26.1 C
Chennai
Thursday, Nov 14, 2024
ci 152 1
ஆரோக்கியம் குறிப்புகள்

லெமன் நீரால் கிடைக்கும் 8 அற்புதமான நன்மைகள் பற்றித் தெரியுமா? தெரிஞ்சிக்கங்க…

நமது உடல் 60% தண்ணீரால் ஆனது. அதனால் தான் தண்ணீர் என்பது நமக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. சில நாட்கள் தொடர்ந்து சாப்பிடாமல் கூடு நம்மால் இருந்துவிட முடியும். ஆனால் தண்ணீர் குடிக்காமல் இருக்க முடியாது.

1. 8 கிளாஸ் தண்ணீர்

இந்த தண்ணீர் தான் நமது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுதல் , போதுமான நீர்ச்சத்து மற்றும் உடலுக்கு தேவையான ஆற்றல் போன்றவற்றை தருகிறது. ஒரு சராசரி மனிதன் ஒரு நாளைக்கு 8 அவுன்ஸ் கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும். உங்களால் வெறும் தண்ணீரை குடிக்கவில்லை என்றால் ஜூஸ், டீ போன்ற வடிவங்களில் எடுத்து கொள்ளுங்கள்.

2. லெமன் ஜூஸ்

அதிலும் லெமன் ஜூஸ் உங்களுக்கு மிகவும் நல்லது. லெமன் ஒரு சிட்ரஸ் பழம். பொதுவாக சிட்ரிக்அமிலத்தில் அதிக அளவு ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. அவை நம்முடைய உடலில் உள்ள நச்சு செல்களிலிருந்து நம்முடைய உடலைப் பாதுகாக்கிறது.

3. சத்துக்கள்

எலுமிச்சையில் அதிக அளவில் பொட்டாசியம், வைட்டமின் ஏ, பி,சி,டி ஆகியவை நிறைந்துள்ளன. அதோடு கால்சியமும் மக்னீசியம் நிறைந்திருக்கும் பழங்களில் மிக முக்கியமானது எலுமிச்சை. அத்தகைய சருமம் தலைமுடி முதல் உடல் எடை குறைத்தல், புற்றுநோய்க்கு மருந்து, நோய்த்தொற்றை சரிசெய்தல் ஆகியவற்றுக்கு எப்படி தீர்வாக அமைகிறது என்பது பற்றி பார்க்கலாம்.

4. சருமப் புத்துணர்வு

நீங்கள் உங்கள் சருமத்தை அழகாக்க புத்துணர்வாக வைத்து இருக்க நிறைய பியூட்டி பொருட்களைப் பயன்படுத்தி பணத்தை செலவழிப்பீர்கள். ஆனால் உங்கள் முகத்தை புத்துணர்வாக வைத்திருக்க வெறும் லெமன் வாட்டர் போதும். இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், விட்டமின்கள் சி போன்றவை சரும கொலாஜனை வலிமையாக்கி சருமத்திற்கு புத்துணர்வு அளிக்கிறது.

சில சரும பராமரிப்பு பொருட்களில் இந்த விட்டமின் சி, ப்ளோனாய்டுகள் அதிகமாக சேர்க்கப்படும்.

ஆனால் இந்த லெமன் ஜூஸை நேரடியாக சருமத்தில் தடவி வெளியே செல்ல வேண்டாம். ஏனெனில் சூரியக்கதிர்களால் பைட்டோ போட்டோடெர்மாடிஸ் என்ற வலிமிகுந்த சரும எரிச்சலை ஏற்படுத்தி விடும்.

5. சீரண சக்தியை அதிகரித்தல்

லெமன் நீர் சீரண சக்தியை அதிகரிக்கிறது. இதில் உள்ள சிட்ரிக் அமிலம் உணவை உண்ணும் போது அதிக உமிழ்நீரை சுரக்க செய்து எளிதில் சீரணமாக உதவுகிறது. மேலும் ப்ளோனாய்டுகள் சீரணிக்கும் அமிலத்தை சுரக்கச் செய்கிறது.

உங்களுக்கு மலச்சிக்கல் பிரச்சினைகள் இருந்தாலோ அல்லது நெஞ்செரிச்சல், எதுக்களித்தல், அசிடிட்டி பிரச்சினைகள் இருந்தால் வெதுவெதுப்பான நீரில் 2 டீ ஸ்பூன் லெமன் சாறு கலந்து சாப்பிடுவதற்கு 30 நிமிடங்கள் முன்னால் குடித்தால் போதும் பிரச்சினைகள் தீர்ந்து விடும்.

6. தொற்றுகளை எதிர்த்தல்

சளி மற்றும் ப்ளூ காய்ச்சல் பரவும் சமயங்களில் தொற்றுக்கள் அதிக தீவரத்துடன் பரவும். எனவே நீங்கள் அப்போது ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என நினைத்தால் தினமும் லெமன் ஜூஸ் குடியுங்கள். இதிலுள்ள விட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து தொற்றுகளை எதிர்த்து போராடும்.

