30.8 C
Chennai
Tuesday, Jun 2, 2026
சைவம்

ஐயங்கார் எள் சாதம் செய்வது எப்படி

சுவையான ஐயங்கார் எள் சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

ஐயங்கார் எள் சாதம் செய்வது எப்படி
தேவையான பொருள்கள் :

பச்சரிசி – 1 கப்
எள் – 100 கிராம்
காய்ந்த மிளகாய் – 6
உப்பு – தேவையான அளவு
தாளிக்க – நல்லெண்ணெய், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, நிலக்கடலை, பெருங்காயம், கறிவேப்பிலை.

செய்முறை :

* பச்சரிசியை உதிரியாக வேக வைத்து ஆற வைத்து கொள்ளவும்.

* வாணலியில் அடுப்பில் வைத்து எண்ணெய் விடாமல் எள்ளை வறுக்கவும். படபடவென பொரியும் போது எடுத்து வைக்கவும்.

* அடுத்து அதே கடாயில் எண்ணெய் 1 டீஸ்பூன் விட்டு மிளகாயை வறுத்து, எள், உப்பு சேர்த்து மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும். (சிறிதளவு உப்பு மட்டும்- அரைபடுவதற்காக)

* மற்றொரு வாணலியில் நல்லெண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, நிலக்கடலை, பெருங்காயம், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.

* அடுத்து அதில் உதிரியாக வடித்த சாதத்தை கொட்டி, தேவையான உப்பு, எள் பொடியைத் தூவிக் கலந்து பரிமாறவும்.

குறிப்பு :

* விரும்பினால் ஒரு டீஸ்பூன் இட்லி மிளகாய்ப் பொடி சேர்த்துக் கலக்கலாம். சுவையாக இருக்கும்.

* காய்ந்த மிளகாய்க்குப் பதில் மிளகும், எண்ணெய்க்குப் பதில் நெய்யும் உபயோகிக்கலாம்.

* கருப்பு எள் உபயோகித்தால் சாதம் நிறம் கருப்பாக இருந்தாலும் அதிக மணமாக இருக்கும்.

Related posts

சிம்பிளான… கோவைக்காய் ப்ரை

nathan

சூப்பரான கேரளா ஸ்டைல் தக்காளி குழம்பு

nathan

முருங்கைப்பூ கூட்டு

nathan

பூண்டு வெங்காய குழம்பு

nathan

தயிர்சாதம் & ஃப்ரூட்

nathan

ஆந்திரா ஸ்டைல் கீரை மசியல்

nathan

பருப்பு உருண்டை குழம்பு செய்வது எப்படி

nathan

சேனைக்கிழங்கு அவியல்

nathan

தொண்டக்காய பாப்புல பொடி வேப்புடு

nathan