23.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
8 15199
ஆரோக்கியம் குறிப்புகள்

அரிசி உணவைக் தவிர்த்தால் தொப்பை குறையும் என்பது உண்மையா?தெரிஞ்சிக்கங்க…

ஆசியாவின் பல நாடுகளில் அரிசி தான் பிரதான உணவாக இருக்கிறது. பல நூற்றாண்டுகளாக அரிசி வகை உணவுகளையே சாப்பிட்டு வந்திருக்கிறோம். வெள்ளை அரிசியில் அதிகப்படியான கார்போஹைட்ரேட் இருக்கும் குறைந்த அளவு ப்ரோட்டீன் மற்றும் ஃபேட் இருக்கிறது.

அதில் இருக்கக்கூடிய கார்போஹைட்ரேட்டினால் நீங்கள் அதைச் சாப்பிட்டவுடன் ரத்தச் சர்க்கரை அளவு அதிகரித்திடும், அதை விட நம்மவர்களுக்கு எல்லாம் என்ன பயம் தெரியுமா? அரிசி உணவு தான் நமக்கு ஏற்படுகிற பெரும்பாலான பிரச்சனைகளுக்கு காரணமா? தொப்பை, சர்க்கரை நோய், மாரடைப்பு என இன்றைக்கு டாப் 3யில் இருக்கக்கூடிய பிரச்சனைகளுக்கு முக்கிய இடம் வகிக்கிறது என்று நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

அரிசி உணவுக்கும் தொப்பைக்கும் என்னதொடர்பு, அதை சாப்பிடலாமா வேண்டாமா? என்ற உங்களது நீண்ட நாள் சந்தேகத்திற்கு இந்த கட்டுரை பதிலளிக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அரிசி :
அரிசி :
அரிசி என்பது ஒரு வகை தானியம் கிட்டதட்ட பல நூற்றாண்டுகளாக இதனை சாப்பிட்டு வருகிறோம். அரிசியிலேயே பல வகைகள் இருக்கின்றன. அரிசியைப் பற்றி முழுதாக புரிந்து கொள்ள அடிப்படையாக ஒன்றை தெரிந்து கொள்வது அவசியமாகும்.

ஒவ்வொரு தானியத்தை மூன்று வகைகளாக பிரிக்கிறார்கள். அவை ப்ரான், ஜெர்ம் மற்றும் எண்டோஸ்பர்ம் என மூன்று வகைகளாக பிரிப்பர்.

மூன்றும் :
மூன்றும் :
ப்ரான் என்பது தானியத்தின் வெளிப்புறத்தை குறிக்கும், அதில் அதிகப்படியான நார்ச்சத்து இருக்கும். அவை உள்ளேயிருக்கக்கூடிய சத்தினை பாதுகக்கும், அடுத்ததாக இரண்டாவது லேயர் அதாவது நடுப்பகுதி அதனை எண்டோஸ்பர்ம் என்கிறார்கள். இதில் கார்போஹைட்ரேட் மற்றும் ப்ரோட்டீன் இருக்கும். மூன்றாவதாக இருக்கும் பகுதி தான் ஜெர்ம்.

இதில் மிகச்சிறிய அளவில் ஆண்ட்டிஆக்ஸிடண்ட் விட்டமின் இ, பி மற்றும் ஹெல்தி ஃபேட் இருக்கிறது.

ப்ரவுன் ரைஸ் :
ப்ரவுன் ரைஸ் :
இங்கயிருக்கும் பலருக்கும் வெள்ளை அரிசியை விட ப்ரவுன் அரிசி தான் நல்லது என்ற எண்ணம் இருக்கிறது. அப்படி என்ன பிரவுன் அரிசியில் இருக்கிறது என்று தெரிந்து கொள்ளுங்கள்.

பிரவுன் அரிசி என்பது முழு தானியம். அதில் எண்டோஸ்ப்ரம் என்பதிருக்காது ப்ரான் மற்றும் ஜெர்ம் தான் இருக்கிறது. அதனால் ப்ரவுன் அரிசி ஆரோக்கியமானது என்கிறார்கள்.

