26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
21 619650
Other News

Bitcoin என்பது என்ன? தெரியவேண்டிய தகவல்

Bitcoin என்பது என்ன, அது எப்படி இயங்குகிறது, Blockchain என்றால் என்ன, எப்படி செயல்படுகிறது என்பதைப் பற்றி சில விவரங்களை எளிமையாக இங்கே பார்க்கலாம்.

பிட்காயின் (Bitcoin) தான் உலகின் முதல் பிரவலாக்கப்பட்ட (Decentralized) டிஜிட்டல் நாணயம் ஆகும். இது கணினி முறையால் வலைத்தளங்களில் செயலாக்கப்பட்டு, பரிமாற்றம் செய்யப்படுகின்றது.

பிட்காயின் (BTC) என்பது Blockchain என்று அழைக்கப்படும் ஒரு வகை கணினி தொழில் நுட்ப முறையில் இயங்குகிறது.

நாம் அன்றாட வாழக்கையில் பயன்படுத்தும் பணம் போல, இந்த கிரிப்டோ நாணயத்தை வலைத்தளங்களில் ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்ளலாம், பொருட்களை வாங்கலாம், வர்த்தகத்திற்குபயன்படுத்தலாம் மற்றும் சேமித்து வைக்கலாம்.

இந்த பிட்காயினில் பல நன்மைகள் (advantages) உள்ளன. நாம் பயன்படுத்தும் பணம் ஒரு வங்கியால் கட்டுப்படுத்தப்பட்டு மேலாண்மை செய்யப்படுகின்றது. ஆனால், பிட்காயின் என்ற இந்த கிரிப்டோ நாணயம் (Cryptocurrency) எந்த வங்கியாலும் மேற்பார்வை செய்யப்படுவது இல்லை, கட்டுப்படுத்தப்படுவதும் இல்லை.

 

அப்படியென்றால், இந்த நாணயத்தை வர்த்தகம் செய்ய எந்த வங்கிக்கும் நாம் செல்ல வேண்டியதில்லை. அதனால், பரிவர்த்தனைக்கான கட்டணங்கள் மிக மிக குறைவு.

வங்கிகளுக்கு பதிலாக, இந்த நாணயம் Blockchain என்ற மென்பொருளால் ஆன வரவுப் பதிவேட்டில் (ledger) சேமிக்கப்பட்டு, பாதுகாக்கப்படுகின்றது. அப்படியெனில், இதில் எந்த கட்டுப்பாடுகளும் கிடையாது, உங்கள் கணக்கை (Account) வாங்கி போன்று அந்த நிறுவனத்தால் யாராலும் முடக்க முடியாது.

அதே சமயம், இதனை உலகம் முழுக்க ஒரே மாதியான முறையில், கட்டணத்தில் பரிமாற்றிக் கொள்ளலாம். பிட்காயினை வைத்துக் கொண்டு, டொலர், ரூபாய் போன்ற பணத்தையம் வாங்கலாம், மற்ற பொருட்களையும் வாங்கலாம்.

Blockchain என்பது ஒரு மென்பொருளால் ஆன வரவு-செலவு கணக்குப் புத்தகம் ஆகும். இது P2P network என்ற கணினி வலையத்தில் செயற்படுத்தப் பட்டு, அதில் உள்ள பல இணையர்களால் மேற்பார்வை இடப்பட்டு, இயங்கும் மென் பொருளாகும். பிட்காயின் நெட்வொர்க் Miners எனப்படும் தனிநபர்களால் பாதுகாக்கப்படுகிறது. அவர்கள் தான் Blockchain தொழிநுட்பத்தில் கட்டங்களை உருவாக்குகின்றனர்.

 

ஒவ்வொரு கட்டத்தையும் உருவாக்க அவர்களுக்கு (Miners) கூலி கொடுக்க வேண்டும். அந்தக் கூலியைக் கொடுப்பதற்காகவே பிட்காயின் முதன்முதலில் உருவாக்கப்பட்டது என கூறப்படுகிறது.

