25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
0476
ஆரோக்கிய உணவு

பெண்களே தெரிஞ்சிக்கங்க…பிரஷ்ஷான சிக்கனை எப்படி கண்டுபிடிப்பது?

சிக்கன் அசைவ உணவுகளில் மிக முக்கியமான ஒன்று. புரதச்சத்து நிறைந்த உணவு. சிக்கன் இறைச்சியை லீன் மீட் என்னும் வகைக்குள் அடக்குவார்கள்.

மற்ற இறைச்சி வகைகளைப் போல அல்லாமல் சிக்கனை பல வகைகளில் நம்முடைய வசதிக்கேற்ற வகையில் மிக எளிமையாகச் சமைக்க முடியும்.

அதேசமயம் அசைவ உணவுகளைப் பொருத்தவரையில் மிக எளிதாகக் கெட்டுப் போய்விடும். கடைகளில் பழைய இறைச்சியைக் கொடுத்துவிடுவார்கள்.

குறிப்பாக, பழைய சிக்கனாக இல்லாமல் பிரெஷ் சிக்கனாக பார்த்து வாங்குங்கள. சிக்கன் வாங்கும்போது இந்த 3 விஷயங்களை கவனியுங்கள்.

வாசனை

சிக்கன் வாங்கும்போது முதலில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் அதனுடைய வாசனை தான்.

பிரெஷ் மாமிசத்தின் இறைச்சிக்கும் ஒன்றிரண்டு நாள் ஆன சிக்கனில் இருந்து வரும் துர்நாற்றத்துக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு.

அதை மிக எளிதாகக் கண்டுபிடித்து விட முடியும். ரத்தம் உறைந்து போய் மோசமான வாசனை வந்தால் அந்த இறைச்சி பழையது.

அதை ஒருபோதும் வாங்கிவிடாதீர்கள். சிக்கன் வெட்டி அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரைக்குள் இருந்தால் நிச்சயம் ரத்த உறைவு துர்நாற்றம் இருக்காது.

சிக்கன் கடைக்குள் முழுக்க ரத்த வாடையாக இருப்பதால் சில சமயங்களில் உங்களால் கண்டுபிடிக்க முடியாமல் கூட போகும். ஒரு சிறிய துண்டு சிக்கன் பீஸை வெளியில் காற்றோட்டமான இடத்திற்கு கொண்டு வந்து பாருங்கள்.

அந்த வாசனை வருகிறதா என்று. வரவில்லை என்றால் அது பிரெஷ்ஷான சிக்கன் தான். வாசனை வந்தால் அதை வாங்காதீர்கள்.

​ஃப்ரிட்ஜில் உள்ளது

அசைவ உணவுகளைப் பொருத்தவரையில் குறிப்பாக சிக்கன் வாங்கும்போது அது ஃபிரிட்ஜில் வைத்து ஸ்டோர் செய்யப்பட்டதாக இருந்தால் அல்லது ஃப்ரோஷன் சிக்கனாக இருந்தால் அதை வாங்கவே வாங்காதீர்கள்.

அது சில வாரங்களுக்கு முன் வைக்கப்பட்டதா சில மணி நேரத்திற்கு முன் வைக்கப்பட்டதா என்று நம்மால் கண்டுபிடிக்க முடியாது.

நீங்கள் விரும்பி சாப்பிடும் சிக்கனால் உங்களுக்கு வேறு எந்தவித நோய்களும் வரக்கூடாது என்று நினைத்தால் நீங்கள் நிச்சயம் ஃபிரிட்ஜில் வைத்த சிக்கனை வாங்காதீர்கள். அப்படி அந்த சிக்கனை சாப்பிட்டால் அது மிக மோசமான நோய்களுக்குக் கூட வழிவகுக்கும்.

​பேக் செய்யப்பட்ட சிக்கன்

பெருநகரங்களில் எல்லா நேரங்களிலும் கடைக்குப் போகவும் அங்கு ஃபிரெஷ் சிக்கன் வாங்கவோ முடிவதில்லை. அதனால் மிக எளிமையாக சூப்பர் மார்க்கெட்டுகளில் கிடைக்கும் பேக் செய்யப்பட்ட சிக்கனை வாங்குகிறார்கள்.

அதுவே தவிர்க்கப்பட வேண்டியது தான். வேறு வழியின்றி அதை வாங்குவதாக இருந்தால் அவற்றிலும் சில விஷயங்களைக் கவனிக்க வேண்டும். முதலில் அந்த பாக்கெட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் எக்ஸ்பயரி தேதியைப் பார்க்க வேண்டும்.

சில சமயங்களில் கடைகளில் அந்த பாக்கெட்டுகளின் ஒரிஜினல் எக்ஸ்பயரி தேதி கடைக்காரரால் மாற்றப்பட்டோ திருத்தி எழுதப்பட்டோ கூட இருக்கலாம்.

அதனால் தான் முற்றிலும் பேக் செய்யப்பட்ட சிக்கனை தவிர்ப்பது என்று சொல்லுகிறோம். அடுத்ததாக அந்த சிக்கன் கவரைப் பிரித்த பின் கெட்ட நாற்றம் வராமல் இருக்க வேண்டும்.

Related posts

நீங்கள் தினமும் 3 ஸ்பூன் சாப்பிட்டால் புற்றுநோய் முற்றிலும் குணமாகும் தெரியுமா?

nathan

நாம் சாப்பிடும் உணவு மூலமாகவே அழகை அதிகப்படுத்தி காட்டலாம். …..

sangika

உங்களுக்கு தெரியுமா வெறும் வயிற்றில் செய்யக்கூடாத 10 விஷயங்கள்!

nathan

தைராய்டுக்கும் முட்டைகோஸுக்கும் என்ன சம்பந்தம்?

nathan

உங்களுக்கு தெரியுமா இரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும் உணவுகள்!!!

nathan

உங்க உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற மாதம் ஒருமுறை இந்த ஜூஸை குடித்தால் போதும்!

nathan

உடல் எடையைக் கூட்டும் உளுந்தங்களி

nathan

மாம்பழங்கள் இயற்கையாகப் பழுத்தவையா அல்லது செயற்கையாகப் பழுக்க வைக்கப்பட்டவையா என்று எப்படிக் கண்டறிவது?

sangika

சுவையான மட்கா லஸ்ஸி ரெசிபி

nathan