ஆரோக்கியம் குறிப்புகள்

கணித அறிவு அதிகரிக்க குழந்தைகளுக்கு எதை தரக் கூடாது தெரியுமா?

ஆப்பிள் நிறுவனத்தின் இயக்குனரும்,டிஜிட்டல் புரட்சியின் தந்தையுமான ஸ்டீவ் ஜாப்ஸ் தனது குழந்தைகளை ஐபாட் உபயோகிக்க அனுமதிக்க மாட்டார்.ஏனெனில் குழந்தைகள் அந்த சாதனங்களுக்கு அடிமைகளாகி விடக் கூடாது என்கிற பயமே ஆகும்.

கிட்டத்தட்ட சிலிகான் வேலியில் கபணி புரியும் பொறியாளர்கள் அனைவரும் தங்களது குழந்தைகளை கணினி மற்றும் தொழில் நுட்பங்களில் இருந்து தள்ளியே வைக்கின்றனர். மேலும் குழந்தைகளை கணினியிடமிருந்து தள்ளி வைக்கக் கூடிய பள்ளிக்கு அனுப்பவே விரும்புகின்றனர். ஏன் தெரியுமா? மேலும் படியுங்கள்.

ஏன் குழந்தைகளை டிஜிட்டல் கருவிகளிலிருந்து விலக்கி வைக்க வேண்டும்?
ஏன் குழந்தைகளை டிஜிட்டல் கருவிகளிலிருந்து விலக்கி வைக்க வேண்டும்?
குழந்தைகள் திரையில் கற்றுக் கொள்வதை விட வாழ்க்கை அனுபவங்களில் இருந்து அதிகம் கற்றுக் கொள்கின்றனர்.மேலும் இவை குழந்தைகளை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு நகர்ந்து செய்யும் விளையாட்டுகள் மூலமாக அமைகிறது.

பல்வேறு ஆய்வுகள் மற்றும் கணக்கெடுப்பின் படி 12 மாத குழந்தை ஒரு நாளில் 2 மணி நேரம் திரையில் நேரத்தை செலவழிக்கின்றனர் என்பதை உறுதி செய்துள்ளது.

மொபைல், டேப்லெட் பார்பதால் :

இள வயதில் (<2 ஆண்டுகள்) புதிய கருத்துக்களை கற்பது மிகவும் சிக்கலாக உள்ளது.மேலும் இந்த வயதில் கற்க வேண்டியது 3 பரிமாண அடிப்படையை உள்ளடக்கியது ஆனால் திரையில் 2 பரிமாணமே எதிரொலிக்கும்.எனவே கை மற்றும் கண் ஒருங்கிணைந்து செய்யும் செயல்பாட்டில் கவனம் செலுத்த வேண்டும்.

எடுத்துக்காட்டு:

ஒரு பந்தை நிஜ வாழ்க்கையில் மற்றும் ஒரு திரையில் கற்பனை செய்து பாருங்கள்.

குழந்தைகளுக்கு 3 பரிமாண பார்வை திறன் வளரும்.குழந்தை பந்தை திரையில் காண்பதால் அது தட்டையாக மற்றும் தீட்டப்பட்ட வட்டமாக தெரியும் ஆனால் நிஜ வாழ்க்கையில் பந்தை கையில் எடுத்து உருட்டி படிப்படியாக ஆராய்ந்து ஒரு கட்டத்தில் நிறுத்துகின்றனர்.

ஆனால் இதை திரையில் பண்ண முடியாது.குழந்தைகள் திரையின் படங்களை பிரகாசமான வண்ணங்களில் இயக்க மட்டுமே முடியும்.ஆனால் அவை குழந்தைகளின் மூளையின் செயல்திறனைப் பாதிக்கும்.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”இதையும் படிங்க” background=”” border=”” thumbright=”no” number=”3″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

ஆனால் 2 வயது குழந்தையால் நல்ல விஷயங்களை புரிந்து கொள்ள முடியும்.இந்த மாதிரியான குழப்பத்தின் காரணமாக குழந்தைகள் திரையில் நேரம் செலவிடுவதை தவிர்ப்பதே நல்லது.

உண்மையில் உணர்வுகள் சிதைந்து விடும்:

தொழில் நுட்பத்தின் ஆரம்ப வெளிப்பாடுகளான ஸ்மார்ட் போன்,கணினி,டேப்லெட் இவற்றை உபயோகிப்பதால் குழந்தைகளின் உடல் மற்றும் மன வளர்ச்சி பாதிக்கப்படும்.இவை அனைத்தும் குழந்தைகளின் இயற்கையான மூளை வளர்ச்சியை பாதிக்கும்.

ஒருங்கிணைப்பு திறன் மற்றும் திறமை:

3 மற்றும் 4 வயது குழந்தைகள் விளையாட்டு மற்றும் இசை கருவிகளை இசைத்தல் மூலம் தனது கைவிரல்களின் திறனை ஒருங்கிணைக்க முடியும் ஆனால் ஐபாட் உபயோகிப்பதால் திரையை விரல்களால் தேய்ப்பதன் மூலம் இந்த திறனை இழக்கின்றனர்.

உணர்வுகள் வேறுபாடு:

இளம் குழந்தைகள் நடத்தல்,ஓடுதல்,விளையாடுதல்,மரம்/மலை ஏறுதல்,வளைந்து விளையாடுதல் போன்ற உணர்வுகளை வெளிப்படுத்தாமலேயே இருக்கின்றனர்.ஏனெனில் நாள் முழுவதும் ஐபாட்-ல் இருப்பதால் இது குழந்தைகளின் உணர்வு திறனைக் குறைக்கிறது.

உணர்ச்சி திறன்:

குழந்தைகளின் உணர்ச்சிகளின் வளச்சிகளில் மிகவும் முக்கியமானது சுய கட்டுப்பாடு ஆகும் ஆனால் இந்த கருவிகளை தொடர்ச்சியாக உபயோகிப்பதால் குழந்தைகள் தங்கள் சுய கட்டுப்பாட்டை இழக்கின்றனர்.

கணித அறிவு :

குழந்தைகள் இந்த மாதிரி சாதனங்களில் விளையாடுவதை விட புதிர்கள்,கட்டிடம் கட்டும் தொகுதிகள் இவற்றை கொண்டு விளையாடுவதால் குழந்தைகளுக்கு இயற்கையிலேயே கணிதம் மற்றும் அறிவியல் திறன் நன்றாக வளரும்.இந்த தொழில் நுட்ப கருவிகளை உபயோகிக்கும் குழந்தைகளை விட வீட்டிலும்,நண்பர்களுடனும் விளையாடும் குழந்தைகள் சிறந்து விளங்குவர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button