33.2 C
Chennai
Thursday, May 15, 2025
tyu
அழகு குறிப்புகள்சரும பராமரிப்பு

முகத்தில் உள்ள அதிக எண்ணெயைப் போக்கி, அடைப்பட்ட துளைகளைத் திறந்து சருமத்தை பளிச்சிட உருளைக்கிழங்கு பேஸ்பேக்…!!

வெயிலினால் ஏற்படும் சரும பிரச்சனைகளுக்கு, வறண்ட சருமத்திற்கு, கரும்புள்ளிகளுக்கு, கண்களில் ஏற்படும் வீக்கத்திற்கு, ஆயில் சருமத்திற்கு என அனைத்து பிரச்சனைகளுக்கும் (potato face pack) உருளைக்கிழங்கு தீர்வாகிறது.

தேவையான பொருட்கள்: உருளைக்கிழங்கு – 3, பால் – 2 ஸ்பூன், ஓட்ஸ் – 1 ஸ்பூன், எலுமிச்சை சாறு – 1 ஸ்பூன்.

செய்முறை: உருளைக்கிழங்கை மசித்துக் கொள்ளவும். ஓட்ஸினை பொடித்துக் கொள்ளவும். அடுத்து இதனுடன் பால் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து கொள்ளவும்.

30 நிமிடங்கள் இதனை ஊறவிட்டுப் பயன்படுத்தவும். இந்த மாஸ்க்கினை முகத்தில் தடவி 30 நிமிடங்கள் ஊறவிட்டு மசாஜ் செய்யவும். அதன்பின்னர் முகத்தினை குளிர்ந்தநீரால் கழுவவும். முக அழகானது கூடும்.

உருளைக்கிழங்கு சருமத்தில் உள்ள சேதங்களைப் போக்கி, திட்டுகளைச் சரி செய்கிறது. எலுமிச்சை மற்றும் உருளைக்கிழங்கின் கட்டுப்படுத்தும் தன்மை, முகத்தில் உள்ள அதிக எண்ணெயைப் போக்கி, அடைப்பட்ட துளைகளைத் திறந்து சருமத்தை பளிச்சிட வைக்கிறது.
தேன் சருமத்திற்கு ஈரப்பதத்தைத் தருகிறது. எலுமிச்சை சாற்றை நேரடியாக அப்படியே தடவும்போது எரிச்சல் ஏற்பட்டால், சிறிதளவு தண்ணீர் கலந்து பயன்படுத்தவும்.

உருளைக் கிழங்கில் ப்ரோ வைட்டமின் ஏ மற்றும் பீனோலிக் கூறுகள் உள்ளன. இவை வயது முதிர்விற்கான அறிகுறிகளைக் குறைக்க உதவுபவையாகும். இதனால் சருமம் பொலிவாக ஆரோக்கியமாக இருக்கிறது.

உருளைக்கிழங்கு அழகு குறிப்பு – கருவளையத்திற்கு:
கண்களில் ஏற்படும் கருவளைய பிரச்சனைக்கு உருளைக்கிழங்கு தீர்வாகிறது. உருளைக்கிழங்கை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி, அவற்றை குளிர்ந்த நீரில் ஒரு மணிநேரம் வரை ஊறவைக்கவும்.

பின்பு இந்த உருளைக்கிழங்கு துண்டுகளை உங்கள் கண்களில் வைத்து 20 நிமிடம் வரை காத்திருக்கவும்.

பின்பு குளிர்ந்த நீரால் முகத்தை கழுவ வேண்டும். இவ்வாறு தொடர்ந்து இரண்டு வாரம் வரை செய்து வந்தால் கருவளைய பிரச்சனை சரியாகும்.
tyu
வெயிலினால் ஏற்படும் சரும பிரச்சனைக்கு – உருளைக்கிழங்கு அழகு குறிப்பு:
சிலருக்கு வெயிலின் தாக்கத்தினால் சருமம் மிகவும் கருப்பாக இருக்கும். அவர்களுக்கான டிப்ஸ் தான் இது. உருளைக்கிழங்கை அரைத்து சாறு எடுத்து கொள்ளவும்.

பின்பு ஒரு காட்டன் பஞ்சி எடுத்து கொண்டு, இந்த சாறில் நனைத்து உங்கள் முகத்தில் தேய்க்கவும். பின்பு 20 நிமிடம் வரை காத்திருக்கவும். பிறகு குளிர்ந்த நீரால் முகத்தை கழுவ, வெயில் தாக்கத்தினால் ஏற்பட்ட கருமையான சருமம், பொலிவுடன் காணப்படும்.

வறண்ட சருமத்திற்கு – உருளைக்கிழங்கு அழகு குறிப்பு:
வறண்ட சருமத்திற்கும் உருளை கிழங்கு (potato face pack in tamil) தீர்வாகிறது. அதாவது உருளைக்கிழங்கை நன்றாக அரைத்து அதனுடன் இரண்டு ஸ்பூன் கற்றாழை ஜெல்லை கலந்து முகத்தில் தடவி 40 நிமிடம் வரை காத்திருந்து.

