31.9 C
Chennai
Friday, May 31, 2024
paneer popcorn 1632133563
சமையல் குறிப்புகள்

மொறுமொறுப்பான பன்னீர் பாப்கார்ன்

தேவையான பொருட்கள்:

* பன்னீர் – 200 கிராம்

* உலர்ந்த கற்பூரவள்ளி இலை – 1 டீஸ்பூன்

* சில்லி ப்ளேக்ஸ் – 1 டீஸ்பூன்

* உப்பு – சுவைக்கேற்ப

* மைதா – 1/4 கப்

* பிரட் தூள் – தேவையான அளவு

* எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை:

* முதலில் பன்னீரை சதுரத் துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.

* பின்னர் ஒரு பௌலில் பன்னீர் துண்டுகள், உப்பு, சில்லி ப்ளேக்ஸ், உலர்ந்த கற்பூரவள்ளி இலைகளைப் போட்டு நன்கு பிரட்டிக் கொள்ள வேண்டும்.

* பின்பு ஒரு பௌலில் மைதா, உப்பு மற்றும் நீர் சேர்த்து ஓரளவு நீர் போன்று கலந்து கொள்ள வேண்டும்.

* பிறகு அந்த மைதாவில் பன்னீரை பிரட்டி, பின் அதை பிரட் தூளில் பிரட்டி ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.

* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், பிரட் தூளில் பிரட்டிய பன்னீர் துண்டுகளைப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், மொறுமொறுப்பான பன்னீர் பாப்கார்ன் தயார்.

 

Related posts

சுவையான… தக்காளி சாம்பார்

nathan

ஓவன் இல்லாமல் பிட்சா செய்வது எப்படி?

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…கோதுமை மாவு கருப்பட்டி தோசை செய்வது எப்படி?

nathan

சாப்பாட்டை வெறுக்கும் குழந்தைகளுக்கு அற்புதமான எளிய தீர்வு

nathan

கணவனை அசத்த….. சூப்பரான கனவா மீன் தொக்கு!….

sangika

பசலைக்கீரை சாம்பார்

nathan

பொரி அல்வா

nathan

சுவையான வெஜிடேபிள் அவல் உப்புமா

nathan

ஆந்திரா ஸ்டைல் புளிச்சக்கீரை மட்டன் குழம்பு

nathan