30.4 C
Chennai
Sunday, Nov 17, 2024
21 613dac6
ஆரோக்கிய உணவு

இந்த உணவுகளை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடுவதால் என்ன நடக்கும் தெரியுமா? தெரிஞ்சிக்கங்க…

உணவே மருந்து என்ற பழமொழி நாம் செய்யும் ஒரு சில தவறால் உணவுகள் விஷமாக மாறிவிடுகிறது. சமைத்த உணவுகள் மீதம் உள்ளதை பிரிட்ஜில் வைத்து பசிக்கும் போது மீண்டும் சூடாக்கி உண்கிறோம்.

ஆனால் எல்லா உணவுகளையும் சூடுபடுத்தி சாப்பிட முடியாது. இது மாதிரியான செயல் நம் உயிரையே பறித்து விடலாம்.

சில உணவுகளை சூடுபடுத்தும் போது அதில் நச்சுத்தன்மை புகுந்து விடுகிறது. ஆதலால் இந்த உணவுகளை தவறி கூட சூடுபடுத்தி விடாதீர்கள்.

சிக்கனில் அதிக புரதசத்து உள்ளதால் சமைத்த சிக்கனை சூடுபடுத்துவதால் செரிமான சிக்கல் போன்றவை ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால் அதை மீண்டும் சூடுபடுத்தாமல் அப்படியே ரொட்டியில் வைத்தோ அல்லது சாலட்டாக சாப்பிடுவது நல்லது.
இரண்டாவது முறையாக சுடவைக்க கூடாது என்ற உணவுகளில் முட்டையும் இடம்பிடித்துள்ளது. அப்படி செய்வதால் முட்டையில் நச்சு தன்மை உண்டாக வாய்ப்புள்ளது. இது இதயம் தொடர்பான பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

சமைத்த உருளைக்கிழங்கை நீண்ட நேரத்திற்கு அப்படியே வைத்தாலோ அல்லது மீண்டும் சூடாக்கினாலோ அவை விஷமாக மாறலாம். போட்யூலிசம் காரணமாக இந்த மாறுதல் ஏற்படுகிறது. ஆகையால் இதை சமைத்த உடனேயே முழுதாக சாப்பிட்டுவிடுவது நல்லது.

மற்ற பச்சை காய்கறிகளைப் போலவே கீரையில் இரும்பு மற்றும் நைட்ரேட்டுகள் நிறைந்துள்ளன. சமைத்த கீரை மீண்டும் சூடாக்கப்பட்டால் இயற்கையாக இருக்கும் நைட்ரேட்டின் அளவை விட அதிகமாகிறது. இது உங்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும்.

Related posts

கட்டாயம் இதை படியுங்கள் அற்புதபலன்கள் தரும் வறுத்த பூண்டு.!

nathan

குழந்தைகளுக்கு சத்தான மிளகு – வேர்க்கடலை சாதம்

nathan

சுவையான தேங்காய் பால் குழம்பு

nathan

சுவையான மாசிக் கருவாடு சம்பல்!

nathan

காபி குடிக்கும் போது இந்த பொருட்களை தெரியாமல் கூட சாப்பிட்ராதீங்க! தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க!

nathan

பாலுடன் வாழைப்பழத்தை சாப்பிட்டால் நல்லதா? கேட்டதா?

sangika

மூளையை சீராக்கும் மூக்கிரட்டை கீரையை பற்றி தெரிந்து கொள்வோமா?

nathan

கர்ப்பப்பை காக்கும்… ஆயுள் கூட்டும்… குழந்தையின்மை போக்கும்… வாழைப்பூ!

nathan

தெரிஞ்சிக்கோங்க… முருங்கைக்காய் கொஞ்சம் அதிகமா சாப்பிட்டா என்ன ஆகும்னு தெரியுமா?

nathan