அரிசி வகைகள் :
அரிசி வகைகள் :
ஒவ்வொரு அரிசி வகையிலும் ஸ்டார்ச்,அதிலிருக்கும் க்ளுக்கோஸின் அளவு வேறுபடும் அதோடு அந்த அரிசி செரிமானம் ஆகிடும் அளவும் வேறுபடும் அரிசியில் இருக்கக்கூடிய க்ளுக்கோஸின் பெயர் அமிலோஸ் மற்றும் அமிலோபெக்டின் ஆகும்.

உள்ளேயிருக்கும் சத்துக்களின் அளவுகள் வேறுபடுவதைப் பொறுத்து தான் அரிசியின் பெயர்கள் வேறுபடுகிறது.

பிரவுன் அல்லது வெள்ளை :
பிரவுன் அல்லது வெள்ளை :
இப்போதைக்கு இங்கே போட்டியில் நிற்பது பிரவுன் நிற அரிசி மற்றும் வெள்ளை அரிசி தான். பிரவுன் அரிசியில் அதிகப்படியாக நார்ச்சத்து, விட்டமின் மற்றும் மினரல்ஸ் இருக்கிறது.

வெள்ளை அரிசியில் இருக்கிறது என்றாலும் அவை மிகவும் குறைந்த அளவேயிருக்கிறது. ஒப்பீட்டளவில் ப்ரவுன் அரிசியில் அதிகப்படியாக இருக்கும். அதனால் தான் ப்ரவுன் அரிசி நல்லது என்று சொல்கிறார்கள்.

கொழுப்பு :
கொழுப்பு :
வெள்ளை அரிசி அல்லது அரிசியினால் செய்யப்பட்ட உணவுகளை நீங்கள் எடுத்துக் கொள்வதினால் ரத்தச் சர்க்கரை அளவு அதிகரித்திடும். ரத்தச் சர்க்கரை அளவு அதிகரிக்கும் பட்சத்தில் இன்ஸுலின் சுரப்பு அதிகரித்திடும். அப்படி அதிகரித்தால் அவை ரத்தத்தில் இருக்கும் க்ளோக்கோஸை எல்லாம் சேகரித்து உடலில் இருக்கும் செல்களில் சேகரிக்க ஆரம்பிக்கும்.

அவை தான் எனர்ஜி. அந்த எனர்ஜியை நாம் முறையாக செலவு செய்யவில்லை எனில் அவை தான் கொழுப்பாக மாறுகிறது.

உடல் உழைப்பு :
உடல் உழைப்பு :
அதிகமாக உடல் உழைப்பு செய்கிறவர்களுக்கு செல்களில் சேர்க்கப்படுகிற குளுக்கோஸ் கரைக்கப்படும். இதே ஒரேயிடத்தில் உட்கார்ந்து வேலை செய்கிறவர் என்றால் அவை எல்லாமே கொழுப்பாக மாறும், ஏனென்றால் எனர்ஜி எங்கும் செலவழிக்கப்படுவதில்லை.

அதிகப்படியான கார்போஹைட்ரேட் இருக்கும் உணவுகளைச் சாப்பிடுவதால் அவை உங்களது இன்ஸுலின் அளவினை அதிகரிக்கும், அவை குளுக்கோஸ் சேகரிக்கும் மற்றும் கொழுப்பின் அளவை உயரச் செய்திடும். அதனால் அரிசி சாப்பிட்டால் குண்டாவோம் என்று சொல்லப்படுகிறது.

தொப்பைக்கு :
தொப்பைக்கு :
உடல் எடையை குறைக்க வேண்டுமா அல்லது தொப்பையை குறைக்க வேண்டுமா அப்படியானால் முதலில் அரிசி உணவை நிறுத்துங்கள் என்று தான் சொல்லப்படுகிறது. அரிசியை நிறுத்தியவுடன் தொப்பை குறைந்திடுமா என்ன?

இந்த அரிசி உணவிற்கு தான் நம்முடைய உடல் பழக்கப்பட்டிருக்கிறது. பாரம்பரியமாக நீண்ட காலங்களாக இங்கிருக்கும் தட்பவெட்ப சூழலுக்கு ஏற்ப நமக்கு பழக்கப்படுத்தப்பட்ட உணவு அரிசி உணவாகும். அதனால் அவற்றை முற்றிலுமாக தவிர்கக்கூடாது.