7. எடை குறைய

இந்த லெமன் சாறில் உள்ள சிட்ரிக் அமிலம் நமது உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து உடல் கொழுப்பை கரைத்து உடல் எடையை குறைக்க உதவுகிறது.

30 நிமிட உடற்பயிற்சி, பழங்கள் மற்றும் காய்கறிகளுடன் தினமும் காலையில் ஒரு டம்ளர் லெமன் ஜூஸ் குடித்து வந்தால் உங்கள் உடல் எடையில் மாற்றத்தை காணலாம்.

8. இரத்த சர்க்கரை அளவு குறைதல்

லெமன் சாற்றில் விட்டமின் சி அதிகமாக இருப்பதால் அது ரத்தத்தில் குளுக்கோஸின் அளவைக் கட்டுப்படுத்துகிறது. தொடந்து ஒரு மாதம் காலையில் வெதுவெதுப்பான நீரில் லெமன் ஜூஸ் குடித்து வாருங்கள். அதன்பின் உங்களது ரத்த சர்க்கரை அளவை பரிசோதித்துப் பாருங்கள். நிறைய மாற்றங்களை நீங்களே உணர்வீர்கள்.

9. இதய நோய்

லெமனில் மக்னீசியம், பொட்டாசியம் அதிகளவில் உள்ளது. இவை நமது இதயத்திற்கு நல்லது. பொட்டாசியம் இரத்த அழுத்தத்தை குறைப்பதால் இரத்த ஓட்டம் சீராகி இதய நோய்கள், பக்கவாதம் வருவதை தடுக்கிறது. மேலும் லெமனில் உள்ள லெமனோனின் என்ற பொருள் கெட்ட கொழுப்புகளைக் குறைத்து அதனால் இரத்த குழாய்கள் அடைபடுவதைத் தடுக்குமா என்ற ஆராய்ச்சிகளும் நடந்து வருகின்றன. ஏனெனில் இதுவும் இதய நோய்கள் மற்றும் பக்கவாதம் வர காரணமாக அமைகின்றன.

10. புற்று நோய்களை தடுக்கிறது

புற்று நோய் செல்கள் வளர்ந்து நமது உறுப்புகளான மார்பகம், நுரையீரல் மற்றும் சிறுநீரகம் போன்றவற்றில் புற்றுநோய் கட்டிகளை உருவாக்குகிறது. எனவே நீங்கள் லெமன் ஜூஸ் குடிக்கும் போது இதிலுள்ள ஆன்டி – ஆக்ஸிடன்ட்கள் புற்று நோய் வராமல் தடுத்து நல்ல செல்களின் வளர்ச்சிக்கு உறுதுணை புரிகிறது. மேலும் நமது உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

11. அழற்சியை குறைக்கிறது

ஆர்த்ரிட்டீஸ், கெளட் மற்றும் மூட்டுவலி போன்ற பிரச்சினைகள் அழற்சியால் ஏற்படுகின்றன. லெமன் ஜூஸில் உள்ள விட்டமின் சி அழற்சியை போக்கி ஆர்த்ரிட்டீஸ் மற்றும் மூட்டு பிரச்சினைகளையும் போக்கி நிவாரணம் அளிக்கிறது.

அனல்ஸ் ரூமாடிக் நோய்களின் தகவல்படி விட்டமின் சி பற்றாக்குறை உள்ளவர்கள் அதிகமாக மூட்டுவலி பிரச்சினையால் அவதிப்படுவது தெரிய வந்துள்ளது.

மேலும் லெமன் ஜூஸ் உடலில் தேங்கும் யூரிக் அமிலத்தின் அளவையும் குறைக்கிறது. காளான்கள், இறைச்சி, கல்லீரல், உலர்ந்த பீன்ஸ் போன்ற பொருட்கள் உடையும்போது உருவாகும் யூரிக் அமிலத்தை வெளியேற்றுகிறது. இதனால் யூரிக் அமிலத்தால் ஏற்படும் கெளட் பிரச்சினையை இது சரி செய்கிறது.

Related posts

இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப கஞ்சத்தனமான கணவர்களாக இருப்பார்களாம்…தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

குண்டாகாமல் எப்பவும் ஒல்லியா ஆரோக்கியமா இருக்கணுமா? தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

உங்களுக்கு தெரியுமா குழந்தைகளின் விரல் சூப்பும் பழக்கத்தை சரிசெய்வது எப்படி…?

nathan

உங்க ராசிப்படி உங்களின் ஆபத்தான குணம் என்ன தெரியுமா?

nathan

உடல் ஆரோக்கியத்தில் மூலிகைகள்…தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

வேகமாக குண்டாக்கும் உணவுகள் எவையென்று தெரியுமா?

nathan

ஜாக்கிரதை! நீரிழிவு நோயாளிகள் இந்த பழங்களை சாப்பிடவே கூடாதாம்!

nathan

உங்க உடம்பு நல்லா இருக்கனும்னா இதெல்லா கண்ண மூடிட்டு தூர தூக்கி எரிஞ்சிடுங்க!!!தெரிஞ்சிக்கங்க…

nathan

ஆரோக்கியத்திற்கு பின்பற்ற வேண்டியவை

nathan