23.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
08 varagu arisi
ஆரோக்கிய உணவு

காலை வேளையில் வரகு அரிசி பருப்பு அடை

காலை வேளையில் ஆரோக்கியமான அதே சமயம் வித்தியாசமான உணவை சாப்பிட நினைத்தால், வரகு அரிசி பருப்பு அடை செய்து சாப்பிடுங்கள். இந்த ரெசிபியானது காலையில் சாப்பிடுவதற்கு மிகவும் ஏற்ற உணவு. அதிலும் எடையை குறைக்க டயட்டில் இருப்போர் இதனை உட்கொள்வது மிகவும் சிறந்தது.

இங்கு அந்த வரகு அரிசி பருப்பு அடையை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து அவற்றை முயற்சித்துப் பாருங்கள்.

தேவையான பொருட்கள்:

வரகு – 1 கப்
கடலைப் பருப்பு – 1/4 கப்
துவரம் பருப்பு – 1/4 கப்
உளுத்தம் பருப்பு – 2 டேபிள் ஸ்பூன்
பாசிப் பருப்பு – 2 டேபிள் ஸ்பூன்
அவல் – 2 டேபிள் ஸ்பூன்
வரமிளகாய் – 6
பெருங்காயத் தூள் – 1/4 டீஸ்பூன்
வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
கொத்தமல்லி – சிறிது (பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை – சிறிது
நறுக்கிய இஞ்சி – 2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

முதலில் வரகு, பருப்புக்கள் மற்றும் அவலை நீரில் தனித்தனியாக 3 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் மிக்ஸியில் வரமிளகாய், உப்பு மற்றும் பெருங்காயத் தூளைப் போட்டு, பொடி செய்து கொள்ள வேண்டும்.

பின்பு ஊற வைத்துள்ள வரகில் உள்ள நீரை முற்றிலும் வடித்து, மிக்ஸியில் போட்டு மென்மையாக அரைத்து தனியாக ஒரு பௌலில் வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு கடலைப் பருப்பு, பாசிப்பருப்பு, உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு மற்றும் அவல் ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு மென்மையாக அரைத்து, வரகுடன் சேர்த்து கலந்து, 2 மணிநேரம் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

2 மணிநேரம் ஆன பின்னர், அதில் வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி, இஞ்சி ஆகியவற்றை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

அடுத்து தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் தடவி காய்ந்ததும், அடை மாவை தோசைகளாக சுட்டு எண்ணெய் ஊற்றி முன்னும் பின்னும் வேக வைத்து எடுத்தால், வரகு அரிசி பருப்பு அடை ரெடி!!! இதனை நாட்டுச்சர்க்கரையுடன் சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்.

Related posts

குளிர்சாதன பெட்டி வைக்கப்பட்ட இறைச்சியை சாப்பிடலாமா?

nathan

உடலில் உள்ள கொழுப்பை கரைக்கும் முட்டைகோஸ் சூப்

nathan

தினமும் ரசம் சேர்த்து கொள்வதால் நடக்கும் அற்புதங்கள்!

nathan

சுவையாக இருக்கும் கீரை குழம்பு

nathan

பல உபாதைகளிற்கு நிவாரணம் அளிக்கும் நீர்; இத்தனை நன்மைகளா?

nathan

சுவையான வெஜிடபிள் கேழ்வரகு மாவு அடை

nathan

குளிர்ச்சியான தண்ணீரை குடிப்பவரா நீங்கள்? அதனால் உடலுக்கு ஏற்படும் பாதிப்புக்கள் என்ன?

nathan

தயிரின் அற்புதங்கள்

nathan

புற்றுநோயை அழிக்கும் 30 உணவுகள்!

nathan