25.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
16 kadai mushroom gravy
சமையல் குறிப்புகள்

சுவையான கடாய் காளான் கிரேவி

அசைவ உணவுகளின் சுவைக்கு இணையான சுவையைக் கொண்டது தான் காளான். அதிலும் இத்தகைய காளானை கிரேவி, மசாலா போன்று செய்து சாப்பிட்டால், அதன் சுவை இன்னும் அருமையாக இருக்கும். இங்கு தமிழ் போல்ட் ஸ்கை கடாய் காளான் கிரேவியை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளது.

அதைப் படித்து அவற்றை முயற்சித்துப் பாருங்கள். குறிப்பாக இந்த கிரேவியானது சாதம், சப்பாத்தி போன்றவற்றிற்கு அட்டகாசமாக இருக்கும்.

Kadai Mushroom Gravy Recipe
தேவையான பொருட்கள்:

காளான் – 1 கப் (நறுக்கியது)
குடைமிளகாய் – 1/2 (நறுக்கியது)
பெரிய வெங்காயம் – 1/2 கப் (பொடியாக நறுக்கியது) + 2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
தக்காளி – 2 (நறுக்கியது)
பிரஷ் க்ரீம் – 3 டேபிள் ஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா – 1 டீஸ்பூன்
கொத்தமல்லி – சிறிது
எண்ணெய் – 3 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

வறுத்து அரைப்பதற்கு…

வரமிளகாய் – 2
மல்லி – 2 டீஸ்பூன்

செய்முறை:

முதலில் காளானை நன்கு சுத்தம் செய்து துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்.

பின்னர் சறுத்து அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை வாணலியில் போட்டு பொன்னிறமாக வறுத்து, குளிர வைத்து, பின் மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், 1/2 கப் வெங்காயம் மற்றும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பொன்னிறமாக வதக்கி, பின் அதில் அரைத்து வைத்துள்ள பொடியை சேர்த்து வதக்க வேண்டும்.

பின் தக்காளியை மிக்ஸியில் போட்டு அரைத்து, அதனை வாணலியில் ஊற்றி பச்சை வாசனை போக கொதிக்க விட வேண்டும்.

வாணலியில் இருந்து பச்சை வாசனை போன பின்னர், அதில் சிறிது தண்ணீர், உப்பு மற்றும் கரம் மசாலா சேர்த்து கொதிக்க விட வேண்டும்.

அடுத்து மற்றொரு அடுப்பில் வாணலியை வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், குடைமிளகாய் மற்றும் 2 டேபிள் ஸ்பூன் வெங்காயத்தை சேர்த்து வதக்கி, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்து அதே வாணலியில் காளானை சேர்த்து 2 நிமிடம் வதக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு வதக்கி வைத்துள்ள காளானை கொதிக்கும் கிரேவியில் சேர்த்து, காளானை நன்கு மென்மையாக வேக வைக்க வேண்டும்.

காளானானது மென்மையானதும், அதில் பிரஷ் க்ரீம் சேர்த்து கொதிக்க விட வேண்டும்.

கிரேவியில் இருந்து நல்ல நறுமணம் வீசும் போது, அதில் வதக்கி வைத்துள்ள குடைமிளகாய் மற்றும் வெங்காயத்தை சேர்த்து கிளறி, பின் கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், கடாய் காளான் கிரேவி ரெடி!!!

Related posts

சூப்பரான வெங்காய போண்டா

nathan

சூப்பரான உருளைக்கிழங்கு பொடிமாஸ்

nathan

சுவையான சில்லி பிரட்

nathan

பூண்டு மிளகாய் சட்னி செய்வது எப்படி?

nathan

கணவனை அசத்த….. சூப்பரான கனவா மீன் தொக்கு!….

sangika

சுவையான கத்திரிக்காய் பக்கோடா

nathan

சுவையான ரெடி மினி சமோசா வீட்டிலேயே செய்யலாம்…

sangika

சுவையான வெஜ் கீமா

nathan

சுவையான காலிஃப்ளவர் மசாலா தோசை

nathan