வு அவசியம். சிசேரியன் செய்தவர்கள், மாதக் கணக்கில் ஓய்வெடுக்க வேண்டும், எந்த வேலை களையும் செய்யக் கூடாது என்பதெல்லாம் இன்று மாறி விட்டது. இவர்களும் 6 வாரங்களுக்குப் பிறகு வழக்கமான வேலைகளைச் செய்யலாம்.

படி ஏறலாம். எடை தூக்கலாம். எல்லாம் செய்யலாம். பிரசவித்த பெண்களின் கர்ப்பப் பை சுருங்கத்தான் அந்த 6 மாத கால ஓய்வு. எனவே சிசேரியன் செய்தவர்களுக்குத்தான் வயிறு பெரிதாகும் என்கிற எண்ணமும் யாருக்கும் வேண்டாம்.

10. நிலை மாறும் :

குழந்தை வளர, வளர வயிற்றுத் தசைகள் விரிகின்றன. இடுப்பளவும் மாறுகிறது. பிரசவத்துக்குப் பிறகு பெருத்துப் போன அந்த வயிற்றையும், இடுப்பையும் மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வரலாம். ஆனால், பெரும்பாலான பெண்கள் அதற்கான முயற்சிகளை எடுப்பதில்லை.

11. பேல்ட் அணியலாமா?

வயிற்றைக் குறைக்க பெல்ட் அணியலாமா என்கிற சந்தேகம் பலருக்கும் உண்டு. பெல்ட் என்பது கர்ப்பத்தின் போது பெருத்து, பிரசவத்துக்குப் பிறகு தளர்ந்து, தொய்வடைந்த வயிற்றுக்கு ஒருவித சப்போர்ட் தருமே தவிர, தொப்பையைக் குறைக்காது.

Related posts

பெண்ணியம் பேசும் இந்த காலக்கட்டத்திலும்..விதவைப்பெண்களுக்கு இந்தியாவில் நடத்தப்பட்ட கொடுமைகள்

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க… ஃபாஸ்ட் புட் உணவு உண்பதை ஏன் முற்றிலும் தவிர்க்க வேண்டும்?

nathan

அதிகாலை வெந்நீர்,ஆஹா பலன்கள்!

nathan

வியர்வை நாற்றம் போக்க வழிமுறைகள்

nathan

சூரியனின் ஒளி தருமே சூப்பரான வைட்டமின்!

nathan

எக்ஸாம் வந்தாலே மண்டை குடையுதா?… உங்களுக்குதான் இந்த விஷயம்

nathan

விண்ணை முட்டும் விஞ்ஞானம் தொட்டுவிட்ட நாம் இன்னும் பேச தயங்கும் தலைப்பு தாம்பத்யம். தாம்பத்திய “இன்பத்தின் உச்சக்கட்டம்”

nathan

வாரம் ஒருநாள் டயட்டால் இத்தனை நன்மைகளா????

sangika

பிராணாயாமம் பயிற்சிக்கு கடைபிடிக்க வேண்டியவை

nathan