26.6 C
Chennai
Sunday, Nov 17, 2024
21 6158dea0c
சமையல் குறிப்புகள்

மெதுவடை செலவே இல்லாமல் வேண்டுமா?உளுந்து இல்லாமல் செய்வது எப்படி?

வடை என்றால் யாருக்கு தான் பிடிக்காது. பெரும்பாலானோர் காலை அல்லது மாலையில் டீ குடிக்கும்போது கண்டிப்பாக வடை சாப்பிடுகின்றனர்.

இப்படி எல்லோராலும் விரும்பப்படும் வடையானது உளுந்தை ஊறவைத்து, அரைத்து முன்கூட்டியே தயாராக வேண்டியிருப்பதால், பலரால் நினைத்த நேரத்தில் வீட்டில் மெது வடையை தயார் செய்ய முடிவதில்லை.

ஆனால் உளுந்து இல்லாமல், அதிகப்பட்சம் கால் மணி நேரத்தில் மெது வடை தயார் செய்ய முடியும் என்றால் நம்புவீர்களா? நாம் இப்போது பார்க்கப்போகும் ரெசிபியானது உளுந்து இல்லாமல் செய்யக் கூடிய வடையாகும். சுவையில் குறைவில்லாத இந்த உளுந்து இல்லா வடை எப்படி செய்வது என்பதை இப்போது பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

அவல் – 200 கிராம்
பிரட் – 6 துண்டுகள்
எண்ணெய் – தேவையான அளவு
பெரிய வெங்காயம் – 1
பச்சை மிளகாய் – 3
காய்ந்த மிளகாய் – 2
கொத்தமல்லி – தேவையான அளவு
கறிவேப்பிலை – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு

செய்முறை

முதலில், அவலை தண்ணீர் சேர்த்து நன்றாக சுத்தப்படுத்தி கொள்ள வேண்டும். பின்னர் வடிகட்டி கொண்டு தண்ணீரை நன்றாக வடித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

இப்போது அவலில் ஒரு கப் தண்ணீர் சேர்த்து, 2 நிமிடம் ஊற வைக்க வேண்டும். அடுத்து பிரட் துண்டுகளை, நறுக்கியது போல் கைகளால் பிய்த்து வைத்துக் கொள்ள வேண்டும்.

இதனை ஒரு மிக்ஸியில் போட்டு பவுடராக அரைத்துக் கொள்ளுங்கள். இப்போது ஊறிய அவலை கைகளால் நன்றாக பிசைந்து மாவாக மாற்றிக் கொள்ளுங்கள்.

இதனுடன் அரைத்து வைத்த பிரட் பவுடர் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக பிசைந்துக் கொள்ள வேண்டும். இந்த செயல்முறைகளின்போது தண்ணீர் சேர்க்க கூடாது.

தேவைப்பட்டால் சமையல் சோடா சிறிதளவு சேர்த்துக் கொள்ளுங்கள். இப்போது மாவுடன், பொடியாக நறுக்கி வைத்த வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லியை சேர்த்து நன்றாக கலந்துக் கொள்ள வேண்டும். இதனுடன் அரைத்த வைத்த காய்ந்த மிளகாய் சேர்த்து பிசைந்துக் கொள்ள வேண்டும்.

அடுத்தாக தேவைப்படின் உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து பிசைந்துக் கொள்ள வேண்டும். பின்னர் அடுப்பில் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், மெது வடையாக போட்டு எடுத்துக் கொள்ளுங்கள். அவ்வளவுதான் சுவையான மெதுவடை ரெடி! நீங்களும் உங்கள் வீட்டில் இந்த எளிய செய்முறையை செய்து பாருங்கள்.

Related posts

சுவையான சேப்பங்கிழங்கு ரோஸ்ட்

nathan

சுவையான முருங்கைக்கீரை கூட்டு

nathan

பட்டாணி மசாலா

nathan

வீட்டிலேயே செய்யலாம் மலபார் பரோட்டா

nathan

ஆரோக்கியமான ஜீரண இடியாப்பம்!

sangika

சுவையான கேரட் கூட்டு

nathan

சுவையான கேரளா ஸ்டைல் பருப்பு குழம்பு

nathan

சுவையான இறால் முட்டை பொடிமாஸ் செய்து சாப்பிடுங்க

nathan

சுவையான மட்டர் பன்னீர்

nathan