39.1 C
Chennai
Friday, May 31, 2024
vitamin supplement
மருத்துவ குறிப்பு

உங்களுக்கு தெரியுமா உடலுக்கு தீங்கை விளைவிக்கும் வைட்டமின்கள்!!!

நம் உடலின் வளர்ச்சிக்கு வைட்டமின்களின் தேவைப்பாடு மிகவும் முக்கியமானதாகும். உடலின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் போதிய அளவில் ஊட்டச்சத்துக்கள் தேவைப்படுகிறது. இருப்பினும் நாம் உண்ணும் உணவுகளில் இதன் அளவுகள் சற்று குறைவாகவே இருக்க வேண்டும்.வைட்டமின்களை இரண்டு வகைப்படுத்தலாம் – கொழுப்பில் கரைகிற வைட்டமின்கள் மற்றும் தண்ணீரில் கரைகிற வைட்டமின்கள். கொழுப்பில் கரைகிற வைட்டமின்கள் உடலில் உள்ள கொழுப்பு திசுக்களில் தேங்கும். தண்ணீரில் கரைகிற வைட்டமின்களை விட இது சுலபமாக தேங்கும்.

தண்ணீரில் கரைகிற வைட்டமின்கள் உடலில் நீண்ட நேரம் தேங்குவதில்லை. சிறுநீரகம் வழியாக அவை உடலில் இருந்து வெளியேறிவிடும். இதற்கு மாற்றாக கொழுப்பில் கரைகிற வைட்டமின்களை பயன்படுத்த வேண்டும். உங்களுக்கு தீங்கை விளைவிக்கும் அளவுக்கு குறிப்பாக எந்த ஒரு வைட்டமினையும் கூற முடியாது. ஆனால் அளவை மிஞ்சும் போது அது உங்கள் உடலுக்கு நல்லதல்ல. அதனால் நீங்கள் உட்கொள்ளும் வைட்டமின்களின் அளவின் மீது கட்டுப்பாடு இருக்க வேண்டியது அவசியமாகும்.

உங்கள் உடலுக்கு சிறிய அளவிலான வைட்டமின்களே போதுமானது; உங்கள் உடலின் செயல்பாட்டை நீங்கள் புரிந்து கொள்ள முயற்சி செய்தாலே இதை நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள். சில வைட்டமின்களை அதிக அளவில் உட்கொண்டால் அது உங்கள் ஒட்டுமொத்த உடல் செயல்பாட்டிற்கு ஆபத்தை விளைவிக்கும். அப்படிப்பட்ட வைட்டமின்களைப் பற்றி இப்போது பார்க்கலாமா…?

வைட்டமின் சி

இந்த வைட்டமின் உங்கள் உடல் அமைப்பிற்கு ஊக்கத்தை அளிக்கும். ஆனால் அதிக அளவில் உட்கொள்ளும் போது அது உங்களுக்கு தீங்கை விளைவிக்கும். அளவுக்கு அதிகமாக வைட்டமின் சி-யை உட்கொள்ளும் போது குமட்டல், வயிற்று போக்கு, சிறுநீரக கற்கள் மற்றும் வயிற்றின் தசைப்பிடிப்புகள் போன்ற பொதுவான பிரச்சனைகள் ஏற்படும். ஜிங்க்கை அதிகமாக உட்கொள்ளும் போது இந்த பொதுவான பிரச்சனைகள் ஏற்படும்.

வைட்டமின் பி

உங்கள் உடலுக்கு குறிப்பிட்ட அளவிலான வைட்டமின் பி தேவைப்படுகிறது. நல்ல உடல் ஆரோக்கியத்தைப் பராமரிக்க இந்த வைட்டமின்கள் தேவைப்பட்டாலும் கூட, பரிந்துரைக்கப்பட்ட அளவை விட அதனை அதிகமாக உட்கொண்டால், அது உங்கள் உடலுக்கு தீங்காய் விளையும். இது தண்ணீரில் கரையும் வைட்டமின் தான் என்றாலும், இதனை அதிகமாக சேர்த்து கொள்ளும் போது நரம்பியல் பிரச்சனைகள் ஏற்படும்.

