Image 65 1
ஆரோக்கிய உணவு

சுவையான மட்கா லஸ்ஸி ரெசிபி

கோடையில் உடலுக்கு குளிர்ச்சியை தரும் வகையில் பழங்கள் மற்றும் பானங்கள் அதிகம் கடைகளில் விற்கப்படும். அதில் ஒரு பானம் தான் லஸ்ஸி. இந்த லஸ்ஸியை பலவாறு வீட்டிலேயே செய்து சாப்பிடலாம். மேலும் அலுவலகங்களுக்கு செல்லும் போது லஸ்ஸியை கொண்டு சென்றால், உடலானது வெப்பமடையாமல் இருக்கும்.

இருப்பினும் லஸ்ஸியை மண் டம்ளரில் ஊற்றி குடித்தால், அதன் சுவையே இன்னும் அதிகமாக இருக்கும். மேலும் இந்த லஸ்ஸியில் பாதாம், ஏலக்காய் போன்றவற்றை சேர்த்து செய்வதால், இது இன்னும் ஆரோக்கியமான பானமாகவும் இருக்கும். சரி இப்போது அந்த மட்கா லஸ்ஸியை எப்படி செய்வதென்று பார்ப்போம்.

Chilled Matka Lassi Recipe

தேவையான பொருட்கள்:

தயிர் – 1 கப்

சர்க்கரை – 3 டீஸ்பூன்

ரோஸ் வாட்டர் – 2 துளிகள்

ஏலக்காய் பொடி – 1 சிட்டிகை

குங்குமப்பூ – சிறிது

ஃப்ரஷ் க்ரீம் – 1 டீஸ்பூன்

தண்ணீர் – 1/2 கப்

ஐஸ் கட்டிகள் – 3-4

செய்முறை:

முதலில் தயிரை நன்கு அடித்து, அதனை நெட்டட் துணியில் ஊற்றி வடித்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் அதில் தண்ணீர் மற்றும் ரோஸ் வாட்டர் ஊற்றி கலந்து, அத்துடன் சர்க்கரையை சேர்த்து நன்கு அடித்து, அதனை மண்ணால் செய்யப்பட்ட டம்ளரில் ஊற்றி, அதன் மேல் ஏலக்காய் பொடி, பாதாம் மற்றும் குங்குமப்பூ சேர்த்து, 10-15 நிமிடம் ஊற வைத்து, பின் பருகினால் மட்கா லஸ்ஸி ரெடி!!!

Related posts

காபிக்கு பதில் குங்குமப்பூ நீர் குடிங்க, சூப்பர் டிப்ஸ்…

nathan

உலர் ஆப்ரிகாட் பழங்களில் உள்ள சத்துக்கள்

nathan

உணவு வழக்கத்தில் மாற்றங்களை பின்பற்றுவதன் மூலம் உடல் எடையை குறைக்க முடியும்

nathan

உணவில் மட்டனை அதிகம் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!!

nathan

சப்போட்டா பழத்தில் உள்ள சத்துகள்

nathan

vitamin b foods in tamil – வைட்டமின் B-வகைகள்

nathan

அதிர்ச்சி தரும் ஆய்வின் ரிசல்ட் ! ஃப்ரூட் ஜூஸ் புற்றுநோயை உண்டாக்குமா?

nathan

ஆவாரம் பூ பொடி எப்படி சாப்பிடுவது?

nathan

வெறும் வயிற்றில் காலையில் என்ன சாப்பிடலாம்?

nathan