27.1 C
Chennai
Wednesday, Aug 13, 2025
1dfd
ஆரோக்கிய உணவு

தெரிஞ்சிக்கங்க… சப்ஜா விதைகள் எடுத்து கொள்வதனால் இத்தனை பயனா?

திருநீற்று பச்சிலை எனப்படும் ஒரு வகையான துளசி செடியின் விதையே சப்ஜா விதை என்று சொல்லப்படுகின்றது. இந்த விதை குளிர்பானங்களில் அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன.

இது எள் மற்றும் கருஞ்சீரக வடிவில் இருக்கும். இந்த விதையை நீரில் ஊறவைத்து பயன்படுத்த வேண்டும். இதை 15 நிமிடம் நீரில் ஊறவைப்பதால், நீரை உறிஞ்சி வலுவலுப்பு தன்மையடைகிறது.

சர்பத் மற்றும் பலூடாவிலும் இது அதிகமாக சேர்க்கப்படுகிறது. இது உடலுக்கு குளிர்ச்சியை தருவது மட்டுமின்றி உடலில் உள்ள பல நோய்களை தீர்க்க உதவுகின்றது.

அந்தவகையில் சப்ஜா விதைகளை எடுத்து கொள்வதனால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.

சளி, காய்ச்சல், குடல் புழுக்கள், வயிற்றுக் கோளாறுகள், கீல்வாதம் போன்றவற்றிற்கு மருந்தாகப் பயன்படுகிறது. இலைச்சாறு, மூக்கடைப்பை நீக்கும்; தோல் வியாதிகளைப் போக்கும், குடல் புழுக்களை வெளியாக்கும்.

சிறுநீர் பாதையில் ஏற்படும் புண், நீர் எரிச்சல் பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப்படுதலுக்கும் இது நல்ல மருந்து. இது உடல் சூட்டை குறைத்து, உடலை சீரான சீதோஷ்ண நிலைக்கு கொண்டுவரும் இயல்பு கொண்டது. அதனால் இதை கோடைகாலத்தில் மட்டுமின்றி, உடல் சூட்டால் அவதிப்படும் காலகட்டத்திலும் பயன்படுத்தலாம்.

கோடை காலத்தில் வட மாநிலங்களில் பலூடர் என்ற குளிர்பானத்தில் கலந்து இந்த விதையை பயன்படுத்துவதால் இதற்கு ‘பலூடா விதை’ என்ற பெயரும் உண்டு. கோடை காலத்தில் நன்னாரி சர்பத்தில் இதை கலந்து சாப்பிடுவது நல்லது. இந்த சப்ஜா விதை நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.

சப்ஜா விதையில் நார்சத்து அதிகமாக இருப்பதினால் உங்களுக்கு ஏற்படும் மலச்சிக்கல் பிரச்சனையிலிருந்து விடுவிக்கிறது. அது மட்டுமல்லாமல் செரிமான பிரச்சனை, நெஞ்செரிச்சல், குடலில் புண் போன்ற அனைத்திற்கும் தீர்வாக சப்ஜா விதைகள் இருக்கிறது.

முகப்பருக்கள் மறைய திருநீற்றுப்பச்சிலை சாற்றுடன் வசம்பைச் சேர்த்து அரைத்து, பசைபோல செய்து, நன்றாகக் குழைத்து, பருக்கள் உள்ள இடத்தில் தடவ வேண்டும்.

Related posts

கம்பு லட்டு செய்வது எப்படி?

nathan

இஞ்சிப்பால் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

nathan

கரிசலாங்கண்ணியில் அற்புதமான மருத்துவப் பயன்கள்!!

nathan

உங்களுக்கு தெரியுமா இந்த உணவுகளை ஒன்றாக சேர்த்து சாப்பிடுவதால், உங்கள் உடலில் விஷத்தன்மை அதிகரிக்கும்!

nathan

வியாதிகளுக்கு நல்ல மருந்தாக விளங்குகிறது அருகம்புல்

nathan

தெரிஞ்சிக்கங்க…யார் யாரெல்லாம் தினமும் கேரட் ஜூஸ் குடிக்கலாம்!

nathan

சுவையான அட்டகாசமான எள் ரசம் செய்வது எப்படி ??

nathan

கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கும் தனியா பொடி

nathan

உயர் இரத்த அழுத்தத்தை எதிர்த்துப் போராடும் சிறப்பான உணவுகள்!!!

nathan