என்ன செய்யலாம் ? :
என்ன செய்யலாம் ? :
மிக முக்கியமாக நீங்கள் செய்ய வேண்டியது அளவைக் குறைத்து கொள்ளுங்கள். எடுத்துக் கொள்ளக்கூடிய அரிசியின் அளவை குறைத்துக் கொண்டு, காய்கறி பழங்களின் அளவை அதிகரித்துக் கொள்ளுங்கள்.

அதே நேரத்தில் உங்களது லைஃப்ஸ்டைலை மாற்றிக் கொள்ளுங்கள். நீண்ட நேரம் ஒரேயிடத்தில் உட்கார்ந்திருப்பதை தவிர்த்திடுங்கள். வெள்ளை அரிசிக்கு பதிலாக சிகப்பரிசி,கருப்பு அரிசி ஆகியவற்றை முயற்சிக்கலாம்.

சுயபரிசோதனை :

தொப்பை குறையவில்லை, என்னென்னவோ முயற்சி செய்து பார்த்துவிட்டேன், உடல் எடை மட்டும் குறையவே மாட்டேன் என்கிறது என்று புலம்பாமல் ஆக்கப்பூர்வமாக சில விஷயங்களை செய்ய வேண்டும், அவற்றில் முதன்மையானது சுயபரிசோதனை.

டயட் என்ற பெயரில் உணவுகளை சாப்பிடாமல் தவிர்ப்பதை விட, தொடர்ந்து வரப்போகிற விஷயங்கள் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பாருங்கள்.

ஆறு :

1. சாப்பிட்ட உணவு செரிப்பதற்கு தேவையான அளவு அமிலம் உங்கள் உடலில் இருக்கிறதா?

2. நீண்ட நாட்களாக அல்லது தொடர்ந்து குறிப்பிட்ட சோடா வகைகளை எடுத்துக் கொண்டிருக்கிறீர்களா?

3. ஆண்ட்டிபயாட்டிக் மருந்துகள் எதாவது சாப்பிடுகிறீர்களா?

4. உங்களுக்கு ஏதேனும் ஃபுட் அலர்ஜி இருக்கிறது?

5. மலம் வெளியேற சிக்கல் இருக்கிறதா?

6.சாப்பிட்ட உணவு செரிமானம் அடைவதில் சிக்கல்கள் இருக்கிறதா?

செரிமானம் :

பெரும்பாலானோருக்கு செரிமானத்தில் தான் பிரச்சனை இருக்கும். தொப்பை தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்று சொன்னால், உங்களது உடலால் செரிக்க முடியாத அளவிற்கு உணவுகளை எடுத்துக் கொண்டு இருக்கிறீர்கள் என்று அர்த்தம், அதனால் உணவினை குறைத்துக் கொள்வதை விட, சாப்பிட்ட உணவு சரியாக ஜீரணமாகிறதா என்று பார்க்க வேண்டியது அவசியமாகும்.

Related posts

பதின்ம பருவம் பெண்களுக்கான ஆரோக்கிய குறிப்புகள்

nathan

தாம்பத்திய உறவில் ஏற்படும் பிரச்சனைகளை போக்க இத செய்யுங்கள்!…

sangika

ஒரு பெண்ணின் வேதனை! ‘என் பிள்ளை நல்லபிள்ளைதான். வந்ததுதான் சரியில்லை’

nathan

ஆண்களை விட பெண்களில் இந்நோயைக் கண்டறிந்த பிறகு பாதிப்பின் அளவு வேகமாக அதிகரிக்கக் காரணம்!…

sangika

பற்களில் படிந்துள்ள கறையை போக்க எளிய வழி

nathan

இதோ உங்களுக்காக உடலுக்கு பிஸ்கட் அதிகம் சாப்பிடுவது நல்லதா?

nathan

உண்மையான காரணம் மாலை நேரத்தில் நகம் வெட்டக்கூடாது..

nathan

ஜலதோஷம், சளி, காய்ச்சல் என பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பிரச்னைகளிலிருந்து நம்மைக் காத்துக்கொள்ள

nathan

கோடைகாலத்துல சர்க்கரை நோயாளிகள் இதெல்லாம் செய்யவே கூடாதாம்…

nathan