ஆரோக்கிய உணவு

சுவையான சில்லி பிரட் உப்புமா

எப்போதும் இட்லி, தோசை செய்வதால் குழந்தைகள் காலை உணவை சாப்பிட மறுக்கிறார்களா? குழந்தைகளுக்கு பிடித்தவாறு காலை உணவை செய்ய வேண்டுமா? அப்படியானால் வாரம் ஒருமுறை சில்லி பிரட் உப்புமா செய்து கொடுங்கள். இது ஒரு சைனீஸ் ரெசிபி. இருந்தாலும் குழந்தைகள் விரும்பி சாப்பிடுமாறு இருக்கும்.

இங்கு அந்த சில்லி பிரட் உப்புமாவை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து உங்கள் குழந்தைக்கு செய்து கொடுங்கள்.

Chilli Bread Upma
தேவையான பொருட்கள்:

பிரட் – 6 துண்டுகள் (நறுக்கியது)
வெங்காயம் – 1 (நறுக்கியது)
தக்காளி – 3 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி – 1 டீஸ்பூன் (நறுக்கியது)
பூண்டு – 1 டீஸ்பூன் (நறுக்கியது)
வரமிளகாய் – 2 (நறுக்கியது)
தக்காளி கெட்சப் – 2 டேபிள் ஸ்பூன்
சோயா சாஸ் – 1 டேபிள் ஸ்பூன்
வினிகர் – 1 டேபிள் ஸ்பூன்
சர்க்கரை – 1 டீஸ்பூன்
அஜினமோட்டோ – 1 டீஸ்பூன் (விருப்பமிருந்தால்)
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிரட் துண்டுகளை சேர்த்து பொன்னிறமாக பொரித்து தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் அதே வாணலியில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், இஞ்சி, பூண்டு, வரமிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும்.

பின் அதில் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கி, பின் தக்காளி, சர்க்கரை, உப்பு, அஜினமோட்டோ சேர்த்து 5 நிமிடம் நன்கு வதக்க வேண்டும்.

பிறகு அத்துடன் தக்காளி சாஸ், சோயா சாஸ், வினிகர் சேர்த்து நன்கு கிளறி, 1/2 கப் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விட வேண்டும்.

தண்ணீரானது நன்கு கொதித்ததும், அதில் பிரட் துண்டுகளை சேர்த்து பிரட்டி, தண்ணீர் வற்றியதும் இறக்கினால், சில்லி பிரட் உப்புமா ரெடி!!!

Related posts

மட்டன் தோரன்

nathan

உடல் வெப்பம் குறைக்கும் உணவுகள் – body heat reduce foods in tamil

nathan

எச்சரிக்கை கொழுப்பு நீக்கப்பட்ட பால் குடிப்பதை உடனே நிறுத்துங்கள்

nathan

தினமும் ஒரு டம்ளர் ஓட்ஸ் பால் குடிப்பதால் பெறும் நன்மைகள்!தெரிந்துகொள்வோமா?

nathan

இதயத்தை பலப்படுத்தும் சுக்கான் கீரை

nathan

தொப்பை குறைக்கும், இதய நோய் தடுக்கும்… 5 பழங்கள்! தெரிஞ்சிக்கங்க…

nathan

உங்களுக்கு தெரியுமா பெண்களின் மாதவிடாய் வலியை குணப்படுத்தும் வாழைப்பூ..!!

nathan

கருப்பட்டிக்கு சுவை, மணம் இருப்பதோடு மட்டுமல்லாமல், மருத்துவ குணமும் அதிகம் இருக்கிறது.

nathan

வாழைப்பழத்தை ஏன் வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது-ன்னு சொல்றாங்க தெரியுமா?தெரிந்துகொள்வோமா?

nathan