பிட்காயினைக் கண்டு பிடித்தவர் ஜப்பானைச் சேர்ந்த Satoshi Nakamoto என்று கூறப்படுகிறது. எனினும் உண்மையில் இதை கண்டுபிடித்தவர் யார் என்று தெரியவில்லை. பிட்காயின் ஒரு திறந்த மூல மென்பொருளாக 2009-ல் வெளியிடப்பட்டது. பிட்காயின் நாளடைவில் பலராலும் அறியப்பட்ட பிறகு, பலரும் இதைப் பயன்படுத்தத் தொடங்கினர்.

இப்போது ஒரு Bitcoin-ன் விலை மதிப்பு ஏறக்குறைய 66,000 அமெரிக்க டொலர் ஆகும். இந்திய ரூபாயின் மதிப்பில் ஏறக்குறைய 49 லட்சம் (49,00,000). இன்றைய காலகட்டத்தில், பிட்காயின் போல Ethereum, Cardano, Solona, Dogecoin, Shiba Inu என பல ஆயிரக்கணக்கான கிரிப்டோ நாணயங்களும், டோக்கன்களும் உள்ளன.

ஒவ்வொரு நாளும் வெவ்வேறு நாடுகளில் பல புதிய நாணயங்கள் உருவாக்கப்படுகின்றன. இந்த கிரிப்டோ நாணயங்களால் பல சிக்கல்களும் உருவாகி இருக்கின்றன. எடுத்துக்காட்டாக, இதனை வைத்து நடத்தப்படும் சட்டத்திற்குப் புறம்பான பணப் பரிமாற்றங்கள், பிட்காயின் விலை நிலையாக இல்லாமல் மாறிக் கொண்டே இருப்பது, மற்றும் ஹாக்கர்களால் பிட்காயின் திருடப்படுவது ஆகியன இவற்றுக்கு எதிராக வைக்கப் படும் குற்றச் சாட்டுகளாகும்.

மேலும், பிட்காயின் என்பது ஒரு வெறும் பொருளாதாரக் குமிழ் (economic bubble) மட்டுமே என்ற கருத்தும் நிலவுகின்றது. இருப்பினும், பிட்காயினில் பலர் முதலீடு செய்துள்ளனர் என்பதும் உண்மை, பலர் லட்சக்கணக்கில் சம்பாதிப்பதும் உண்மை.

பிட்காயினை பயன்படுத்த Binance, Coinbase போன்ற பல பரிமாற்ற நிறுவனங்கள் (Exchange) உள்ளன. இதனை உங்கள் மொபைல் போன் அல்லது கணினியின் மூலம் இயக்கலாம். பிட்காயினை அனுப்புவது ஒரு மின்-அஞ்சல் அனுப்புவது போல மிக சுலபமானது என கூறப்படுகிறது.

 

 

Related posts

விஜயகாந்த் சிறு வயதில் ஸ்டைலாக எப்படி இருக்கிறார் பாருங்க!

nathan

மகளுக்கு ‘துவா’ என பெயரிட்ட தீபிகா – ரன்வீர் சிங்

nathan

அடேங்கப்பா! காரிலிருந்து நடிகை குஷ்பு வெளியிட்ட புகைப்படம்… இதுல கூட இப்படியொரு வித்தியாசமா?..

nathan

1 மில்லியன் டொலருக்கு ஏலம் போன பருந்து!

nathan

நாசா வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்!!

nathan

விஜயகுமார் மகள் அனிதாவின் 50வது பிறந்தநாள் கொண்டாட்டம்

nathan

புகைப்படத்தில் இருக்கும் முன்னணி நட்சத்திரம் யார் தெரியுமா..

nathan

வரலட்சுமியின் திருமணத்திற்காக பிரபலங்களுக்கு நேரில் பத்திரிக்கை

nathan

சுருதிஹாசனுடன் சேர்ந்து ஐ.பி.எல். மேட்ச் பார்த்த லோகேஷ்

nathan