31.7 C
Chennai
Friday, Aug 28, 2026
மருத்துவ குறிப்பு

மரிக்கொழுந்து பற்றி நீங்கள் அறியாத விடயங்கள் ..!

வலி, வீக்கத்தை குறைக்க கூடியதும், தூக்கத்தை வரவழைக்கும் தன்மை கொண்டதும், தோல்நோய்களை குணப்படுத்த கூடியதுமான மரிக்கொழுந்தின் நன்மைகள் குறித்து மருத்துவத்தில் காணலாம்.பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட மரிக்கொழுந்து ஆரோக்கியம் தரக்கூடியதாக விளங்குகிறது. பூஞ்சை காளான்கள், நோய் கிருமிகளை அழிக்கிறது. வலி, வீக்கத்தை சரிசெய்ய கூடியது. மன அழுத்தத்தை போக்கும் தன்மை உடையது.

மரிக்கொழுந்தை பயன்படுத்தி தலைவலி, மூட்டு வலிக்கான மேல்பற்று மருந்து தயாரிக்கலாம்.
தேவையான பொருட்கள்: மரிக்கொழுந்து, நல்லெண்ணெய், சுக்குப்பொடி. செய்முறை: ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் விடவும். இதனுடன், அரைத்து வைத்திருக்கும் மரிக்கொழுந்து, சிறிது சுக்குப்பொடி சேர்த்து வதக்கி இளஞ்சூடாக தலைவலிக்கு மேல்பற்றாக போடுவதால் தலைவலி இல்லாமல் போகும். இதேபோல் மூட்டுகளில் ஏற்படும் வலி, வீக்கத்துக்கு மேல்பற்றாக பயன்படுத்தலாம். இதனால், வீக்கம் வற்றும், வலி மறையும்.

மரிக்கொழுந்து மணம் தரக்கூடியது. மனதுக்கு இதம் தரவல்லது. தூக்கத்தை வரவழைக்கும் தன்மை கொண்டது. விட்டு விட்டு ஏற்படும் வலியை போக்கும். மரிக்கொழுந்தை பயன்படுத்தி வயிற்றுவலி, தோலில் ஏற்படும் அரிப்பு, தடிப்புக்கான மருந்து தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள்: மரிக்கொழுந்து, தண்ணீர்.
செய்முறை: அரைத்து வைத்திருக்கும் மரிக்கொழுந்து ஒரு ஸ்பூன் அளவுக்கு எடுக்கவும். இதில், 100 மில்லி தண்ணீர் ஊற்றி அரை மணி நேரம் ஊறவைக்கவும். பின்னர் வடிகட்டி குடித்துவர வயிற்று வலி சரியாகும். வயிற்று கடுப்பு குணமாகும். தோல்நோய் உள்ளவர்கள் இதை எடுத்துவர பூஞ்சை காளான்கள் நீங்கும். சொரியாசிஸ் நோய்க்கு மருந்தாகிறது. சொரி, சிரங்கு மறைந்து போகும்.

பூக்களில் கட்டி தலைக்கு சூடுவதற்கு மரிக்கொழுந்து பயன்படுகிறது. மரிக்கொழுந்தை தலையணைக்கு அடியில் வைத்து தூங்கும்போது நல்ல தூக்கம் வரும். மரிக்கொழுந்தை பயன்படுத்தி தோலில் ஏற்படும் அரிப்பு, தடிப்பு, சிவப்பு தன்மையை போக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: மரிக்கொழுந்து, தேங்காய் எண்ணெய்.செய்முறை: ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய் எடுக்கவும். இதனுடன், நீர்விடாமல் அரைத்து வைத்திருக்கும் மரிக்கொழுந்து சேர்த்து தைலப்பதமாக காய்ச்சி எடுக்கவும். இதை, வடிகட்டி தோல்நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தலாம். சொரியாசிஸ், பொடுகு பிரச்னை சரியாகும். அரிப்பு தரும் தோல்நோய்களுக்கு மேல்பற்று மருந்தாகிறது.

மரிக்கொழுந்து புற்றுநோயை தடுக்க கூடிய மருந்தாக விளங்குகிறது. புற்றுநோயை தணிக்க கூடியது. உடலில் ஏற்படும் வலியை போக்குகிறது. விஷ முறிப்பானாக, வலி நிவாரணியாக விளங்கும் அற்புத மருந்தாகிறது.மூச்சிரைப்பை சரிசெய்யும் மருத்துவம் குறித்து பார்க்கலாம். நுரையீரலில் ஏற்படும் மாற்றமே மூச்சிரைப்பு. இதற்கு துத்தி மருந்தாகிறது. 10 துத்தி பூக்களை எடுத்து பாலில் இட்டு காய்ச்சி சர்க்கரை சேர்த்து அன்றாடம் குடித்துவர ஆஸ்துமா என்கிற மூச்சிரைப்பு குணமாகும்.

Related posts

ரத்த அழுத்தம்

nathan

வைரஸ் காய்ச்சலை எதிர்கொள்ளும் சில எளிய கிராமத்து வைத்தியங்கள்!

nathan

ஹார்மோன் மாற்றங்கள் உஷ்ணத்தால் பெண்கள் சந்திக்கும் உடல் பிரச்சனைகள்

nathan

டூத் பேஸ்டை கொண்டு கர்ப்ப பரிசோதனை செய்வது எப்படி தெரியுமா?

nathan

நீங்கள் முதுகு வலியால் அவதிப்படுகிறீர்களா? அப்ப உடனே இத படிங்க…

nathan

தெரிஞ்சிக்கங்க…பித்தம் தெடர்பான பிரச்சினைகளை எளிய முறையில் போக்க இதோ சில மருத்துவ குறிப்புகள்

nathan

பக்கவாதத்துக்கு நவீன சிகிச்சை: இரண்டு நோயாளிகளுக்கு மறுவாழ்வு

nathan

உங்களுக்கு தெரியுமா கீழாநெல்லியின் முழு மருத்துவப் பயன்களும் இவை தான்….

nathan

எளிய இயற்கை வைத்தியம் – 50 மருத்துவ குறிப்புகள்!

nathan