சமையல் குறிப்புகள்

தினமும் 2 கப் பால் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

பால் மிகவும் அத்தியாவசியமான ஒன்று. ஆனால் பலருக்கும் பால் குடிக்க பிடிப்பதில்லை மற்றும் பாலில் கொழுப்புக்கள் அதிகம் என்று அதனைக் குடிப்பதையும் தவிர்க்கின்றனர். ஆனால் பாலில் அதிக அளவில் சத்துக்கள் வளமாக உள்ளது.

இதனால் தினமும் இருவேளை பாலை குடிக்க வேண்டியது மிகவும் அவசியம். காலையில் ஒரு கப், இரவு ஒரு கப் வீதம் அருந்தலாம். எலும்புகளின் வலிமைக்கு கால்சியம் மிகவும் முக்கியமானது. இத்தகைய கால்சியம் வயது அதிகரிக்கும் போது குறைய ஆரம்பிக்கும். இப்படி எலும்புகளுக்கு வேண்டிய கால்சியம் கிடைக்காமல் போனால், 30 வயதிற்கு மேல் ஆஸ்டியோபோரோசிஸ் பிரச்சனையை சந்திக்க வேண்டியிருக்கும்.

மேலும் கால்சியம் உடலின் இதர செயல்பாடுகளான தசை சுருக்கம், இரத்தம் உறைதல் போன்றவற்றிற்கும் முக்கியமானது. பாலில் பொட்டாசியம் உள்ளது. இதில் உள்ள பொட்டாசியம் இரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ளும். இச்சத்தும் தசைகளின் சுருக்கத்திற்கு அவசியமானது. பாலில் ஏராளமான அளவில் புரோட்டீன் சத்து உள்ளது. மேலும் இதில் உடலுக்கு வேண்டிய 9 வகையான அமினோ அமிலங்களையும் உள்ளடக்கியுள்ளது.

Related Articles

பாலில் வைட்டமின் பி12 உள்ளது. இந்த வைட்டமின் பி 12 நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியத்திற்கு அத்தியாவசியமானது. தினமும் காலையிலும், இரவிலும் பால் குடிப்பதன் மூலம், வயிறு நிரம்பி ஆரோக்கியமற்ற ஸ்நாக்ஸ்கள் உண்பதைத் தவிர்க்கலாம். பலரும் பாலை அதிகம் குடித்தால், அதில் உள்ள கால்சியம் சிறுநீரகங்களில் படிந்து சிறுநீரக கற்களை உருவாக்கும் என்று நினைக்கின்றனர். சிறுநீரக கற்கள் இருக்கும் நோயாளிகள் கூட பாலை அருந்தலாம்.

இவ்வளவு சத்துக்களைக் கொண்ட பாலை தினமும் குடித்து உடல் ஆரோக்கியத்தைப் பேணி பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
c6025c4b dcb9 4baf af69 ffae9c73c76d S secvpf

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button