30.5 C
Chennai
Friday, May 17, 2024
20180120 125755
ஆரோக்கிய உணவு

நீங்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய தூதுவளையின் மருத்துவ குணங்கள்

தூதுவளை

பொதுவான தகவல்கள் : தூதுவளை (Solanum trilobatum) மூலிகையாகப் பயன்படும் கொடியாகும். இது ஈரமான இடங்களில் செழித்துப் புதர் போல வளரும். இதன் இலை கரும்பச்சை நிறமானது. பூ ஊதா நிறமானது. சிறிய காய்கள் தோன்றிப் பழுக்கும். இதன் கொடியிலும் இலையிலும் கூரிய முட்கள் காணப்படும்.

தூதுவளை இந்தியாவில் அனைத்து இடங்களிலும் பயிராகும் கற்ப மூலிகைகளில் ஒன்று. இதற்கு தூதுவளை, சிங்கவல்லி, அளர்க்கம் என்று பல பெயர்கள் உண்டு. குறிப்பாக இந்தியா முழுவதும் தோட்ட வேலிகளில் வளரும் ஒருவகை கொடியாகும். சிறு முட்கள் நிறைந்து காணப்படும்.

இதன் இலை, பூ, காய், வேர் அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டது. குறிப்பாக ஈழை நோய்க்கு (ஆஸ்துமா) இது மருந்தாகப் பயன்படுகிறது. இதனை அரைத்துப் பச்சடியாக உணவில் சேர்க்கும் வழக்கம் பரவலாக இருக்கிறது.

மருத்துவப் பயன்கள்:

* தூதுவளை இலையைப் பறித்து நன்கு சுத்தம் செய்து அதனுடன் மிளகு, சின்னவெங்காயம், பூண்டு சேர்த்து நன்கு வதக்கி துவையல் செய்து ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு வலு கொடுப்பதுடன் இருமல், இரைப்பு, சளி முதலியவை நீங்கும்.

* தூதுவளைக் கீரையை தினமும் சாப்பிட்டு வர சளி, காது மந்தம், காது எழுச்சி, காது குத்தல், உடம்பு எரிச்சல், தேக குடைச்சல் ஆகிய அனைத்தும் குணமாகும்.

* தூதுவளைக் கீரையை பசு வெண்ணெயில் சேர்த்துக் காய்ச்சி தயாரித்த நெய் காச நோய், மார்புச் சளி ஆகிய அனைத்தையும் குணப்படுத்தும்.

* தூதுவளைக் கீரையை சமையல் செய்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு வலு கொடுப்பதுடன் ஆண்மை சக்தியையும் அதிகரிக்கும்.

* தூதுவளை பழத்தை நிழலில் உலர்த்திக் காய வைத்து இடித்துப் பொடியாக்கி புகை பிடிப்பது போல செய்து வர, இரைப்பு இருமல், மூச்சுத் திணறல், சளி போன்றவை அகலும்.

* தூதுவளையில் கால்சியம் சத்து அதிகம் நிறைந்துள்ளதால் எலும்பையும், பற்களையும் பலப்படுத்தும். அதனால் தூதுவளை கீரையை பருப்புடன் சேர்த்து சமைத்து உடன் நெய் சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டு வரவேண்டும். அவ்வாறு சாப்பிட்டு வர எலும்புகள் உறுதியாகி வஜ்ரம் போல இருக்கும்.

* தூதுவளையை நன்கு அரைத்து அடை போல் செய்து சாப்பிட்டு வந்தால் தலையில் உள்ள கபம் குறையும். இந்திரியம் அதிகமாகி ஆண்மையைக் கூட்டும்.

* தூதுவளை இலையைப் பறித்து நன்கு அலசி வெற்றிலையுடன் கலந்து இரண்டையும் காலையில் மென்று தின்றால் சளி மறைந்து விடும். காது மந்தம், இருமல், நமைச்சல் பெருவயிறு மந்தம் போன்றவற்றிற்கு தூதுவளை கீரை சிறந்த மருந்தாகும்.

* தூதுவளைக் காயை ஊறுகாய் செய்து சாப்பிட்டு வந்தால் பித்தம் குணமாகும்.

* தூதுவளை பூவை நெய்யில் வதக்கி தயிருடன் சாப்பிட விந்து கட்டும், அது மட்டும் அல்லாமல் அறிவும் விருத்தியாகும்.

* தூதுவளை அற்புதமான உடல் தேற்றி இதனை தொடர்ந்து சாப்பிட்டு வர சீக்கிரத்தில் முதுமை வராது. முதுமை காரணமாக வாடுபவர்கள் கூட இதனை தினசரி உண்டு வர இழந்த சக்தி திரும்பக் கிடைக்கும்.:

* தூதுவளை இலைச் சாற்றைக் காதில் பிழிய காதடைப்பு, காதெழுச்சி முதலிய நோய்கள் குணமாகும்.:

* தூதுவளையின் இதர மருத்துவ குணங்கள் மிகவும் சக்தி வாய்ந்தது. இது சயரோகம், பிரைமரி காம்ளக்ஸ், ஆஸ்துமா, டான்சிலிட் டீஸ், தைராய்டு கட்டிகள், வாயில், கன்னத்தில் ஏற்படும் கட்டிகளுக்கும் காதில் ஏற்படும் எழுச்சிக் கட்டிக்கும் பயன்படுகிறது. சளியைக் கரைக்கும் தன்மைக்கு முதலிடம் பெறுகிறது. தைராய்டு கட்டிகள் தோன்றியவுடன் தூதுவளையைப் பயன்படுத்தினால் நிரந்தரத் தீர்வு காணலாம்.:

* பருப்புடன், தூதுவளை இலை சேர்த்து குழம்பு வைத்துச் சாப்பிட மகோதரம், கர்ணசூலை ஆகியவை குணமாகும்.:

* தூதுவளை காயை சமைத்தோ, அல்லது வற்றல், ஊறுகாய் செய்து ஒருமண்டலம் கற்பமுறைப்படி உண்டு வந்தால் கண்ணில் உண்டான பித்த நீர் அதிகரிப்பு, கண் நோய் போன்ற அனைத்துப் பிரச்சனைகளுமே நீங்கும்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி20180120 125755 1024x528

Related posts

சுவையான மாதுளை எலுமிச்சை ஜூஸ்

nathan

கார்ன் பாலக் கிரேவி

nathan

ஆரோக்கியத்தை மேம்படுத்த.. தினமும் காலை வெறும் வயிற்றில் 1 ஸ்பூன் நெய் சாப்பிட்டா எவ்வளவு நன்மை கிடைக்கும் தெரியுமா?

nathan

எப்போதும் வெந்நீரில் துணி துவைப்பதால் ஏற்படும் குறைபாடுகள் என்ன?

nathan

தேங்காய் எண்ணெயில் இவ்வளவு நன்மைகளா? தெரிந்துகொள்வோமா!.

nathan

ப்ராக்கோலி பொரியல்

nathan

பூண்டு, வெங்காயம் அதிகமாக சாப்பிட்டால் என்ன நடக்கும்?தெரிஞ்சிக்கங்க…

nathan

இதயத்தை பலப்படுத்தும் திராட்சை

nathan

உங்களுக்கு அடிக்கடி மலச்சிக்கல் ஏற்படுதா? இத சாப்பிடுங்க!

nathan