வைட்டமின் ஏ மற்றும் டி

இவைகள் கொழுப்பில் கரைகிற வைட்டமின்கள் தான். ஆனாலும் இவைகளை அதிக அளவில் சேர்த்துக் கொள்ளும் போது, இந்த வைட்டமின்கள் உங்கள் உடலை பாதிக்கும். இவை கொழுப்பில் கரைந்து உடல் திசுக்களில் தேங்கி விடும். அதிகளவிலான வைட்டமின் ஏ பிறப்பு குறைபாடுகளை ஏற்படுத்தும். வைட்டமின் டி என்பது சர்ச்சைக்குரிய வைட்டமினாகும். அதிக அளவில் செல்லும் போது நம் உடலால் அதை தாங்கிக் கொள்ள முடிவதில்லை.

வைட்டமின் ஈ மற்றும் கே

வைட்டமின் ஈ மற்றும் கே-வும் கூட கொழுப்பில் கரைகிற வைட்டமின்களே. இவைகளையும் அதிக அளவில் உட்கொள்ளும் போது, அது நமக்கு ஆபத்தாய் விளைகிறது. வைட்டமின் ஈ-யை அதிகமாக சேர்த்துக் கொண்டால், இரத்தக் கசிவு ஏற்படுவதற்கான இடர்பாடுகள் அதிகம். அதே போல் வைட்டமின் கே-வை அதிகமாக உட்கொள்ளும் போது இரத்தத்தை சன்னமாக்கும் மருத்துவ செயற்பாட்டை குறைக்கும் அல்லது தலைகீழாக புரட்டி போட்டு விடும். இதனால் இயல்பாக ஏற்படும் இரத்த உறைதல் தடுக்கப்படும்.

வலுப்படுத்தும் உணவுகளும் சப்ளிமெண்ட்களும்

கூடுதல் ஊட்டச்சத்துக்களுக்காக வைட்டமின் சப்ளிமெண்ட்களையும், வலுப்படுத்தும் உணவுகளையும் மக்கள் எடுத்துக் கொள்கின்றனர். ஆனால் இவைகளை ஒருவரின் தினசரி உணவுகளில் தொடர்ச்சியாக சேர்த்து வந்தால், அது நம் உடலுக்கு தீங்கை விளைவிக்கும். இதனால் உடலில் நச்சுத்தன்மை அதிகரித்து தேங்கி விடும். இது நடக்காமல் இருப்பதை உறுதி செய்ய, நீங்கள் எடுத்துக் கொள்ளும் சப்ளிமெண்ட்களில் உள்ள வைட்டமின்களின் எண்ணிக்கையின் மீது கவனம் தேவை.

Related posts

தெரிஞ்சிக்கங்க…தொப்பை அதிகரிப்பை விட கொடுமை வேறு எதுவும் உண்டா? வாரம் 3 முறை இத குடிச்சா மாயமாய் மறைஞ்சி போய்விடுமாம்!

nathan

எலும்புகள் வளர கால்சியம் சத்து அவசியம்

nathan

சித்த மருத்துவ குறிப்புகள் 1

nathan

உங்களுக்கான தீர்வு கர்ப்ப காலத்தில் வரும் வாந்தியை சரிசெய்வது எப்படி?

nathan

ஒற்றைத் தலைவலிக்கும், சைனஸிற்கும் உள்ள வேறுபாடு என்ன தெரியுமா?தெரிஞ்சிக்கங்க…

nathan

புரோஸ்திரேட் வீக்கம் பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டியவைகள்

nathan

மனித மூளையின் ரகசியம் அறிந்து கொள்ளுங்கள்

nathan

இந்த அறிகுறிகள் தெரிந்தால் காதலில் பிரேக் ஆப் நிச்சயம்.தெரிந்துகொள்வோமா?

nathan

கசக்கும் இல்லறம் – இனிக்கும் கள்ள உறவு

nathan