பிறகு குளிர்ந்த நீரால் முகத்தை கழுவ வறண்ட சருமம் பொலிவுடன் காணப்படும்.\

முகப்பொலிவிற்கு – உருளைக்கிழங்கு அழகு குறிப்பு:
சிலருடைய முகம் என்ன தான் மேக்கப் போட்டாலும், பொலிவிழந்து காணப்படும்.

அவர்கள் இந்த உருளைக்கிழங்கை நன்றாக அரைத்து அதனுடன் ஒரு ஸ்பூன் தயிர் கலந்து முகத்தில் தடவி (potato face pack in tamil) சிறிது நேரம் மசாஜ் செய்து, பின்பு குளிர்ந்த நீரால் முகத்தை கழுவ சருமம் சைனிங்கா இருக்கும்.

கண்களில் ஏற்படும் வீக்கத்திற்கு – உருளைக்கிழங்கு அழகு குறிப்பு:
சிலருக்கு கண்களில் வீக்கங்கள் ஏற்படும் அப்போது உருளைக்கிழங்கை அரைத்து, அதனுடன் இரண்டு ஸ்பூன் வெள்ளரிச்சாறு மற்றும் ஒரு ஸ்பூன் ஆலிவ் ஆயில் ஆகியவற்றை நன்றாக கலந்து முகத்தில் தடவி 30 நிமிடம் வரை வைத்திருந்து, பின்பு குளிர்ந்த நீரால் முகத்தை கழுவ கண்களில் ஏற்படும் வீக்கங்கள் சரியாகும்.

கரும்புள்ளி பிரச்சனைகளுக்கு – உருளைக்கிழங்கு அழகு குறிப்பு:
பலருக்கு இருக்கின்ற ஒரு பிரச்சனைதான் கரும்புள்ளி. அதற்கு சிறந்த டிப்ஸ் இதோ.

உருளைக்கிழங்கு சாறுடன், இரண்டு ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து கரும்புள்ளி இருக்கும் இடத்தில், இந்த கலவையை தடவி 15 நிமிடம் வரை வைத்திருந்து, பிறகு குளிர்ந்த நீரால் முகத்தை கழுவ கரும்புள்ளி பிரச்சனை சரியாகும்.

சருமத்தில் ஏற்படும் அரிப்பு மற்றும் எரிச்சல் பிரச்சனைக்கு – உருளைக்கிழங்கு அழகு குறிப்பு:
சிலருக்கு சிலநேரங்களில் சருமத்தில் அரிப்பு அல்லது எரிச்சல் பிரச்சனை ஏற்படும் அப்போது (potato face pack in tamil) உருளைக்கிழங்கு சாறுடன் முட்டையின் வெள்ளைக்கருவை சேர்த்து நன்றாக கலந்து முகத்தில் தடவி 20 நிமிடம் வரை காத்திருந்து, பின்பு குளிர்ந்த நீரால் முகத்தை கழுவ சருமத்தில் ஏற்படும் அரிப்பு மற்றும் எரிச்சல் பிரச்சனை சரியாகும்.
kll
ஆயில் சருமத்திற்கு – உருளைக்கிழங்கு அழகு குறிப்பு:
சிலருக்கு சருமத்தில் எப்போதும் எண்ணெய் வழிந்துகொண்டே இருக்கும். இதன் காரணமாக சருமம் பொலிவிழந்து காணப்படும். இனி கவலை வேண்டாம். இதற்கு(potato face pack in tamil) உருளைக்கிழங்கு தீர்வாகிறது.

உருளைக்கிழங்கு சாறுடன் இரண்டு ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து கொள்ளவும், பின்பு இவற்றை ஒரு காட்டன் பஞ்சியில் நனைத்து முகத்தில் தடவ வேண்டும்.

பிறகு 20 நிமிடம் கழித்து முகத்தை குளிர்ந்த நீரால் கழுவ, முகத்தில் இருக்கும் தேவையற்ற எண்ணெய் பசை நீங்கி, சருமம் பொலிவுடன் காணப்படும்.

Related posts

மிகச் சிறந்த நம்பகமான தீர்வு… முகத்தில் முடி வளர்ச்சியா?

nathan

இச்செயலை வாரத்திற்கு ஒருமுறை செய்தால், 10 வயச குறைச்சு இளமையா காட்டலாம்!

nathan

தினமும் இரவில் தேங்காய் எண்ணெயால் சருமத்தை மசாஜ் செய்வதால் பெறும் நன்மைகள் தெரியுமா?அப்ப இத படிங்க!

nathan

தங்கமாக ஜொலிக்க கஸ்தூரி மஞ்சள்

nathan

சுவையான மட்டன் கீமா சாக்

nathan

சர்வைவர் வெற்றியாளர் இவர் தான்! பரிசு தொகை எத்தனை கோடி தெரியுமா?

nathan

பாரதியின் மகளா இது… சமந்தாவையும் மிஞ்சிய நடிப்பு!

nathan

பாதங்கள் பளபளக்க வேண்டும் என்று செய்யும் இந்தப் பராமரிப்பு உங்கள் ஒட்டு மொத்த உடல் ஆரோக்கியத்தையும் சீராக வைத்திருக்கும்…..

nathan

உங்களுக்கு தெரியுமா தொப்புளில் எண்ணெய் தடவுவதால் ஏற்படும் பலன்கள்..!!

nathan