ஆரோக்கியம் குறிப்புகள்

பெண்களே தெரிஞ்சிக்கங்க…பச்சிளம் குழந்தையை குளிக்க வைக்கும் முறை

பச்சிளம் குழந்தையை குளிக்க வைப்பதற்கு இளம் தாய்மார்கள் தயங்குவார்கள். மென்மையான தசைகள் சூழ்ந்திருப்பதால் குழந்தையை கையாளும்போது ஏதேனும் பாதிப்பு நேர்ந்துவிடுமோ? என்ற கவலை அவர்களிடத்தில் எட்டிப்பார்க்கும். குழந்தையை எப்படி குளிக்க வைப்பது? எந்த நேரத்தில் குளிக்க வைப்பது? என்ற குழப்பமும் உண்டாகும்.

பருவ கால நிலையை பொறுத்து குழந்தையை குளிக்க வைக்கும் நேரத்தை தீர்மானிக்கலாம். குளிர் காலங்கள், மழை காலங்களில் 8 மணிக்கு முன்பாக குழந்தையை குளிப்பாட்டுவதை தவிர்க்க வேண்டும். வெயில் பரவ தொடங்கி குளிர் தன்மை குறைந்த பிறகு குளிப்பாட்டுவதே நல்லது. அதுபோல் வெப்பம் அதிகரிக்கும் கோடை காலங்களிலும், மிதமான வெப்பம் நிலவும் காலங்களிலும் காலை 9 மணி முதல் 10 மணிக்குள் குளிப்பாட்டலாம்.

குழந்தையை குளிப்பாட்டுவதற்கு முன்பு ஒருசில விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். குளிப்பதற்கு முன்பு எதுவும் சாப்பிடக்கூடாது என்பார்கள். குழந்தைக்கும் இது பொருந்தும். தாய்ப்பால் கொடுத்ததும் குழந்தையை குளிக்க வைக்கக்கூடாது. குழந்தையை குளிப்பாட்டிய பிறகு தாய்ப்பால் கொடுத்து தூங்க வைக்கலாம்.

குழந்தையின் உடலில் எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்துவிட்டு குளிப்பாட்டுவதும் அதன் ஆரோக்கியத்தை வலுப்படுத்தும். நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், பாதாம் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் இவைகளில் ஏதேனும் ஒன்றை சிறிதளவு சூடாக்கி, ஓரளவு ஆறவைத்து குழந்தையின் உடலில் தடவி மசாஜ் செய்வது சிறப்பானது. ஓரிரு நாட்கள் இடைவெளியில் எண்ணெய் மசாஜ் செய்து வரலாம்.

குழந்தையை தினமும் குளிப்பாட்டுவதுதான் நல்லது. ஏனெனில் குழந்தையின் உடலில் தோல் உரிந்து புதிய தோல் உருவாகிக்கொண்டே இருக்கும். தினமும் குளிக்கவைத்து சருமத்தை தூய்மையாக பராமரித்து வந்தால் குழந்தையின் வளர்ச்சி ஆரோக்கியமாக இருக்கும்.

அதேவேளையில் குளிர் காலத்தில் சளி, இருமல் பிரச்சினை குழந்தைக்கும் ஏற்படக்கூடும் என்பதால் ஒரு நாள் விட்டு ஒரு நாள் குளிப்பாட்டலாம். தண்ணீரை சூடாக்கி குழந்தையின் உடல் ஏற்றுக்கொள்ளும் வகையில் ஆறவைத்து குளிப்பாட்டி விடலாம்.

Courtesy: MalaiMalar

Related posts

ராசிப்படி இந்த ‘ஒரு பொருள்’ உங்க கூடவே இருந்தால், அதிர்ஷ்டம் எப்பவுமே உங்க கூட இருக்குமாம்…

nathan

கால்சியம் குறைவா இருக்கா ஜூஜுபி சாப்பிடுங்க

nathan

ஆண்கள் சாதாரணமாக நினைக்கக்கூடாத சில ஆரோக்கிய பிரச்சனைகள்!!!

nathan

உங்க வெயிட்டை குறைக்கறதுக்கு…இந்த 7 விஷயம் மட்டும் போதுங்க…

nathan

சூப்பர் டிப்ஸ்! இரண்டே வாரத்தில் எடையைக் குறைக்க உதவும் சிறந்த ஒர்க்-அவுட்கள்!!!

nathan

வியர்வையை தடுக்கலாம்

nathan

உங்களுக்கு தெரியுமா! அல்சர் இருப்பவர்கள் சாப்பிட வேண்டிய மற்றும் சாப்பிடக் கூடாத உணவுகள்!

nathan

அனைத்து நோய்களுக்கும் ஒரே நிவாரணி தினமும் ஒரு செவ்வாழை!

nathan

கன்னி ராசி உத்திரம் நட்சத்திரம் குணங்கள்

nathan