33.3 C
Chennai
Friday, May 31, 2024
design 2
மருத்துவ குறிப்பு

பெண்களே தெரிஞ்சிக்கங்க… மார் பகம் சிறிதாக இருந்தால் தாய்ப்பால் சுரப்பு குறைவாக இருக்குமா என்ன?

சிறிய மார்பகங்களைக் கொண்ட பெண்கள் பிரசவத்திற்கு பின் தாய்ப்பால் சுரப்பு குறித்து கவலைக் கொள்வார்கள். ஒவ்வொரு தாயும் தன் குழந்தைக்கு போதிய ஊட்டச்சத்துக்கள் கிடைக்க வேண்டும் என்றே நினைப்பார்கள். பிறந்த குழந்தைக்கு தாய்ப்பாலின் வழியே தான் அச்சத்துக்கள் கிடைக்கும்.

Do Small Breasts Produce Less Milk?
பிரசவத்திற்கு பின் இயற்கையாகவே தாய்ப்பால் சுரக்கும். ஆனால் மார்பக அளவுகள் தான் தாய்ப்பால் சுரப்பை நிர்ணயிக்குமா என்று கேட்டால், உடல்நல நிபுணர்கள் இல்லை என்றே கூறுகிறார்கள்.

இக்கட்டுரையில் தாய்ப்பால் சுரப்பு குறித்து உங்களுக்கு இருக்கும் சந்தேகங்களுக்கான விடைகள் மற்றும் உண்மைகள் கொடுக்கப்பட்டுள்ளன. படித்து தெளிவாகிக் கொள்ளுங்கள்.

உண்மை #1

தாய்ப்பால் சுரப்பு என்று வரும் போது, அதற்கும் மார்பக அளவிற்கும் சம்பந்தமே இல்லை என நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே உங்களுக்கு சிறிய அளவில் மார்பகங்கள் இருந்தால், குறைவாக தாய்ப்பால் சுரக்குமோ என்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை.

உண்மை #2

மார்பகங்களில் உள்ள கொழுப்பு திசுக்களின் அளவைப் பொறுத்து தான் ஒருவரின் மார்பக அளவு உள்ளது. எனவே மார்பக அளவிற்கும், சுரக்கும் தாய்ப்பாலின் அளவிற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை.

உண்மை #3

கர்ப்பம் மற்றும் பிரசவத்திற்கு பின் உடலில் ஏற்படும் பல ஹார்மோன் மாற்றங்களின் விளைவால், மடிச்சுரப்பிகள் தூண்டப்பட்டு, தாய்ப்பால் உற்பத்தி செய்யப்படுகிறது.

உண்மை #4

தாய்ப்பால் உற்பத்தியான பின், மார்பகங்களின் அளவு சற்று பெரிதாகும். இதற்கு காரணம் மடிச்சுரப்பிகளின் அளவு சற்று பெரிதாவது தானே தவிர, தாய்ப்பால் உற்பத்தி மார்பக அளவைப் பொறுத்தது அல்ல.

உண்மை #5

தாய்ப்பால் உற்பத்தி மற்றொரு காரணியாலும் பாதிக்கும். அது என்னவெனில், குழந்தை அதிகளவில் தாய்ப்பாலைக் குடித்தால், தாய்ப்பால் உற்பத்தி அதிகரிக்கும்.

உண்மை #6

கர்ப்ப காலத்தில் அல்லது பிரசவத்திற்கு பின் மார்பக அளவில் சிறிதும் மாற்றம் இல்லாவிட்டால், அப்பெண்ணிற்கு போதுமான சுரப்பி திசுக்கள் இல்லை என்று அர்த்தம். அத்தகைய பெண்களுக்கு போதுமான அளவில் தாய்ப்பால் சுரக்காமல் இருக்கும். இப்பிரச்சனையை மருத்துவ சிகிச்சையின் மூலம் சரிசெய்ய முடியும்.

உண்மை #7
உண்மை #7
பெண்ணிற்கு போதுமான அளவில் தாய்ப்பால் சுரக்காமல் இருப்பதற்கு அதிகமாக பிறப்பு கட்டுப்பாட்டு மாத்திரைகளை எடுத்தது, மார்பக அறுவை சிகிச்சை மற்றும் புகைப்பிடித்தல் போன்றவைகள் காரணங்களாகும்.

Related posts

மூலிகை மந்திரம்: முருங்கை

nathan

ஆண்களுக்கு மலட்டுத்தன்மை எதனால் உண்டாகிறது?

nathan

கவலைய விடுங்க ! மூட்டை பூச்சி தொல்லையால் அவஸ்த்தை படுகிறீர்களா .?

nathan

மரிக்கொழுந்து பற்றி நீங்கள் அறியாத விடயங்கள் ..!

nathan

குழந்தைகள் சேமிக்க பணம் கொடுக்கலாம்

nathan

குழந்தைகளை சாப்பிட வைப்பது எப்படி?

nathan

பெண்களை எளிதில் உணர்ச்சி வசப்படச் செய்வது எப்படி?

nathan

படிக்கத் தவறாதீர்கள்! வாரத்தில் ஒரு நாள் சிறுநீரகக் கற்களை கரைக்க உண்ண வேண்டிய உணவுகள்

nathan

வெண்புள்ளி போன்ற நோய்களுக்கு குணம்தரும் கண்டங்கத்திரி!!சூப்பரா பலன் தரும்!!

nathan