31.7 C
Chennai
Saturday, Jun 1, 2024
fruits
ஆரோக்கிய உணவு

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எடையை குறைக்க உதவும் பழ சாலட்

டிஜிட்டல் கலாசாரத்தில் உடல் உழைப்பு குறைந்து விட்டதால் உடல் எடை அதிகரித்தல் பெரும் பிரச்சனையாக உருவாகி உள்ளது. இதன் காரணமாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மன அழுத்தத்துக்கு உள்ளாகிறார்கள். உடல் எடையை உணவின் மூலம் எப்படி குறைப்பது என்பது பலரின் கேள்வியாக இருக்கிறது.

நார்ச்சத்து அதிகம் உள்ள பழங்களை உண்பதன் மூலம் உடலில் தேவையற்ற கொழுப்பு சேராமல் தடுக்க முடியும். ஒருவர் தினமும் குறைந்தபட்சம் 400 கிராம் பழங்களை சாப்பிட வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு பரிந்துரை செய்துள்ளது. இதன் மூலம் எடை குறைப்பு, உடல் பருமன், இதய நோய்கள், பக்கவாதம், சில வகையான புற்றுநோய் போன்ற உடல் நல பிரச்சனைகளின் அபாயத்தை குறைக்க முடியும் என தெரிவித்து இருக்கிறது.

பழங்களில் அதிக அளவு கலோரிகள் இருக்கும் கொழுப்பு இருக்காது. உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் வாரத்தில் மூன்று நாட்களுக்கு இங்கே குறிப்பிட்ட பழங்களை சாலட் ஆக தயாரித்து சாப்பிடலாம்.

நமது தட்பவெப்ப நிலையில் எளிதாக கிடைக்கும் நாட்டு ஆரஞ்சு, கொய்யா. பப்பாளி ஆகிய மூன்று பழங்களிலும் வைட்டமின் ஏ, வைட்டமின் சி நிறைந்துள்ளது. மேலும் இவற்றில் நார்ச்சத்து அதிகமாக இருக்கிறது. நீரிழிவு நோயாளிகளும், இந்த பழங்களை சாலட் ஆக தயாரித்து சாப்பிடலாம்.

தர்பூசணி, திராட்டை, மாதுளை, பேரிக்காய், முலாம் பழம் போன்ற பழங்களில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. எனவே இந்த பழங்களை சாப்பிடுவதன் மூலம் எளிதில் எடை குறைவதற்கான வாய்ப்பு உள்ளது.

தர்பூசணி இயற்கையாகவே கொழுப்பை கரைக்கும் தன்மை கொண்டது. கோடையில் இதனை தவறாமல் சாப்பிட வேண்டும். இதில் கிளைசெமிக் அளவு அதிகமாக இருப்பால் நீரிழிவு நோயாளிகள் குறைந்த அளவு சாப்பிடுவது நல்லது.

வாழைப்பழத்திற்கு பசி உணர்வை கட்டுப்படுத்தும் ஆற்றல் உள்ளது. அதன் காரணமாகவே விரத நாட்களில் வாழைப்பழம் சாப்பிட்டாலே போதும் என முன்னோர்கள் கூறினார்கள். எனவே வாழைப்பழத்தை சாலட்டுகளில் சேர்த்துக்கொண்டால் எடை சுலபமாக குறையும்.

அன்னாசிப்பழத்தை தொடர்ந்து சாப்பிடும்போது அதில் உள்ள ப்ரோமிலைன் என்ற வேதிப்பொருள் உடல் எடையை குறைக்க உதவும்.

உடலில் உள்ள நச்சுத்தன்மை கொண்ட பொருட்களை வெளியேற்றி உடலை தூய்மைப்படுத்தக்கூடிய சக்தி பழங்களுக்கு உள்ளது.

எண்ணெயில் வறுத்த, பொரித்த பண்டங்கள் மற்றும் உணவு வகைகளை தவிர்த்து மேற்கூறிய பழங்கள் நிறைந்த சாலட் கலவையை சாப்பிடுங்கள். இதன் மூலம் உடல் எடையை எளிதாக குறைக்கலாம்.

Related posts

காலை மடக்கி உட்கார்ந்து சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா? தெரிந்துகொள்வோமா?

nathan

சோர்வை போக்கும் பீட்ரூட், காரட் பானம்

nathan

பெருஞ்சீரகம்! வெறும் வயிற்றில் குடித்தால் என்ன நடக்கும் தெரியுமா?

nathan

புரதச்சத்துக்கள் நிறைந்த ஆப்பிள் சூப்

nathan

ஆயுர்வேதத்தின் படி உங்கள் குடல் ஆரோக்கியமாக இருக்க என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

nathan

பூண்டு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் !!

nathan

கொலஸ்ட்ராலைக் கரைக்கும் உணவுகள்

nathan

உங்களுக்கு அந்த பிரச்சினையால் அவதியா? அப்படின்னா இத நாக்குக்கு அடில வைங்க.

nathan

மருத்துவ பயன்கள் நிறைந்த அரைக்கீரை!!

nathan