06 aloo khichdi
சைவம்

சுவையான உருளைக்கிழங்கு கிச்சடி

காலையில் அலுவலகம் செல்லும் போது ஈஸியான சமையல் செய்ய நினைத்தால், உருளைக்கிழங்கு கிச்சடி செய்யுங்கள். இது ஈஸியான காலை உணவு மட்டுமின்றி, அலுவலகத்திற்கு மதிய வேளையில் சாப்பிட எடுத்துச் செல்லவும் ஏற்றது. குறிப்பாக பேச்சுலர்கள் இதனை முயற்சிக்கலாம்.

சரி, இப்போது அந்த உருளைக்கிழங்கு கிச்சடியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

Lunch Box: Aloo Khichdi Recipe
தேவையான பொருட்கள்:

அரிசி – 1 கப்
பட்டாணி – 50 கிராம்
உருளைக்கிழங்கு – 1 (பெரியது மற்றும் நறுக்கியது)
சீரகம் – 1 டீஸ்பூன்
பட்டை – 1 துண்டு
ஏலக்காய் – 1
கல் உப்பு – 2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 2 (நீளமாக கீறியது)
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
தண்ணீர் – 21/2-3 கப்

செய்முறை:

முதலில் அரிசியை நீரில் 1/2 மணிநேரம் ஊற வைத்து, பின் நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி உருகியதும், சீரகம், ஏலக்காய், பட்டை சேர்த்து தாளிக்க வேண்டும்.

பின்னர் அதில் உருளைக்கிழங்கு, பட்டாணி சேர்த்து சிறிது நேரம் வதக்கி, பின் அரிசியைப் போட்டு, பொன்னிறமாக வதக்க வேண்டும்.

பின்பு அதில் பச்சை மிளகாய், கல் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து, தண்ணீர் ஊற்றி, ஒரு கொதி வந்ததும், குக்கரை மூடி தீயை குறைத்து, 2-3 விசில் விட்டு இறக்கினால், உருளைக்கிழங்கு கிச்சடி ரெடி!!!

Related posts

மிளகு மோர்க்குழம்பு செய்வது எப்படி

nathan

ஃபிரைடு ரைஸ்

nathan

நெல்லை சொதி

nathan

குதிரைவாலி எள் சாதம்

nathan

நீரிழிவு நோயாளிகளுக்கான… பீர்க்கங்காய் பொரியல்

nathan

சுவையான ஐந்து இலை குழம்பு !

nathan

பச்சை பயறு கடையல்

nathan

காலிஃப்ளவர் ரைஸ்

nathan

தேங்காய்ப்பால் புளியோதரை

nathan