28.9 C
Chennai
Monday, May 20, 2024
1558515085 0486
ஆரோக்கிய உணவு

குடும்ப தலைவிகளுக்கான பயன்தரும் கிச்சன் டிப்ஸ்!! பெண்களே தெரிஞ்சிக்கங்க…

வற்றல் குழம்பு வைக்கும்போது சிறிதளவு கடுகு, மஞ்சள்தூள், மிளகாய் வற்றல் போன்றவற்றை வெறும் பாத்திரத்தில் போட்டு வறுத்து அதனை தூளாக்கி குழம்பில் போட்டு இறக்கினால் நல்ல மணமாக இருக்கும்.

வாழைப்பூ வாழைத்தண்டு ஆகியவற்றை நறுக்கி மோர் கலந்த நீரில் வைத்தால் நிறம் மாறாமல் இருக்கும். கரையும் பிடிக்காது. அதில் உள்ள துவர்ப்பும் நீங்கி விடும்.

மழைக் காலத்தில் உப்பில் நீர் சேர்ந்து விடாமல் இருப்பதற்காக நாலைந்து அரிசியை உப்பு ஜாடியில் போட்டு வைத்தால் தண்ணீர் படியாமல் இருக்கும். நெய் கெடாமல் இருப்பதற்கு அதோடு ஒரு வெல்லத் துண்டை போட்டு வைத்தால் கெடாமல் இருக்கும்.

இடியாப்பம் மிச்சமானால் ஒரு நாள் முழுவதும் புளித்த தயிரில் ஊற வைத்துவிட்டு, நிழலில் உலர்த்தி வற்றலாக்கி வைத்துக் கொள்ளலாம். நன்றாக காய்ந்த பின் டப்பாவில் எடுத்து வைத்துக் கொண்டு தேவையான போது வறுத்து சாப்பிடலாம்.

பாகற்காயை சமைப்பதற்கு முன்னால் அரைமணி நேரம் உப்பு கலந்த நீரில் ஊற வைத்தால் அதன் கசப்பு போய்விடும்.

சப்பாத்தி மாவு எப்படி பிசைந்தாலும், மிருதுவாக வரவில்லை என்ற குறையை நீக்க, மாவில் சிறிதளவு பால் ஊற்றிப் பிசைந்துகொள்ள வேண்டும். பாலாடைக் கட்டி போட்டு பிசைந்தாலும் நல்லது. வேகவைத்த உருளைக்கிழங்கை மசித்து மாவுடன் கலந்து பிசைந்தாலும் சப்பாத்தி மென்மையாக வரும்.

Related posts

ஆலு பன்னீர் கோப்தா

nathan

சிறுநீரகப் பிரச்சனையை தீர்க்கும் வாழைத்தண்டு பச்சடி

nathan

வாழ்நாளை கூட்டும் ஆற்றல் கொண்ட வால்நட்

nathan

உடல் எடையை வேகமாக குறைக்க கிராம்பை சாப்பிடுங்க போதும்…!

nathan

தினமும் 2 டீஸ்பூன் “இதை” சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் குறையும், மாரடைப்பு வராமல் தடுக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா?

nathan

உணவில் தினமும் ஒரு கீரையை சேர்ப்பது நல்லதா?

nathan

தினசரி காபிக்கு பதிலாக வெள்ளை பூசணி சாறு குடிப்பதால் பெறும் நன்மைகள்!!!

nathan

பாடி பில்டர் போன்ற உடல் வேண்டுமா? அப்ப இந்த பழங்களை சாப்பிடுங்க…

nathan

வெண்டைக்காய் சாப்பிட்டால் நல்லா கணக்கு போடலாம்!

nathan