36.3 C
Chennai
Friday, Aug 28, 2026
ஆரோக்கியம் குறிப்புகள்

உடலின் அழகு கூடுமா மணத்தக்காளி கீரையை சாப்பிட்டால்…?

மணத்தக்காளி கீரையில் பாஸ்பரஸ், அயர்ன், கால்சியம் ஏ, சி மற்றும் பி வைட்டமின் தாதுக்கள் போன்றவை அதிக அளவில் உள்ளது. மணத்தக்காளி கீரையின் சாறு காய்ச்சல், காய்ச்சலால் ஏற்படும் கை கால் வலிகளையும் குணப்படுத்தும் தன்மை கொண்டது.

மணத்தக்காளி கீரை சிறுநீர்க் கோளாறுகளை சரிசெய்வதுடன், சிறுநீர் நன்கு பிரியவும் வழி அமைத்துக் கொடுக்கும். காசநோயாளிகள் மணத்தக்காளி கீரையின் பழத்தை தினமும் சாப்பிடுவது நல்லது.

மஞ்சள் காமாலை, கல்லீரல் தொடர்பான நோய்களை குணப்படுத்த மணத்தக்காளியின் பழம் மற்றும் கீரைகளை வேகவைத்து அதன் சாற்றை பருகுகின்றனர்.

தோலில் ஏற்படும் அலர்ஜி, வெயிலுக்கு ஏற்படும் கட்டிகள், தோல் அரிப்பு போன்றவற்றை குணப்படுத்த மணத்தக்காளி கீரையை சாறாக பிழிந்து அதன்மேல் தடவலாம்.

மணத்தக்காளி கீரையை சாப்பிட்டால் உடலின் அழகு கூடும். இதயத்திற்கு வலிமை அதிகரிக்கும். வயிற்றுப் போக்கு, காய்ச்சல், குடல்புண் முதலியவற்றிற்கு உணவு மருந்தாகவும் இக்கீரை பயன்படுகிறது.

இக்கீரையையும் பழத்தின் விதைகளையும் காயவைத்துப் பொடியாக்க வேண்டும். அவற்றைத் தலா அரை கரண்டி வீதம் காலையும், மாலையும் உட்கொண்டால் நெஞ்சுவலி குணமாகும்.

Related posts

9 வீட்டுடைமை நெருக்கடிகளை உப்பை கொண்டு சமாளிக்கலாம்

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…இரவில் படுக்கும் முன் இதை செய்தால் கூந்தல், சருமம் பாதிக்கும்

nathan

உடல்நலத்தைப் பற்றி உங்க “கை” என்ன சொல்கிறது என்று தெரியுமா?

nathan

ஒரு நாளைக்கு 6 மணி நேரத்துக்கும் குறைவாக தூங்குகிறீர்களா?

sangika

விரதம் இருக்கும் தருணத்தில் எதுவும் சாப்பிடக்கூடாதா?

nathan

நம் முன்னோர்கள் ஒவ்வொரு விசேஷத்திற்கும் மருதாணி வைக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி உள்ளார்கள். அவ்வபோது மருதாணி வைத்துக்கொள்வதால் என்ன பயன்கள்…?

nathan

பெற்றோர்களே…குழந்தைகளிடம் கத்துவதற்கு முன்னால் இதை சிந்தியுங்கள்

nathan

பிறந்த தேதியை சொல்லுங்க.. 2022-ல் உங்க ஆரோக்கியம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்…

nathan

எலும்புகளில் கால்சியக் குறைபாடு ஏற்படுவதால் தேய்மானம் ஏற்படுகின்றது. பெண்களுக்கு எந்த வயதில் ஏற்படுகிறது தெரியுமா…?

nathan